Thursday, April 5, 2012

கனடாவில் பனி குறைவடைந்து வருகின்றது.

உறைபனி மற்றும் பனிப்பொழிவுக்கான நாடு என்று பெயர் பெற்றிருந்த கனடாவில் பனிபடர்ந்த நிலப்பரப்பின் அளவு குறைந்து கொண்டே வருகிறது என கனடாவின் புள்ளியியல் துறை தெரிவித்துள்ளது.
1972ம் ஆண்டு முதல் 2010ம் ஆண்டு வரையிலான அறிக்கையில் தற்போது பனி 5.1 சதவீதம் குறைந்தது தெரியவந்துள்ளது.
கடந்த 39 ஆண்டுகளில் 1998ம் ஆண்டில் ஐந்து மில்லியன் சதுர கிலோ மீற்றர் அளவிற்கு உறைபனி காணப்பட்டது. அதன்பின்பு கடந்த 2010ம் ஆண்டில் 5.5 மில்லியன் சதுர கிலோமீற்றர் அளவு பனி படர்ந்திருந்தது.


1972ம் ஆண்டிலும் 1978ம் ஆண்டிலும் அதிகபட்சமாக 6 மில்லியன் சதுர கிலோமீற்றர் அளவில் உறைபனி காணப்பட்டது. இந்த அளவு கனடாவின் மொத்த நிலப்பரப்பில் 62 சதவீதம் ஆகும்.

அக்டோபர்இ நவம்பர் மாதங்களில் பனிப் பொழிவினால் தரையெல்லாம் உறைபனியால் மூட ஆரம்பிக்கும். ஏப்ரல் மே யூன் மாதங்களில் உறைந்த பனி உருகத் தொடங்கும் பனிப்பொழிவும் நின்றுவிடும்.

அறிக்கையின் தகவல்படி சராசரியாக யூனில் 34 சதவீதமும் மே மாதத்தில் 13 சதவீதமும்இ ஏப்ரலில் 7 சதவீதமும் என பனி அளவு குறைந்திக்கிறது. குளிர்காலம் இப்போது மிதமான குளிருடன் கதகதப்பாக இருந்ததை மக்கள் மகிழ்ச்சியோடு அனுபவித்தனர்.

மணிடோமாவிலும் மத்திய மற்றும் கிழக்கு கனடாவிலும் மார்ச் மாதம் வெயிலடிக்கத் தொடங்கியதால் வெப்பநிலை 20 டிகிரிக்கும் அதிகமாகவே இருந்தது.

இந்த வெப்ப மிகுதிக்கு முக்கிய காரணம் அமெரிக்காவிலிருந்து வடக்கு நோக்கி வீசும் வெப்பக்காற்றே ஆகும்.

0 comments:

Post a Comment

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | cheap international calls