Monday, March 5, 2012

அவுஸ்திரேலியாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள அரியவகை இளஞ்சிவப்பு வைரம்

உலகிலேயே மிகவும் அரியவகையில் காணப்படும் இளஞ்சிவப்பு நிறத்திலான வைரத்தினை அவுஸ்திரேலி யாவில் கண்டு பிடிக்கப்பட்டது.
அவுஸ்திரேலி யாவில் ரியோ டியட் நிறுவனம் ஆர்க்கிள் சுரங்கத்தில் வைரங்கள் தேடும் பணியில் 26 ஆண்டுகளாக ஈடுபட்டு வருகிறது. இந்நிறுவனம் இதுவரை கண்டிராத வகையில் 12.76 காரட் இளஞ்சிவப்பு வைரத்தை கண்டுபிடித்தது.

இதுகுறித்து ரியோ டியரட் நிறுவனம் கூறிகையில் பொதுவாக இளஞ்சிவப்பு வைரம் கிடைப்பது மிகவும் அரிதானது என்றும் இதன் விலை 20 ஆண்டுகளில் பன்மடங்கு உயர்வதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் இவ்வைரத்தினைப் பளபளப்பாக்கி வடிவமைத்தபின் இதன் மதிப்பு சர்வதேச நிபுணர்களால் நிர்ணயிக்கப்படும். பின்னர் ஆண்டு இறுதியில் ஏலம் மூலம் விண்ணப்பங்கள் பெறப்பட்டு விற்கப்படும்.

அரிய வகை வைரமான இதன் ஒரு காரட் 4.9 கோடி(இந்திய ரூபாய்) வரைக்கும் அல்லது மொத்தமும் குறைந்தது 49 கோடிக்கு விற்பனையாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

0 comments:

Post a Comment

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | cheap international calls