Thursday, March 15, 2012

ஈராக்கில் ஜீன்ஸ் டி சர்ட் அணிந்த 14 இளைஞர்கள் கல்லால் அடித்துக்கொலை!

ஈராக்கில் மேற்கத்திய முறைப்படி இறுக்கமான ஜீன்ஸ் டி சர்ட் அணிந்து நீளமான முடி வைத்திருந்த 14 இளைஞர்களை ஷியா தீவிரவாதிகள் கல்லால் அடித்துக் கொன்றுள்ளனர். ஈராக்கில் இருந்து அமெரிக்க ராணுவம் வெளியேறியதில் இருந்து அங்கு தீவிரவாதிகள் அட்டூழியம் செய்து வருகின்றனர். அவர்கள் தங்கள் இஷ்டம் போல் பொதுமக்களை தாக்கியும் கொன்றும் வருகின்றனர்.
இந்நிலையில் எமோ என்ற மேற்கத்திய ஸ்டைல் ஈராக் இளைஞர்களை கவர்ந்து வருகிறது. எமோ என்பது அமெரிக்காவில் உருவாக்கப்பட்ட ஒருவகை இசை. அந்த இசை ரசிகர்கள் இறுக்கமான ஜீன்ஸ் லோகோவுள்ள டி சர்ட் அணிவதோடு நீளமான தலைமுடி அல்லது முள் மாதிரியான முடி வைத்திருப்பார்கள்.

இந்த கலாச்சாரம் ஷியா தீவிரவாதிகளுக்கு பிடிக்கவில்லை. இதையடுத்து இளைஞர்கள் யாரும் அந்த கலாச்சாரத்தை பின்பற்றக்கூடாது என்று எச்சரிக்கை விடுத்திருந்தனர். அதையும் மீறி இறுக்கமான ஜீன்ஸ் லோகோவுள்ள டி சர்ட் அணிந்து நீளமான தலைமுடி வைத்திருந்த 14 இளைஞர்களை ஷியா தீவிரவாதிகள் கல்லால் அடித்தே கொன்றுள்ளனர். அவர்களில் 9 பேர் சதார் நகரிலும் 3 பேர் கிழக்கு பாக்தாத்திலும் 2 பேர் மத்தியமார்க் பகுதியிலும் வைத்து கொல்லப்பட்டுள்ளனர்.

மேலும் எச்சரிக்கும் விதமாக 2 பெண்கள் உள்பட 6 பேரைத் தாக்கியுள்ளனர். அவர்கள் பலத்த காயத்துடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேற்கத்திய ஆடைகள் அணிபவர்கள் முதலில் எச்சரிக்கப்படுகின்றனர். அதன் பிறகு அவர்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டு பொது இடங்களில் ஒட்டப்படுகின்றது. அப்படியும் தொடர்ந்து நவநாகரீக ஆடைகள் அணிந்தால் அவர்களை கல்லால் அடித்து கொலை செய்கின்றனர். 3 வாரங்களில் 14 பேர் கொல்லப்பட்டும் இதுவரை யார் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

1 comments:

எஸ்.மதி said...

ஷப்பா இப்பவே கண்னை கட்டுதே..

Post a Comment

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | cheap international calls