Friday, February 3, 2012

மூழ்கிய டைட்டானிக் கப்பலில் கண்டெடுக்கப்பட்ட வயலின்

கடந்த 1997ம் ஆண்டு வெளிவந்து உலகம் முழுவதும் சூப்பர் ஹிட்டாக ஓடிய படம் டைட்டானிக். உலக புகழ் பெற்ற இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் லியனார்டோ டிகாப்ரியோ, கேத் வின்ஸ்லெட் உள்பட பலரும் நடித்த படம். இதில் ஒரு காட்சியில் கப்பல் உடைய தொடங்கிய பிறகு பயணிகள் பீதியுடன் இங்கும் அங்கும் ஓடுவார்கள். உயிர் பிழைப்பதற்காக மீட்பு படகுகளில் ஏறுவார்கள். அப்போதுகூட கப்பலின் பேண்ட் வாத்திய குழுவினர் பதற்றப்படாமல் வயலின் வாசிப்பார்கள்.

கப்பல் மூழ்கும் வரை அவர்களது இசை தொடரும். இது வெறும் காட்சி மட்டுமல்ல உண்மையான நிகழ்வு ஆகும். பேண்ட் வாத்திய கலைஞர்கள் 8 பேர் கடைசி வரை இசைக் கருவிகள் வாசித்ததாக அப்போது பத்திரிகைகளில் செய்திகள் வெளியானது. அப்போது மூழ்கிய வயலின் தற்போது கிடைத்திருக்கிறது.

அட்லான்டிக் கடலில், டைட்டானிக் கப்பல் மூழ்கி 100 ஆண்டுகள் ஆகின்றன. இதையொட்டி சமீபத்தில் டைட்டானிக் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. கடந்த 1912-ம் ஆண்டு ஏப்ரல் 10-ம் திகதி இங்கிலாந்தின் சவுதாம்டன் பகுதியில் இருந்து டைட்டானிக் சொகுசு கப்பல் நியூயார்க் புறப்பட்டது.
உலகிலேயே மிக பிரமாண்டமான முதல் சொகுசு கப்பலான டைட்டானிக், தனது முதல் பயணத்திலேயே வடக்கு அட்லான்டிக் கடலில் மிகப்பெரிய பனிப்பாறையில் 15-ம் திகதி மோதி விபத்துக்குள்ளானது. கப்பலில் பயணம் செய்த 2,223 பேரில் 1517 பேர் உயிரிழந்தனர். இது உலக வரலாற்றிலேயே மிகப்பெரிய கப்பல் விபத்தாக இன்றளவும் உள்ளது.

0 comments:

Post a Comment

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | cheap international calls