Wednesday, March 14, 2012

201 பேரை படுகொலை செய்த படைவீரருக்கு 6060 ஆண்டுகள் சிறை!

கவுதமாலா நாட்டில் 1980களில் ஆயுதபுரட்சி ஏற்பட்டதால் அதை கட்டுப்படுத்த அந் தநாட்டுப் படைகள் குவிக்கப்பட்டன. 1982 டிசம்பரில் லாஸ் தோஸ் எரஸ் என்ற கிராமத்தில் ஆயுதங்களை தேடி 20 வீரர்கள் நுழைந்தனர். கண்ணில் பட்ட ஆண்களை சுட்டுத் தள்ளியும் சுத்தியலால் அடித்தும் கொன்றனர். பிணங்களை 50 அடி ஆழ கிணற்றில் தள்ளினர். பிறந்த குழந்தைகள் முதியோரையும் கொன்று கிணற்றில் வீசினர். பெண்களை கொல்வதற்கு முன் பலாத்காரம் செய்தனர். 201 பேரை கொன்று குவித்ததாக ராணுவம் மீது குற்றம்சாட்டப்பட்டது. அதுதொடர்பான வழக்கு கவுதமாலா நீதிமன்றத்தில் நடந்து வந்தது. குற்றத்தில் தொடர்புடைய கௌதமாலா இராணுவத்தின் சிறப்புப்படைப் படைப்பிரிவைச் சேர்ந்த பெட்ரோ பிரமென்டல் ரியோஸ் (இப்போது வயது 54) அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலம் லாஸ் ஏஞ்சல்சில் வசித்து வந்தார்.

கடந்த ஆண்டு இறுதியில் விசாரணைக்காக அவர் கவுதமாலா கொண்டு வரப்பட்டார். வழக்கு விசாரணை முடிந்து நேற்று தீர்ப்பு வெளியானது. ஈவு இரக்கமின்றி 201 பேரை கொன்று குவித்த குற்றம் நிரூபிக்கப்பட்டதால் ஒரு கொலைக்கு 30 ஆண்டு என்ற கணக்கிலும் மனித குலத்துக்கு எதிரான குற்றத்துக்காக 30 ஆண்டுகளும் சேர்த்து பெட்ரோவுக்கு 6060 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படுவதாக நீதிபதி அறிவித்தார்.

எனினும்இ இது அடையாள தண்டனை விதிப்பு என்பதால் அதிகபட்ச சிறை தண்டனையான 50 ஆண்டுகளுக்கு பெட்ரோ சிறையில் இருப்பார்.

0 comments:

Post a Comment

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | cheap international calls