Sunday, March 25, 2012

அமெரிக்க மேலாதிக்கத்திற்கு சவால் விடுத்த ஜனநாயகம்!

சர்வதேச ரீதியாக தான் மட்டுமே ஹீரோவாக இருக்க நினைக்கும் அமெரிக்கா புலிகளின் அழிப்பின் பின்னர் இலங்கை அரசு மீது கொலை வெறியாகவே இருந்துள்ளது!
இலங்கைக்கு எதிராக போர்க் குற்றம் மற்றும் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுப் பிரேரணையை ஜெனீவாவில் முன்வைத்த அமெரிக்கா அதில் எதிர்பார்த்த வெற் றியைப் பெற முடியாது முதற் தடவையாக சர்வதேச அரங்கில் பாரிய தலைகுனி வைக் கண்டுள்ளது. உலக நாடுகளுக்கெல்லாம் தானே தலைவன் என்றும் எந்த நாட்டில் எது நடந்தாலும் அதனைக் கண்காணிப்பது மட்டுமல்லாது கட்டுப்படுத்தும் உரிமையும் தனக்குள்ளதாக மார்தட்டி வந்த அமெரிக்கா இலங்கை விவகாரத்தில் தோல்வியைச் சந்தித்துள்ளது.

பிரேரணைக்கு ஆதரவாக இருபத்து நான்கு நாடுகள் வாக்களித்திருந்தன எதிராக பதி னைந்து நாடுகள் வாக்களித்திருந்த நிலையில் எட்டு நாடுகள் வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை. உண்மையில் இந்த எட்டு நாடுகளும் எதிர்காலத்தில் அமெரிக்காவின் நெருக்குதல்கள் தமக்கு ஏற்படலாம் எனக் கருதியே வாக்களிப்பில் கலந்துகொள்ள வில்லை. இல்லையேல் நிச்சயம் அந்நாடுகள் அனைத்தும் இலங்கைக்குச் சார்பாக வாக் களித்திருக்கும்.

அத்துடன் அமெரிக்கா கொண்டுவந்த தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்த இருபத்து நான்கு நாடுகளில் இந்தியா உட்பட சுமார் பதினைந்து நாடுகள் அமெரிக்காவின் எதிர்ப் பைச் சம்பாதித்துக் கொள்ள விரும்பாத நிலையில் தமது நிலைமையை இலங்கைக்குத் தெளிவாக எடுத்துரைத்த பின்னரேயே தமது வாக்கை பிரேரணைக்கு ஆதரவாக வழங்கி யிருந்தன. அதில் தவறு இருப்பதாகத் தெரியவில்லை. காரணம் அவற்றில் பல நாடுகள் அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகள். சில வல்லரசுகளாக துடித்துக் கொண்டிருக்கும் நாடுகள்.

இந்நிலையில் அந்நாடுகளால் அமெரிக்காவைப் பகைத்துக் கொண்டு எதுவுமே செய்ய முடியாது. எனினும் அமெரிக்காவிற்கு பிரேரணையில் எதிர்பார்த்த வெற்றி இலக்கை அடைய முடியாதிருந்தமை பெரிய பின்னடைவே. உலக அரங்கில் மிகச் சிறிய நாடாக இருந்த போதிலும் தனது பக்கம் இத்தனை நாடுகளைக் கவர்ந்து அமெரிக்காவுக்கு எதிராகவே வாக்களிக்க வைத்த இலங்கை யைப் பாராட்ட வேண்டும்.

உண்மைக்காகக் குரல் கொடுத்து உலக அரங்கில் இலங்கைக்கு ஆதர வாகச் செயற்பட்ட நாடுகளுக்கு நன்றி கூறவேண்டும். எதிர்ப்பது அமெரி க்க வல்லரசை எனத் தெரிந்திருந்தும் எதிர்த்து வாக்களித்த நாடுகள்தான் உண்மையில் வல்லரசு நாடுகள். இந்நாடுகளின் துணிவைப் பாராட்டாம லிருக்க முடியாது.

எமது அண்டை நாடான இந்தியாவின் நிலைப்பாடு கவலையளித்தா லும் அங்கு மத்திய அரசின் ஆட்சிக்கு உள்நாட்டில் ஆட்டம் கண்டு விடும் ஒரு சூழலில் அதனைத் தவிர்ப்பதற்காக அது அமெரிக்காவை ஆதரித்து தனது இருப்புக்கு வந்த ஆபத்தைத் தவிர்த்துக் கொண்டது. இந்தியா தனது இந்த இக்கட்டான நிலை குறித்து இலங்கைக்கு மறை முகமாகப் பலவாறு தெரிவித்திருந்தது.

யுத்தம் நடைபெற்ற வடக்குஇ கிழக்கு பகுதிகளில் பல்வேறு அபிவி ருத்திப் பணிகள் இந்திய அரசினாலேயே மேற்கொள்ளப்படுகிறது. அவை யாவும் வழமைபோன்றும் உறுதியளிக்கப்பட்டது போலவும் தொடரும் எனத் தெரிவிக்கப் பட்டமையிலிருந்தே இந்தியாவின் இக்கட்டான நிலையைப் புரிந்து கொள்ளக் கூடியதாக இருந்தது.

உலக நாடுகளில் எங்காவது பயங்கரவாதம் காணப்படின் அதனைத் தனது நாட்டுப் படைகளே அழிக்க வேண்டும் என்பதில் அமெரிக்கா குறியாக உள்ளது. பிரிவினையைக் கோரும் நாடுகளிலுள்ள பயங்கரவாதிகளுக்கு தனது ஆயுதங்களை விற்பனை செய்து அடுத்த பக்கம் அவர்களை அழிப்பதற்கு அதே நாட்டு அரசாங்கத்திற்கும் ஆயுதங்களை விற்பனை செய்துவிட்டு இறுதியில் தன்னை ‘ஹீரோ’வாகக் காட்ட தனது படைகளைக் கொண்டு பயங்கரவாதிகளை அழிப்பது அமெரிக்காவின் வழமையான ‘ஸ்டைல்’.

அமெரிக்காவிற்கு இது இலங்கையில் சரிப்பட்டு வரவில்லை. முதலில் விடுதலைப் புலி களையும்இ இலங்கையையும் பெரும் பொருட்டாகக் கொள்ளாதிருந்த அமெரிக்காஇ புலிகள் முற்றாகவே அழிக்கப்பட்ட பின்னர் உலக நாடுகளில் இலங்கைக்கு எழுந்த பாராட்ட லைகளால் பொறாமை கொண்டதே உண்மை. இந்திய பிரதமர் ரஜீவ் காந்தி இலங்கை ஜனாதிபதி ஆர். பிரேமதாச உட்பட பல தலைவர்களைக் கொலை செய்துள்ளதுடன் உலகின் பல நாடுகளுக்கும் அச்சுறுத்தலாக இருந்த புலிகளை இலங்கை அரசு அழித்த மையை அமெரிக்காவால் ஏற்றுக்கொள்ள முடியாதிருந்தது.

அழிக்கும் விடயத்தில் சர்வதேச ரீதியாக தான் மட்டுமே ஹீரோவாக இருக்க நினைக் கும் அமெரிக்கா புலிகளின் அழிப்பின் பின்னர் இலங்கை அரசு மீது கொலை வெறியா கவே இருந்துள்ளது. இதற்கு இலங்கையில் தூதுவர்களாகச் செயற்பட்ட அமெரிக்கர்களும் பிரதான காரணம். இவர்கள் இங்கிருந்து கொண்டே எமது நாட்டுக்கு எதிராக செயற்பட்டு வருகின்றனர். இவர்களது அறிக்கைகள் உலக பொலிஸ்காரன் அமெரிக்காவின் இராஜாங்க திணைக்களத்தைச் சினம் கொள்ள வைத்தது

தருணம் பார்த்துப் பலமுறை பாய்ந்து பார்த்தனர். முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாஇ ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க போன்றோர் மூல மாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மக்கள் விடுதலை முன்னணி (ஜே. வி. பி) போன்ற கட்சிகள் மூலமாகவும் அரசாங்கத்திற்குத் தம்மால் முடிந்தளவும் கஷ்டங்களைக் கொடுத்தனர். ஆனால் உள்நாட்டில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கத்தை அசைக்க முடியாது என்பதைக் கண்டனர். மக்கள் அரசுடன் என்பதால் உள்நாட்டில் குழப் பத்தை ஏற்படுத்தும் முயற்சியிலிருந்து பின்வாங்கி சர்வதேசத்தில் இலங்கைக்குக் களங்க த்தை ஏற்படுத்த முனைந்தனர். அதன் விளைவே பிரேரணை.

இந்தப் பிரேரணைக்கு வலுச் சேர்ப்பதற்காகவே சனல் - 4 என்ற வீடியோ சோடிப்பும் நடைபெற்றது. வன்னி யுத்தத்திற்கு சனல் - 4 தொலைக்காட்சி இரு பாகங்களைத் தயாரி க்க முடியுமாயின் ஈராக்கில் அமெரிக்கப் படைகள் செய்த அட்டூழியங்களுக்கு நூறு பாகங்களைத் தயாரித்திருக்கலாம். லிபியா ஜெமன் சிரியா மாலைதீவு போன்ற நாடுகளில் அமெரிக்காவின் பின்னணியில் நடைபெற்ற மனித உரிமை மீறல்களை வைத்து எத்த னையோ வீடியோக்களைத் தயாரித்திருக்கலாம்.

தனது நாட்டுக்கு எதிராக எவராவது செயற்பட்டால் அவர்களை இல்லாது செய்து விடு வது அமெரிக்காவின் இராஜதந்திரம். ஆனால் ஒரு ஜனநாயக நாட்டில் அழிவுகளுக்குக் காரணமானவர்களைத் தண்டிக்க அந்தக் குறிப்பிட்ட நாட்டிற்கு உரிமை இல்லை என்ப தாகவே இந்தப் பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. பிரபாகரனைக் கொன்றது பிழையெ னில் சதாம் உசைன் பின் லாடன் கடாபி போன்றோர் கொடூரமாகக் கொலை செய்யப் பட்டமையும் தவறே. அதற்கு அமெரிக்கா மீது குற்றப் பிரேரணையைச் சமர்ப்பிக்க வேண்டும். அதன் மூலமே ஐக்கிய நாடுகள் சபையின் நேர்மைத் தன்மை புலப்படும். ஐக் கிய நாடுகள் சபையின் மனித உரிமைகளுக்காகக் குரல் கொடுப்போர் பக்கச் சார்பின்றி நடக்க வேண்டும். ஆனால் அப்படி அவர்கள் நடக்கிறார்களா என்பது சந்தேகமாகவே உள்ளது. இல்லையெனில் பிரபாகரனைப் பற்றிக் கவலைப்படும் அவர்கள் பின் லாட னைப் பற்றியோ அல்லது கேணல் கடாபி ஈராக் அதிபர் சதாம் உசைன் ஆகியோரைப் பற்றியும் கவலைப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அவர்கள் அதுபற்றி சிறிதும் அலட்டிக் கொள்ளவே இல்லையே. இதுதான் ஐக்கிய நாடுகள் சபையின் பக்கச் சார்பற்ற தன் மையா?

எது எவ்வாறிருப்பினும் ஜெனீவாவில் நிறைவேற்றப்பட்டிருக்கும் பிரேரணையில் என்ன புதிதாக உள்ளது. ஒன்றுமே இல்லை. எல். எல். ஆர். சி. எனப்படும் ஜனாதிபதி யினால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவினால் தயாரிக்கப்பட்ட கற்றறிந்த பாடங்களுக்கான ஆணைக் குழுவின் பரிந்துரை அறிக்கையை அமுல்படுத்துமாறு கோரிக்கை முன்வைக் கப்பட்டுள்ளது. இது ஜெனீவாவில் வைத்து எமக்குச் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. இதனை அமுல்படுத்துவதற்காகவே அரசு தயாரித்தது. அதனை நிச்சயம் அமுல்படுத்தும்.

ஜெனீவாவில் இலங்கை அரசிற்கு பெரும் தண்டனை கிடைக்கும் ஜனாதிபதிக்கு எதிராக குற்றம் சுமத்தப்படும் என்றெல்லாம் கனவு கண்ட வர்களுக்கு முடிவு பாரிய ஏமாற்றத்தையே தந்திருக்கும். குறிப்பாக ஐ. தே. க தமிழ்க் கூட்டமைப்பு ஜே. வி. பி. போன்ற கட்சிகளும் புலம் பெயர்ந்து வாழும் புலி ஆதரவாளர்களது அமைப்புக்களும் தமது முக ங்களை எங்கே மறைக்கப் போகின்றனவோ தெரியவில்லை. உள்நாட் டில் கடந்த ஒரு மாத காலமாக இவர்கள் நடத்திய கூத்துக்களும் விட்ட அறிக்கைகளும் கொஞ்சமா? இவற்றை வெளியிட்டு தமக்கு பிரசாரத்தை தேடிய ஊடகங்கள் இனி எப்படி மக்கள் முன்பாக தமது நம்பிக்கையை வெளிக்காட்டப் போகின்றன?

தமது தாய் நாட்டுக்கு உலக அரங்கில் திட்டமிட்டு சதிசெய்து பொய்க் குற்றச்சாட்டைச் சுமத்திய செயலுக்காக நாட்டில் மக்கள் பலர் கொதித் தெழுந்து நடத்திய ஆர்ப்பாட்டங்களும் கண்டனப் பேரணிகளும் வீண் போகவில்லை. அவர்களது தாய் மண் பற்றுக்கு நாம் தலைவணங்க வேண்டும். தாய் நாட்டுக்கு ஒரு அவமானம் என்றதும் தமது தாய்க்கு ஏற்பட்ட அவமானமாகக் கருதிச் செயற்பட்டவர்களை மறக்க முடியாது. அதேவேளை துரோகம் செய்தவர்களை மன்னிக்கவும் கூடாது.

கற்றறிந்த பாடங்கள் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள பரிந்துரைகளை அரசாங்கம் அமுல்படுத்தி அதன் மூலமாக கடந்த முப்பது வருடங்களாக யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களது வாழ்வில் ஒளியேற்ற வேண்டும். அதன் மூலமாக எமது நாட்டுக்கு எதிராகக் குரல் கொடுக்கும் குள்ள நரிகளின் ஊளையிடும் சத்தத்திற்கு முடிவு காணலாம். யுத்தப் பாதி ப்புக்குள்ளான தமிழ் மக்களும் அதனையே விரும்புகிறார்கள். அம்மக்களின் மனங்க ளைக் குழப்ப முயலும் தீயசக்திகளுக்கு இடமளிக்காது செயற்பட வேண்டியது அரசாங் கத்தின் பொறுப்பு கடமையும் ஆகும்.

0 comments:

Post a Comment

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | cheap international calls