Wednesday, April 4, 2012

டைனசோர்கள் நீரில் வாழ்ந்த உயிரினம்: ஆய்வாளர்கள் கருத்து

டைனசோர்கள் பற்றிய ஆய்வு மேற்கொள்ளும் விஞ்ஞானி பிரையன் ஜே போர்டு. சிறந்த பேராசிரியராகவும் விளங்கி வரும் இவர் பி.பி.சி. ரேடியோ நிகழ்ச்சி ஒன்றில் பேசும்போது டைனசோர்கள் குறித்து தனது கருத்தை குறிப்பிட்டார்.
அவர் கூறுகையில் மிக பெரிய உருவம் கொண்ட நீண்ட வாலை உடைய டைனசோர்கள் பாலைவனங்களில் சுற்றி திரிந்து அதன் இரையை தேடுவது என்பது அதற்கு சிரமம் தருவதாகும்.
இது சாத்தியமற்றது. அதன் வால் நீரில் நீந்துவதற்கும் மிதந்தபடியே செல்வதற்கும் ஏற்ற வகையில் உள்ளது. மேலும் நீந்துவதற்கு அது உறுதுணை புரிகிறது என கூறினார்.

மேலும் நீரில் இருக்கும்பொழுது அதன் எடை முழுவதும் நீரால் தாங்கப்படுகிறது. இரையை பிடிப்பதற்கும் எளிதாகிறது. எனவே அது நீரில் வாழ்ந்திருக்க வேண்டும் என்று கூறினார். எனினும் அவரது இந்த கருத்து 100 வருடங்களுக்கு முன்பு அறிவியலாளர் ஒருவர் கூறிய கருத்தை ஒத்துள்ளதாக நிபுணர்களால் கூறப்படுகிறது.

0 comments:

Post a Comment

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | cheap international calls