Friday, March 23, 2012

வெளிநாடுகளுக்குச் சென்று இந்நாட்டிற்கு எதிராக நாட்டிற்கு எதிராக கருத்துக்களை கூறும் ஊடகவியலாளர்களின் கை கால்களை உடைப்பேன் - மேர்வின் சில்வா!

வெளிநாடுகளுக்குச் சென்று இந்நாட்டிற்கு எதிராக பல்வேறு கருத்துகளை கூறும் ஊடகவியலாளர்கள் நாட்டிற்குள் கால்வைத்தால் அவர்களின் கைகால்களை தான் உடைப்பார் என பொதுமக்கள் உறவுகள் அமைச்சர் மேர்வின் சில்வா கூறியுள்ளார்.
பொத்தல ஜயந்த எனும் ஊடகவியலாளரை நான்தான் இந்நாட்டிலிருந்து விரட்டினேன். இத்தகைய ஊடகவியலாளர்கள் அனைவரும் நாட்டிற்குள் கால்பதித்தால் அவர்களின் கால் கைகளை உடைப்பேன்' என அமைச்சர் மேர்வின் சில்வா எச்சரித்தார்.

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட இலங்கைக்கு எதிரனா தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கிரிபத்கொடையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டமொன்றில் உரையாற்றும்போதே அமைச்சர் இவ்வாறு கூறினார்.

சிகிரியாவிலிருந்து சுனாமி வந்தாலும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடமிருந்து எனக்கெதிராக சுனாமி வராது. மஹிந்த ராஜபக்ஷ மாத்திரமே என்னை பதவியிலிருந்து விலக்க முடியும். வேறு எவரும் என்னில் கை வைக்க முடியாது. அது நடக்கும்வரை நான் களினிலிருந்து செல்ல மாட்டேன்.

டீ.ஏ. ராஜபக்ஷவின் புதல்வர்களை அவர்கள் சிறுபிள்ளைகளாக இருந்த காலத்திலிருந்து நான் அறிவேன். நாட்டின் மன்னரை நான் நேசிக்கின்றேன். இந்நாட்டின் மன்னர் என்னை நம்புகிறார்" என அமைச்சர் மேர்வின் சில்வா கூறினார்.

நான் இறப்பதற்கு அஞ்சவில்லை. கொழும்பிலுள்ள போதைப்பொருள் விற்பனையாளர்கள் இருவர் என்னை துரத்துவதற்கு முயற்சித்தனர. ஆனால் நான் இறப்பதற்கு அஞ்சவில்லை. எனது உயிருக்கு ஏதேனும் நடந்தாலும் எனது மனைவியும் இரு பிள்ளைகளும் அங்கேயே இருப்பர். இன்று முதல் எனது மகனை உங்களிடம் ஒப்படைக்கிறேன்' என அமைச்சர் மேர்வின் சில்வா கூறினார்.

0 comments:

Post a Comment

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | cheap international calls