Tuesday, February 21, 2012

காதல் முக்கியமா? உறவு முக்கியமா?

பள்ளிக்கு செல்லும் சின்ன ஞ் சிறு பெண் பிள்ளைகளுக்கு புரியாத விடயம் தான் காதல் அறியாத வயதில் ஒருவர் மீது வரும் ஈர்ப்பின் பிரகாரம் வரும் இனம் புரியாத காதல் படிப்பையையும் உறவுகளையும் பற்றி சிந்திக்க விடுவதில்லை
 ஒரு சில காலங்களே அறிமுகமான ஒருவரை பற்றி முற்றாக தெரிந்து கொள்ளாமல்  வருகின்ற காதல்  பின்னர் அவர்களின் வாழ்ககையை சிக்லுக்க உளளாக்குகின்றது. இது தொடர்பாக யார் சொன்னாலும் காதல் வந்த பின் யாரும் கேட்டுக்கொள்வதில்லை.
 பெற்றோர்கள் படிப்பதற்காய் பள்ளிக்கு அனுப்புகின்ற போது அவர்கள் கௌரவத்திற்கு பங்கம் ஏற்படுத்துவதாக இந்த காதல் அமைகின்றது. பெண்களுக்கு சுதந்திரம் இல்லை என்று  சொல்லி சொல்லி சுதந்திரத்தை கொடுத்தால் இன்ற சுதந்திரத்தை சரியாக பயன்படுத்தாமல் காதல் என்ற பெயரில் மீண்டும் சிறை வாசம் செல்கின்றனர். காதலித்தால் அமைதியாக இருப்பதில்லை. ஒழுங்காக படிப்பதில்லை. இதனால் எதிர்காலம் கேள்விக்குறியாவது மட்டுமன்றி அவமானமும் ஏற்படுகின்றது.
காதலித்து ஊரை சுற்றித்திரிந்து வகுப்புக்களுக்கு செல்லாமல்  காதலித்தவர்களுக்காக எல்லாம் செய்கிறார்கள் அவர்களை இவ்வளவு காலம் வளர்த்த பெற்றோர்களை நினைத்து பார்ப்தில்லை காதல் வந்தா எதுவும் கண்ணுக்கு தெரியாது என்டு சொல்றாங்க அது உன்மை போல இருக்கு பெற்றேறார்கள் சொல்லும் அறிவுரைகளை அப்படியே கேட்காவிட்டாலும் அவர்கள் சொல்வதை மட்டும் கொஞ்சம் சிந்தித்துத்துப் பாருங்கள். 
உங்களுடைய வாழ்க்கை ஒரு சதுரங்கப்புள்ளிமாதிரி நீங்கள் தெரியாமல் செய்யும் தவறு எதிர்காலத்தின் விளைவுகளையும் கொஞ்சம் சிந்தித்துப்பாருங்கள். 

 அடுத்தடுத்து நடக்கும் எதிர் விளைவுகளையும் சிந்தித்துப்பாருங்கள். 
ஆண்களை நம்பி  சென்று மீண்டு் தாய் தந்தை கால்களில் விழுவது தான் இன்று நடைபெறுகின்றது. 
இது தேவை தானா உங்களுக்கு ஒரு தகுதியை வளர்த்துக்கொள்ளுங்கள் சொந்த காலில் நிற்க வேண்டும் அதற்க அப்புறம் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்யுங்கள்
பெற்றோர்களை ஏமாற்றி சென்று மீண்டும் திரும்பி வரும்   போது  பெற்றோர்களின் மன வேதனைதான் அதிகரிக்கும். 
அதனை விட இன்று பெற்றோர்கள் தம் பிள்ளைகளின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுக்காது வரதட்சனை கொடுகாமல் வெளிநாட்டு மாப்பிளை பற்றி அறியாமல் தம் பிள்ளைகளின் வாழ்க்கையை சீரழிக்ககின்றனர் .
எது எவ்வாறாயினும் படித்த இலங்கையர்கள் நாங்கள் டிங்களுடைய வாழ்க்கை பற்றி நாம் பின்விளைவுகளையும் சிந்தித்து செய்ற்பட்டால் வெல்ல முடியும்.

1 comments:

Anonymous said...

முதலீடு இல்லாமல் உங்களாலும் இணயத்தில் சம்பாரிக்க முடியும். இந்த தளம் கடந்த 4 வருடங்களாக மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இது 100 சதவீதம் உண்மை. பணம் பெற்றதற்க்கான Proof உள்ளது.

http://withoutinvestmentonlineworks.blogspot.in/2012/02/clixsense-advertising-that-pays-you.html

Post a Comment

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | cheap international calls