Monday, February 6, 2012

நினைவுகளை மீட்டுத் தந்த யூனியனின் பள்ளிக்கால நினைவுகள்

பள்ளிக்கால நினைவுகள் என்றும் எல்லோர் மனதிலும் துள்ளிக் குதிக்கும் கனாக்கானும் காலங்கள். இன்று பள்ளிச் சிறுவர்களை பார்க்கும் போது எம் பாடசாலை நினைவுகளுக்கு சென்று வருவது சந்தோஷத்தை ஏற்படுத்தும். தினம் தினம் புதிய அனுபவங்ககள் இன்று நாம் திரும்பிச் செல்ல முடியாத அற்புத நாட்கள். என் பள்ளிக்கால நினைவுகள் இன்று உங்கள் பள்ளிக்கால நினைவுகளுக்கு உங்களை அழைத்து செல்லும் என நினைக்கின்றேன்.
 ஆம் இன்று தான் எம் பாடசாலையின் வருடாந்த இல்ல மெய்வல்லனர் போட்டிக்கான தெரிவுக்கூட்டம். என்னங்க எந்தப் பாடசாலை என்று சொல்லலை என்று நினைக்கிறீங்க.

ஆங்கிலேயர்களால் கட்டப்பட்டபாடசாலைதான் யாழ்ப்பானம் தெல்லிப்பளை யூனியன் கல்லூரி தாங்க எங்கள் பாடசாலை. 1816ம் ஆண்டு கட்டப்பட்டது. 1990ம் ஆண்டு ஈழப்போரில் போது இடம்பெயர்ந்து 2001ம் அண்டு தான் மீண்டும் சொந்த இடம் சென்றது. அன்றிலிரந்து  2010 ம் ஆண்டு வரை நாங்க தான் தனிக்காட்ட ராஜா.


நான் தரம் ஆறு தொடக்கம் உயர்தரம் வரை இங்கதான் படித்தேன். நான் படிக்கும் காலம் வரை மக்கள் குடியேற அனுமதிக்கப்படவில்லை. உயர் பாதுகாப்பு வலயமாக காணப்பட்டது. இங்க ராணுவத்தினரும் பாடசாலை சமுகத்தினரும் மட்டும் தெல்லிப்பளைக்கு சொந்தக்காரர்கள்.
நாம சொல்ல வந்ததுக்க போவோமா.


அன்று தான் விளையாட்டுத்துறையின் இல்ல தலைவர்களை தெரிவு செய்யும் நாள். யார் தெரிவு செய்யப்படப் போகிறார்கள் , யார் தலமை என்று எல்லோர் எதிர்பார்ப்பிற்கு மத்தியில் தொலையில் இருந்த ஒர குரல் அபி அபி என்ற என் பெயரை உச்சரித்தது. அப்புறம் என்ன பிச்ச எல்லாரும் கோரஸ் பாட ஆரம்பித்தார்கள். எனக்கோ கோபம் வந்திச்சு. சொன்னவனை ஏறி மிதிக்க வேண்டும் போலிருந்தது.  நான் இந்த காலத்தில் சுதந்திரமாய் சுற்றித்திரிய நினைத்திருந்தேன். ஆனால் பதவியை தந்து கட்டிப்போட்டு விட்டார்கள்.  இந்த காலங்களில் அடுத்த இல்லத்தில் கூத்தடிச்சுத்தாங்க பழக்கம் இந்த முறை அது முடியாது.  ஆனாலும் என் இல்லத்திற்கு தலமை தாங்க போகின்றோம் என்று சந்தோஷமாய் இருந்தது.


சரி தலமை பதவி வந்திடிச்சு என் கடமையை செய்யும் நேரம் ஆரம்பம். பயிற்சிகள் தொடங்கின.
 அடி குத்து வெருட்டல் என அணியினரை ஒழுங்குபடுத்தினேன். போலிஸை கண்ட திருடன் ஓடி ஒழிவதை போல மாணவர்கள் என்னை கண்டு ஓழித்த நேரங்களில் துரத்திப்பிடிப்பதே என வேலை. அதை விட முக்கியமாக எனக்கு இன்னொரு வேலையும் இருந்தது. எதிரணியின் செயற்பாடுகளை உளவுத்துறை மூலம் அறிவதே.???????? அதற்கு லஞ்சமாக அந்த குரங்குக்கு ரோல் வாங்கிக் கொடுக்கனும். அப்ப தான் அவ சொல்லுவா... அதன் பிறகு தான் என் செயற்பாடுகள் ஆரம்பித்தன அதில முதல் என் அணியிலிருந்து தகவல் வெளிய போகாத படி பலப்படுத்தினேன்.

பயிற்சிகள் முடிந்தன போட்டிகள் ஆரம்பித்தன. அப்ப தான் எல்லேலார்க்கும் ஒரு நிம்மதிப் பெருமூச்சு. இனி படிப்பு நடக்காது எல்லோரும் ground ல தான் நிற்போம்.


முதலில் நெடும்தூர ஓட்டங்கள். ஓடும் வீரர்களுக்கு முதலிலே என் முன்னறிவிப்பு.


ஏய் எவனாவது ஓடும் போது மயங்கி விழுந்தா கொன்னுடுவன். இடையில வெளிய வரக்கூடாது. கடைசியா வந்தாலும் பறவாயில்லை ஆனா ஓடி முடிக்கனும். வேள்விக்கு நேர்ந்து விட்ட ஆடுகளை போல தலையாட்டின. ஆனாலும் எனக்கோ சந்தேகம். ஓடாமல் வெளியில் வந்து விடுவார்களோ என்டு தான். 25 rouund ஓட வேண்டும் அல்லவா பாவம் தான் இன் அணி நன்பர்களை மைதான இடையில் நிறுத்தினேன். தண்ணீர் கேட்டா குடுங்க எவனாவது வெளிய வந்தா உள்ள தள்ளிவிடுங்க என்று அவர்களுக்கு சொன்னேன்.  பறவாயில்லை வெற்றியோடதான் வந்தினம் .

எதிர் அணி வீரர்களும் சளைத்தவர்கள் அல்ல போட்டிக்கு போட்டி நிகராகவே நின்றது. நான்கு இல்லங்களில் யாருக்கு கிண்ணம். எல்லோரும் வேகத்துடன் செயற்பட்டனர். டிக்சனுக்கும் துரைரட்னம் தான் போட்டி என்ன என்று புரியலையா இது தாங்க எங்க house  தாங்க டிக்சன் . இவளவு பிரச்சினைக்கு மத்தியிலும் வாயை வைத்துக் கொண்டு சும்மா தான் இருக்க முடியுமா? கின்னம் எங்களுக்கு தான் இல்லன்ன இரண்டாயிரம் ஓகே வா? சரி பார்க்கலாம் என்ற தாங்களும் துரைரட்னமும் களத்தில் கின்னத்துக்காய் அடிபட ஆரம்பித்தோம்.


 போட்டிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தோம். எல்லா பாடசாலையிலும் மைதானத்துக்குள் இறங்கமாட்டேன் என்ற ஒரு கூட்டம் இருந்துகிட்டே இருக்கும் அப்படி என் house  லயும் இருந்திச்சு ஆனாலும் நான் விடுவனா? நீ ஓடுறாயா இல்லையா என்றது முக்கியம் இல்ல ஆனா மைதானத்தில இறங்கனும் என்று சொல்லிட்டன். கெஞ்சினாலும் மிஞ்சினாலும் என்னால் இறங்கமுடியாத என்றது ஒரு வால் இல்லா குரங்கு. இதை கேட்டு என் கை பேசியது ...... அதிபரிடம் இருந்து ஒரு அழைப்பு எனக்கு புரிஞ்சிடிச்சு இன்னைக்கு சங்கு தான் அங்க அடிச்சதுக்கு இங்க இப்ப விழப்போகுது என்று புரிஞ்சுது. நானும் போனேன் விழுகிறது எல்லாம் விழுந்திச்சு அடி விழுந்தாலும் பறவாயில்லங்க ஆனா காதால இரத்தம் தான் வந்திச்சு.  இனி என்ன நடந்தாலும் பறவாயில்லை  இனிமே என் house  விசயத்தில் தலையிடுவதில்லை என்று முடிவெடுத்தேன் ...... வெளிய வந்ததும் மைதானத்தை பார்த்தேன் எதிரணியையும் பார்த்தேன் பழைய படி வேதாளம் முருங்க மரம் ஏறிடிச்சு ..... எனக்குள் இருந்த வெறி அதிகமாயிடிச்சு  விளையாட விரும்பாதவர்களுக்கு பதிலாக ஆர்வமுள்ள வீரர்களை களமிறக்க முடிவு செய்தேன்.


இனி குறுக்கு வழி தாங்க ஆனா என்ன தான் பன்றத ஜெயிக்கனும் சவால் இரண்ரை தவிர வேறு ஒரு நினைவும் இல்லை. யார் கண்டு பிடிக்கிறது விதிகளை மீறி ஜெயித்தோம். போட்டியின் இறுதிநாள். அப்ப கூட எதிரணி 50 புள்ளிகள் முன்நிலையில் இருந்தது. அப்ப கூட ஒரு நம்பிக்கை எப்படியும் பிடித்து விடுவோம் என்று. அதன் பிறகு என்ன.... ஓடும் வீரர்களை பார்த்து நக்கல் அடித்தோம். அன்று  இல்ல பொறுப்பை மறந்து குரங்கு குணம் வந்திடிச்சு. எங்க அணி வீரர் ஓடினா கத்துவோம். ஆனா எதிரனி ஓடினா குழந்தை தவளுது குழந்தையை தூக்குங்கடா என ஆரம்பித்தது எம் சேட்டைகள் ஏய் ஓடுறியா உருளுறியா  வாடா வாடா கண்ணா என்று கூறினோம் அப்ப கூட எங்க நக்கல் பேச்சு மட்டும் தான் மிச்சமிருந்தது. ஒன்னுமே இல்லங்க புள்ளி ஏறுது இறங்குது. என்ன பன்றது என்று புரியல.


இறுதி நிகழ்வு கயிறிழுத்தல் ஆரம்பமாக இரந்தது. இதில தான் நாம ஜெயிக்கிறதே அடங்கியிருந்தது. இதி ல எமக்கு நிறைய நம்பிக்கை இருந்திச்சு. ஜெயிப்போம் என்று. எங்க ஆண்கள் team ஜெயிப்பாங்க என்று தெரியும் ஆனா எங்க சைட் புள்ள பூச்சிங்க.  எதிரனி இறங்கட்டும் என்று காத்திருந்தோம் எதிரணி பெண்கள் யானை குட்டிங்க பாத்ததும் நடுக்கம் ஆரம்பிச்சுது.
அணியின் கொடியோடு மைதானத்துக்குள் இறங்கினோம். எப்பிடியும் கையோட போகப் போகின்றோம் என்ற பயம் என் தலமை அணிக்கு இருந்திச்சு. தலய வரட்டாம் நாணய சுளர்ச்சி அழைப்பு வந்திச்சு .   பூ விழுந்தா என்ன தலை விழுந்தா என்ன என்று கூறியபடி சென்றேன். நாணய சுளர்ச்சியில் நாங்க தான் வென்றோம் . சகல மாணவர்களும் மைதானத்தில் இறங்க ஆரம்பித்தனர். எனது அணிக்கான ஆதரவுகளே அதிகம் காணப்பட்டன. டிக்சன் ககோன் கமோன் என்று ஆதரவு அலைகள் எமக்கான ஒலித்தன இது எங்களுக்கு பெரும் பலமாக இருந்தது. விசல் ஊதியதும. கயிறை இழுக்க ஆரம்பித்தோம் கயிறு அசயவே இல்ல நாங்களும் முழு பலத்தையும் பிரயோகித்தோம்  ஒரு வழியாக கயிறு நம் பக்கம் வந்தது. ஆதரவாளர்கள் நம் பக்கம் வந்தனர். எங்களால் சந்தோசத்தை கொண்டாட  முடியவில்லை. மூச்சு வாங்கியது. அடுத்த சுற்றுக்கு கைகள் செத்து விட்டன ஆதரவாளர்கள்  மைதானத்தில் புகுந்தனர். கொஞசம் கூடenjoy  பண்னியிருக்க மாட்டார்கள்.  உடனே தடியையும் கொண்டு ஒரு கூட்டம்  வந்திச்சு. வெட்டி பசங்க கயிறுக்கு வெளிய போங்க என்ற படி.

 சரி நாங்க விசயத்துக்கு வாறம். கை எல்லாம் கயிறு வெட்டி அடையாளம் மூச்சு வாங்கியது.  ஆனாலும் பலவீனம் வெளிய தெரிய கூடாத பாருங்க. விழுந்தாலும் மீசையில மண் ஒட்டுவதில்ல எங்களுக்கு. கம்பீரமாய் ஓடித்திரிந்தோம். இரண்டாம் சுற்றுக்க விசில் ஊதியது. கயிறு நோக்கி போனோம். எதிரனி சோர்வடைந்து விட்டது என்று முகத்தில் தெரிந்தது. இதில நாங்க ஜெயிக்கனும். விட்டா மூன்றாம் சுற்று சரி என்று இறங்கினோம்.  விசில்  ஊதியதும் ஓரே இழுவையாய் இழுக்க ஆரம்பித்தோம். கயிறு அசையாது நின்றது. எதிரணி சோர்வடைந் து தானாகவே கயிற்றை விட்டது.  வெற்றியின் ஆரவாரம். இல்ல கொடியுடன்மைதானம் வலம் வர ஆரம்பித்தோம். ......


போட்டிகள் முடிவடைந்து வெற்றி கேடயம் வழங்கப்பட்டது. இறுதி  முடிவிற்காய் காத்திருந்தோம் ஏறு வரிசைப்படி புள்ளிகளை அறிவித்தனர்.  ம்ம்ம் என்ன சொல்லதென்னே தெரியலங்க இரண்டே இரண்டு புள்ளி வித்தியாசங்க தோத்திட்டமல்ல ....... அவனும் வந்தான் இரண்டாயிரத்தை எடு என்றான்.யார் கிட்ட சிங்கம் சிங்கம் தான்  யார் கிட்ட வாலாட்டிறாய்....... நான் சொன்னதங்க எனக்கே திருப்பி சொல்றான்.. எல்லாம் நேரம் தான்...  உடனேயே நாங்கள் மாத்திட்டோம் ஊழல் பண்ணிதான் ஜெயித்தீங்க  அரசியல் வாதி புத்தி அப்பிடியே இருக்கு



கொஞ்சநேர வெற்றிக்களிப்பின் பின்னர் ஒன்று கூடியது எம் நட்பின் கரங்கள். இது தான் எங்களுக்கு  இறுதி விளையாட்டுப் போட்டி  இனிமேல் நாங்க நினைச்சாலும் இப்படி ஒரு விளையாட்டுப் போட்டி கிடையாது. நாம பார்க்கதான் முடியும்  அதன் பிறகு group photo  அதிலையும் காதலர்கள் group photo  விலையும் சோடி பிரியல பிடிச்சவங்க பிடிச்சவங்க கூடphoto எடுத்துக்கிட்டாங்க.......ok ஆறு மணியாகிடிச்சு எல்லோரும் போகலாம் வாங்க நாளைக்கு கட்டாயம் வா  ok good night   சொல்லி பிரிந்தோம்.


இதெல்லாம் ஏன் இப்படி சொல்றேன் என்று நினைக்கிறீங்களா ? என் பாடசாலை இல்ல விளையாட்டு போட்டி என்று சொன்னாங்க உடனேயே எங்கட ஞாபகம் தான் வந்திச்சு என் அனுபவத்தை பார்க்கும் போது உங்களுக்கும் நினைவு வரும் சிரிப்பீங்க......... பாடசாலை நாட்களை நினைத்துப் பார்க்க தான் முடியும்......  சரிங்க  இன்னோரு நாள் வருவேன் உங்கள் நினைவுகளை தூண்டி விட..........

0 comments:

Post a Comment

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | cheap international calls