Sunday, March 4, 2012

3 வீரர்களுடன் விண்வெளிக்கு ராக்கெட் சீனா மும்முரம்!

விண்வெளி ஆராய்ச்சிக்காக அமெரிக்கா ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் சேர்ந்து சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தை அமைத்துள்ளன. பூமியில் இருந்து சுமார் 350 கி.மீ. உயரத்தில் சுற்றியபடி இந்த மையம் ஆய்வு பணிகளை மேற்கொண்டு வருகின்றன.  இதுபோல தனியாக ‘டியாங்காக்’ என்ற ஆய்வு மையத்தை விண்வெளியில் 2020ம் ஆண்டுக்குள் அமைக்க சீனா திட்டமிட்டுள்ளது. இதன் ஒரு கட்டமாக டியாங்காங்1 என்ற சோதனை விண்கலத்தை கடந்த செப்டம்பரில் விண்ணுக்கு அனுப்பியது. லாங்மார்ச்2எப் ராக்கெட் மூலம் இந்த விண்கலம் அனுப்பப்பட்டது.
இதற்கிடையில் வரும் ஆகஸ்ட்டுக்குள் ஷென்ஷூ9 என்ற விண்கலத்தை விண்ணுக்கு அனுப்புகிறது சீனா. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன. இதில் 3 வீரர்கள் செல்கின்றனர். தற்போது டியாங்காங்1 விண்கலம் தற்காலிக விண்வெளி ஆய்வு மையமாக செயல்பட்டு வருகிறது. அதை ஷென்ஷூ விண்கலம் சென்றடைகிறது. வீரர்கள் பாதுகாப்பாக செல்லும் வகையில் லாங்மார்ச்2எப் ராக்கெட்டில் கூடுதல் வசதிகள் செய்யப்பட்டுள்ளதாக சீன விண்வெளி ஆய்வு அக;டமி துணை தலைவர் லியாங் தெரிவித்தார்.

0 comments:

Post a Comment

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | cheap international calls