Thursday, April 5, 2012

பிரிட்டிஷ் தூதரகத்தை நோக்கி அர்ஜெண்டினாவில் பேரணி

பிரிட்டிஷார் வசம் உள்ள ஃபாக்லாந்து தீவைத் திருப்பித் தரவேண்டுமென்று கோஷமிட்ட படி அர்ஜெண்டினா தலைநகரான புயுனாஸ் ஏர்ஸில் உள்ள பிரிட்டிஷ் தூதரகத்தை நோக்கி 2000 பேர் ஊர்வலமாகச் சென்றனர்.
இந்த நாட்டிலுள்ள கியுபிராக்கோ என்ற வன்முறை இயக்கம் அண்மைக்காலமாக பிரிட்டனுக்கு எதிராகப் போர்க்கொடி உயர்த்தியுள்ளது.
இந்த இடதுசாரி அமைப்பு இதற்கு முன்பு ர்ளுடீஊ மற்றும் கிளாக்சோ ஸ்மித்க்ளைன் போன்ற பிரிட்டன் நிறுவனங்களை அடித்து நொறுக்கியது.


இந்தத் தாக்குதலை காவல்துறையினர் ஒடுக்கிவிட்டனர். 2000 பேர் நடத்திய ஊர்வலத்தில் ஒரு 200 பேர் மட்டும் தனியே பிரிந்து கலவரத்தில் ஈடுபட்டனர்.

பிரிட்டிஷாரை தங்கள் தீவைத் திருடிய கடற்கொள்ளைக்காரர்கள் என்று கலவரத்தில் ஈடுபட்ட போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில் நேற்று ஃபாக்லாந்தை பிரிட்டிஷார் கைப்பற்றிய முப்பதாவது நினைவுகள் என்பதால் இந்தப் போராட்டத்தை அர்ஜெண்டினாவின் கியுபிராக்கோ இயக்கத்தினர் நடத்தினர்.

இந்தப் போராட்டத்தினர் பிரிட்டிஷ் தூதரகம் முன்பு வன்முறையில் ஈடுபடுவதற்குச் சில மணிநேரத்திற்கு முன்னால் ஜனாதிபதி கிறிஸ்டினா கிர்க்னெர் உஷுவாயியாவில் நடந்த கூட்டம் ஒன்றில் பிரிட்டிஷாரின் “காலனியாதிக்கம்” குறித்து கண்டனம் தெரிவித்தார்.

போராட்டக்காரர்கள் தூதரகத்தின் மீது மோலோதோவ் குண்டுகளையும் கற்களையும் வீசினர். தடுத்த காவல்துறையினர் மீது மிளகுத்தூளைத் தூவினர். ஆனால் காவலர்கள் தூதரகத்துக்குச் சற்று தொலைவிலேயே கம்பித்தடுப்பு அமைத்திருந்தனர்.

இதனால் அவெனிடா பியுரெடோன் என்ற இந்த முக்கியத்தெருவில் அரைமணி நேரமாகப் போக்குவரத்து தடைசெய்யப்பட்டது. பொதுமக்கள் எவரையும் காவல்துறையினர் அனுமதிக்கவில்லை.

காவல் துறையினர் பிரிட்டிஷ் தூதரகம் அமைந்திருந்த ரெசோலெட்டா பகுதிக்குள் எவரும் வராமல் இருப்பதற்காக கண்ணீர்புகை குண்டுகளை கூட்டத்தை நோக்கி வீசினர்.

ரப்பர் குண்டுகளை எய்தனர். தண்ணீரைப் பீய்ச்சியடித்து கூட்டத்தைக் கலைக்க முயன்றனர். போராட்டக்காரர்களும் சுவர்களில் கேமரூனைப் பற்றி கேவலமாகக் கிறுக்கி வைத்தனர்.

இந்தப் போராட்டம் ஃபாக்லாந்துக்காக அர்ஜெண்டினா மக்கள் நடத்தும் மூன்றாவது போராட்டமாகும்.

பெப்ரவரி மாதம் சிலர் பிரிட்டனின் “யூனியன் ஜேக்” கொடியை எரித்து தங்களின் வெறுப்பை பகிரங்கப்படுத்தினர். சில வாரங்கள் கழித்து சுமார் நூறு பேர் ஊர்வலமாகப் புறப்பட்டுப் போய் தூதரகம் முன்பு நின்று கோஷம் போட்டனர். பிரிட்டிஷாரின் நிறுவனங்களுக்குச் சேதம் விளைவித்தனர்

0 comments:

Post a Comment

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | cheap international calls