Wednesday, March 7, 2012

ஆப்கானிஸ்தானில் பயங்கர பனிச்சரிவில் புதைந்து 42 பேர் பரிதாப பலி!

ஆப்கானிஸ்தானில் உறைய வைக்கும் கடும்குளிர் காரணமாக பல பகுதிகளில் பனி படர்ந்து கிடக்கிறது. அங்குள்ள படக்ஷன் மாநிலம் பனியால் அதிகம் பாதிப்புக்கு உள்ளாகியிருக்கிறது. அம் மாநிலத்தின் மலைப்பாங்கான ஷேகாய் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் நேற்று கடுமையான பனிச்சரிவு ஏற்பட்டது. அந்த கிராமத்தில் 300 பேர் வசிக்கின்றனர். அதில் பெரும்பாலானோர் பனியில் புதைந்து விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பனிச்சரிவு குறித்து தகவல் அறிந்ததும் மீட்பு குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.

சாலைகளில் பனி மண்டிக் கிடப்பதால் மீட்பு பணிகளில் சிரமம் ஏற்பட்டுள்ளது. பக்கத்து கிராமங்களை சேர்ந்த மக்கள் உதவியுடன் பனியில் புதைந்த 42 பேர் சடலத்தை மீட்புக் குழுவினர் இதுவரை மீட்டுள்ளதாக தெரிகிறது. இவர்களில் பெண்களும் குழந்தைகளும் அடங்குவர். 6 பேர் காயங்களோடு மீட்கப்பட்டனர். மேலும் பலர் சிக்கி இருப்பதால் பலி எண்ணிக்கை உயரக் கூடும் என அஞ்சப்படுகிறது. மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

ஆப்கானிஸ்தானில் ஒவ்வொரு குளிர்காலத்தின் போதும் பனிச்சரிவு பனிப்பொழிவு காரணமாக நூற்றுக்கணக்கான பேர் இறக்கின்றனர். ஆயிரக்கணக்கில் வீடுகள் சேதமடைகின்றன. படக்ஷன் மாநிலத்தில் இந்தாண்டு மட்டும் 80 பேர் பனிச்சரிவால் உயிரிழந்துள்ளனர்.

0 comments:

Post a Comment

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | cheap international calls