Friday, March 30, 2012

நடைமுறை கல்வி அறிவு இல்லாத இங்கிலாந்து மாணவர்கள்

இங்கிலாந்தில் உள்ள மாணவ மாணவியர்களில் ஐந்து பேரில் ஒரு மாணவ மாணவியருக்கு நடைமுறை கல்வி அறிவு குறைந்து காணப்படுகிறது என்ற அதிர்ச்சித் தகவலை வேர்ல்டு லிட்டர்ஸி பவுண்டேசனின் தலைமை அதிகாரி வெளியிட்டுள்ளார்.
மேலும் இந்த ஆய்வில் இங்கிலாந்தில் வசிக்கும் மக்களில் எட்டு மில்லியன் மக்களுக்கு அன்றாட வாழ்வில் பயன்படுத்தப்படும் வார்த்தைகளை எழுதுவதற்கும் வாசிப்பதற்கும் சிரமப்படுவதாக தெரியவந்துள்ளது.

குறிப்பாக மருந்து பொருட்களின் பெயர்கள் மற்றும் செக் புத்தகத்தை நிரப்புவதில் சிரமப்படுவதாகவும் தெரியவந்துள்ளது.

நடைமுறை வாழ்வில் பயன்படுத்தப்படும் வார்த்தைகளை படிப்பதற்கும் வாசிப்பதற்கும் சிரமப்படும் நாடுகளின் வரிசையி்ல் இத்தாலி 47 சதவீதத்துடன் முதலிடத்தையும் அயர்லாந்து 22.6 சதவீதத்துடன் இரண்டாம் இடத்தையும் 21.8 சதவீதத்துடன் இங்கிலாந்து மூன்றாம் இடத்தையும் நான்காமிடத்தை 20 சதவீதத்துடன் அமெரிக்கா கொண்டுள்ளதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

இது மட்டுமல்லாது வாசி்ப்புதன்‌மை அடிப்படையில் இங்கிலாந்து மாணவர்கள் ஏழாம் இடத்தில் இருந்து 25-வது இடத்திற்கு பின்னோக்கி சென்றுள்ளதாக எகானமிக் கோ-ஆப‌ரேசன் டெவலப்மென்‌ட் அமைப்பு தெரிவித்துள்ளது.

0 comments:

Post a Comment

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | cheap international calls