Tuesday, March 13, 2012

உப்பினால் ஓவியம் வரைந்து கின்னஸ் முயற்சி

கின்னஸ் சாதனைக்காக கல்லூரி மாணவர்கள் 4 மணி நேரத்தில் 600 ச.மீற்றரில் ஓவியம் வரைந்துள்ளனர். 7 ஆயிரத்து 50 கிலோ உப்பு மற்றும் 405 கிலோ கலர் பவுடரை பயன்படுத்தி ஓவியம் வரையப்பட்டுள்ளது.
இந்தியாவில் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அடுத்த இடையர் நத்தம் ஏ.ஆர்.ஜே கல்வி நிறுவனங்களின் சார்பில் நேற்று முதல் வரும் 15ம் திகதி வரை 13 வகையான கின்னஸ் சாதனைகள் செய்யும் முயற்சியை மேற்கொண்டுவருகிறது.

இதன் ஒரு பகுதியாக பள்ளி வளாகத்தில் ஏ.ஆர்.ஜே பொறியியல் கல்லூரி பாலிடெக்னிக் பள்ளி மாணவ மாணவிகள் ஆசிரியர்கள் 3 ஆயிரத்து 366 பேர் ஓவியம் வரைந்தனர். 600 சதுர மீட்டரில் 7 ஆயிரத்து 50 கிலோ உப்பு மற்றும் 405 கிலோ கலர்பவுடரை பயன்படுத்தி வரையப்பட்டுள்ளது.

அதில் எதிர்காலத்திற்கு தண்ணீரை சேமிப்போம் என எழுதி 2 கைகள் நீர்த்துளியை பிடிப்பது போல் வரைந்துள்ளனர். இதை காலை 8 மணிக்கு துவங்கி மதியம் 12 மணிக்கு முடித்தனர்.

கல்லூரி மேலாளர் சிவன்ராஜ் கூறுகையில் 4 மணி நேரத்திலேயே இந்த ஓவியத்தை வரைந்து முடித்துள்ளோம். ஒவ்வொரு அரை மணி நேரமும் இணையதளத்தின் மூலமாக போட்டோ மற்றும் வீடியோ பதிவுகள் கின்னஸ் உலக சாதனை புத்தக நிர்வாகம் லிம்கா சாதனை புத்தக நிர்வாகம் உள்ளிட்ட 9 உலக சாதனை புத்தக நிர்வாகத்திற்கு அனுப்பியுள்ளோம் என்றார்.

0 comments:

Post a Comment

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | cheap international calls