Tuesday, April 3, 2012

மக்களுக்கு உதவி புரிவதில் கனேடியர்கள் முதலிடம்

பெரும் விபத்துக்கள் இயற்கை பேரிடர்கள் ஏற்படும் போது மக்களுக்கு உதவி புரிவதில் கனேடியர்கள் முதலிடம் வகிக்கின்றனர்.
கப்பல் கவிழ்தல் தீ விபத்து நிலக்கரிச் சுரங்கத்தில் விபத்து மற்றும் புயல் வெள்ளம் சூழ்ந்த காலங்களில் கூட கனடா மக்கள் நிதானம் தவறுவதில்லை.
கடந்த 1912ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 15ம் நாள் டைட்டானிக் என்ற சொகுசுக் கப்பல் கடலில் மூழ்கிய போது அதில் பயணம் செய்த 2200 பேரில் 1500 பேர் உயிரிழந்தனர்.

இறந்தவர்களின் உடலையும் உடற்பாகங்களையும் தேடி எடுக்க இம்மக்கள் இரவும் பகலும் அலைகடலில் அரும்பாடுபட்டனர். இறந்தவர்களின் உறவினர்களுக்கு பொறுமையோடு ஆறுதல் கூறினர்.

வுவையniஉ யுளாநள என்ற புத்தகத்தை எழுதிய பால் பட்லர் ஹேலிஃபாக்ஸ் நகரத்து மக்களின் அருந்தொண்டை வியந்து போற்றியுள்ளார். இரக்க குணமும் தாராள மனப்பான்மையும் அங்கு வாழும் மக்களிடம் காணப்பட்டதாகக் கூறுகிறார்.

ஹேல்பேக்ஸ் நகரத்து மக்கள் விபத்துகள் ஏற்படும் போது பாதிக்கப்பட்டவர்களுக்கு மிகுந்த மன உறுதியுடனும் இரக்க உணர்வுடனும் உதவிகளைச் செய்வதில் வல்லவர்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

0 comments:

Post a Comment

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | cheap international calls