Saturday, March 24, 2012

இலங்கையின் மூத்த சகோதரியான இந்தியாவுக்கு இலங்கை மீது அன்பு இல்லை - அமைச்சர் திலான் பெரேரா

இலங்கையின் மூத்த சகோதரியான இந்தியா இலங்கை மீது அன்பு இல்லை என்ற காரணத்திற்காக அமெரிக்காவுக்கு ஆதரவாக வாக்களிக்கவில்லை. தமிழ் நாட்டு மச்சானுடன் இருக்கும் திருமணம் பந்தத்தை காப்பற்றிக்கொள்ளவே ஆதரவு வழங்கியது என அமைச்சர் திலான் பெரேரா தெரிவித்துள்ளார்.
ஹாலி-எல பிரதேசத்தில் நேற்று (23) நடைபெற்ற கூட்டம் ஒன்றில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். 2009 ஆம் ஆண்டு புலிகளை தோற்கடித்த போது இந்தியா இலங்கை பெரும் உதவிகளை செய்தது. எனினும் இந்த சந்தர்ப்பத்தில் மச்சான் சின்ன சண்டையை போட்டார்.
மூத்த அக்காளின் கணவர் தானே இந்த மச்சான். தமிழ் நாட்டு மச்சான் சிறிய சண்டையை போட்டார். இந்த முறை தம்பிக்கு உதவ முடியாது. அப்படி உதவினால் நான் விவாகரத்து செய்வேன் என மச்சான் கூறினார். அவர் வெறுமனே அப்படி கூறவில்லை. இதனால் விருப்பமின்றியேனும் திருமணத்தை காப்பற்ற அக்காவுக்கு நேர்ந்ததுடன் தனது சின்னத்தம்பிக்கு எதிராக வாக்களித்தார்.

அமெரிக்காவின் சண்டித்தனத்திற்கு அஞ்சி அக்கா தனது சின்னத்தம்பிக்கு எதிராக வாக்களிக்கவில்லை. மூத்த அக்கா தனது திருமணத்தை காப்பற்றிக்கொள்ளவே ஆதரவு வழங்கினார். இதனால் அடுத்த முறை அமெரிக்கா சண்டித்தனம் செய்யும் போது மூத்த அக்கா தம்பியின் பக்கம் இருப்பார். தனது திருமண பந்தத்தை பாதுகாத்து கொள்வதற்காகவே அக்கா இம்முறை தம்பியின் பக்கம் இருக்கவில்லை எனவும் அமைச்சர் திலான் பெரேரா தெரிவித்துள்ளா

0 comments:

Post a Comment

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | cheap international calls