Tuesday, April 3, 2012

மன அழுத்தத்திற்கு ஆளாக்கும் தனிமை

குடும்ப அங்கத்தவர்களுடன் இல்லாது தனியாக வாழ்பவர்கள் ஏனையவர்களை விடவும் 80 வீதம் அதிகமாக மன அழுத்தத்திற்கு உள்ளாவதாக ஆய்வுகள் குறிப்பிடுகின்றன.
தனியாக வசிக்கும் தொழில்செய்யும் ஆண்களும் பெண்களும் சம அளவில் பாதிக்கப்படுவது கண்டறியப்பட்டுள்ளது. பெண்கள் போதியளவு வீடமைப்பு வசதிகள் இல்லாதமையினாலும் ஆண்கள் சமூக ரீதியிலான ஒத்துழைப்பு இல்லாமையினாலும் பாதிக்கப்படுவதாக அந்த ஆய்வில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
தனியாக வசிக்கும் நபர்கள் தமது பிரச்சினைகள் தொடர்பில் கருத்து வெளியிடுவதற்கு சந்தர்ப்பங்கள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட வேண்டுமென சுகாதார ஸ்தாபனமொன்று வலியுறுத்தியுள்ளது.
அமெரிக்கா பிரித்தானியா போன்ற நாடுகளில் தற்போதைய காலகட்டத்தில்இ மூவரில் ஒருவர் தனியாக வசிப்பதாக ஆய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தனியாக வசிப்பதனால் வாழ்க்கை முறை சமூக ஒத்துழைப்பு கல்வி வருமானம் தொழில்வாய்ப்பு முறை வீடமைப்பு வசதிகள் புகைத்தல் பழக்கம் மதுபாவனை என்பவற்றில் மாற்றங்கள் ஏற்படுவது கண்டறியப்பட்டுள்ளது. இவ்வாறானவர்கள் மன ரீதியில் பல்வேறு துன்பங்களுக்கு இலக்காவதாகவும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளதாக தகவல்கள் குறிப்பிடுகின்றன.

0 comments:

Post a Comment

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | cheap international calls