Wednesday, April 4, 2012

வானில் ஒரு நெருப்புப் பொழிவு

ஈக்குவேடாரில் 90 ஆண்டுகளுக்கு ஒருமுறை எரிமலை வெடிக்கிறது. அப்போது வானம் நெருப்பை கக்குவது போன்று இருக்கும்.
கடந்தாண்டு இந்த எரிமலை வெடித்த போது சிவந்த காற்று மேகம் போல அந்த இடத்தைச் சூழ்ந்து கொண்டது.
இந்த மலை உச்சியினைக் கடந்த 2006ம் ஆண்டில் டேஷ்லெர் என்ற புகைப்பட கலைஞர் படம்பிடித்து இணையத்தளத்தில் வெளியிட்டார்.
டேஷலர் வெளியிட்ட அந்தப் படத்தில் பாறை உருகி மலையின் பக்கங்களில் வடிந்து வருவது தென்படுகிறது. அதன் இடதுபுறம் ஒரு கார்மேகம் தவழ்வதும் புலப்படுகிறது.


இந்த மலை 5000 மீற்றர் உயரமுடையது. அங்கிருந்து சிவந்த நெருப்பு உருகி வருகிறது. மேலும் இந்தப் படத்தில் நட்சத்திரங்கள் மின்னுகின்ற அழகான வானமும் காணப்படுகிறது.

இந்த எரிமலையின் அருகே பானோஸ் என்ற நகரம் உள்ளது. எரிமலை வெடிக்கும் சமயத்தில் இவர்கள் அந்த ஊரை விட்டு வெளியேறிவிடுவர்.

0 comments:

Post a Comment

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | cheap international calls