Sunday, December 18, 2011

செத்துயிர் போயினும் தழிழுக்கு புத்துயிர் கொடுடா தழிழா..........

தாய்மொழியும் தாய் நாடும் இருவிழி என்பதை
நாய் தழிழா நீ இன்னும் அறியாதது சரியோ?
பேய் போலதனை சுமந்தாடுதல் முறையோ?
தேன் சொட்டும் தித்திக்கும் தழிழ் பெயர் பலவிருக்க
சீழ் வொட்டி சிதறுகின்ன சிறுபெயர்கள் உனக்கெதற்கு..
வாய் மணக்கும் தழிழ் மொழியில் அழகுப்பெயர் பலவிருக்க
பால்பட்ட பொருளுரைக்கும் பெயர்சூட்டும் உத்தமர்க்கு நாவெதற்கு....
தழிழ் மொழி நெடுங்கணக்கில் எழுத்தவை போதாதென்று..
உயர் திணையோடு அஃறிணைக்கும்..
இஸ் என்றும் புஸ் என்றும் காற்றுதும் உச்சரிப்பில்
என்னடா பெயர் சூட்டுகிறாய்....


தழிழ் தாய்ன்மடிபிறந்து தழிழீழ சந்ததியும்
மன மாளிகை மட்டுமன்றி நிறுவனங்களும்
அயல் நாட்டு ஆக்கிரமிப்பு உன்னால் தான் நீ உணர்வாய்..
எழிழகம் என தொடங்கி எழிலோடை எனவாகி
சுடரகம் எனத்தொடங்கி சுடர்நிலா எனவாகும்...
அழகுதழிழ் மொழியினிலே ஆயிரம் பெயரிருக்க
வடமொழி பெயர் சூட்டி ஆடுதல் சரியாமோ..?

வெள்ளயனின் வார்த்தைகளை வாய்நிறைய உச்சரித்தால்..
வெள்ளையனை வென்றதென்ற பெரு நினைப்போ உனக்கு..
தழிழ் பிள்ளை என்று பெற்ற உன்னை நாயெனவே பெற்றிருந்தால்..
கொள்ளியிலே போனபின்பும் உனக்கிருக்கும் மொழிப்பற்று....
தழிழனுக்கும் தழிழிச்சிக்கும் தப்பாமல் பிறந்தவனே
தப்புவழி பிறந்தது போல் தாய்மொழியை மறப்பதவோ....
தழிழ் குடியின் மரபறியா மடைத்தழிழா -உன்னை..
உன்னை மறத்தழிழன் என்று சொல்லல் மாபெரும் குற்றமல்லோ...

குற்றுயிராய் கிடக்கும் எம் தாய் மொழியை .......
தலை நிமிரதழிழனே....
புதிதுயிர் கொடுப்பது உன் தலையாய கடமையல்லவா....
வெற்றுயிர் சிந்தும் உன்னில் பயனென்ன
மடையனே செத்துயிர் போயினும் தழிழுக்கு 
உயிர் கொடுத்தல் உன் கடமையல்லவா

0 comments:

Post a Comment

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | cheap international calls