Sunday, April 1, 2012

சீனாவில் புரட்சி பீதி: இணைய தளங்கள் மூடப்பட்டது

லிபியா எகிப்து சிரியா உள்ளிட்ட நாடுகளில் சர்வாதிகாரிகளின் அடக்கு முறையால் மக்கள் புரட்சி ஏற்பட்டது. அதை தொடர்ந்து கடுமையான சட்டதிட்டங்கள் கொண்ட சீனாவிலும் புரட்சி ஏற்படலாம் என்ற அச்சம் கம்யூனிஸ்டு ஆட்சியாளர்களிடம் ஏற்பட்டது. அவர்கள் எதிர்பார்த்த படியே அரசுக்கு எதிராக ஆங்காங்கே மக்கள் பிரசாரம் தொடங்கியது.
லிபியா எகிப்து சிரியா ஆகிய நாடுகளில் இணைய தளங்களின் மூலம் கருத்துக் களை பரிமாறி அதன் மூலம் மக்கள் ஒன்று திரண்டனர். அதேபோல் சீனாவிலும் தொடங்கியது.
அதை அறிந்த அரசு தீவிர நடவடிக்கை மேற்கொண்டு புரட்சி அலையை தொடக்கத்திலேயே அடக்கியது. இருந்தாலும் அது முழுமையாக அடங்கவில்லை. நிரூபூத்த நெருப்பாக உள்ளது. இந்த நிலையில் சீனாவில் மீண்டும் இணைய தளங்கள் மூலம் புரட்சி தீயை உண்டாக்க சிலர் தொடர்ந்து முயன்று வருகின்றனர்.

இதனால் சீனாவில் புரட்சி பீதி பரவியுள்ளது. இதை தொடர்ந்து இணையதளங் கள் கண்காணிக்கப்பட்டன. அதை தொடர்ந்து புரட்சியை விதைக்க கூடிய 2 லட்சத்து 8 ஆயிரம் செய்திகள் பரப்பப்பட்டு இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. அதை தொடர்ந்து கடந்த பிப்ரவரி மாதம் வரை 1065 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் 16 இணைய தளங்கள் மூடப்பட்டன. தற்போது மேலும் சினா.காம் டென்சென்ட் என்ற 2 இணைய தளங்கள் மூடப்பட்டுள்ளன. இதில் புரட்சி சம்பந்தமான செய்திகளை பரப்பியதாக 6 பேர் கைது செய்யப்பட்டனர்

0 comments:

Post a Comment

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | cheap international calls