Sunday, April 15, 2012

டைட்டானிக் கப்பல் மூழ்கியதை நேரில் பார்த்தவரின் கடிதம் கண்டுபிடிப்பு

ஜுரிச் நகரத்தைச் சேர்ந்த ஆண்டோன் கிங்க் இவர் மூன்றாம் வகுப்புப் பயணியாக டைட்டானிக் கப்பலில் பயணம் செய்தவர்.
டைட்டானிக் கப்பல் மூழ்கிக் கொண்டிருப்பதை அறியாத இவர் தன் அறையை விட்டு வெளியே வந்து பார்த்துள்ளார். அப்பொழுது பலரும் பெரிய பெரிய ஐஸ் கட்டிகளை கொண்டு கால்பந்தாட்டம் விளையாடிக் கொண்டிருந்தனர்.
விசாரித்ததில் இவர்கள் பயணிக்கும் டைட்டானிக் கப்பல் மீது பனிப் பாறை மோதிய தகவல் கிடைத்தது. அந்தப் பாறையின் துகள்களைக் கொண்டு தான் கால்பந்து விளையாடியதும் கிங்கிற்கு தெரியவந்தது.

பலரும் கிங்கிடம் டைட்டானிக் மூழ்கவே மூழ்காது என்று திட்டவட்டமாகக் கூறினர். இச்சம்பவம் நடந்தது (14.4.1912) நூறாண்டுகளில். கிங்க் தன் மனைவி மற்றும் நான்கு வயது மகனுடன் இந்தக் கப்பலில் பயணம் செய்தார். கப்பல் மூழ்கினாலும் இம்மூவரும் பிழைத்துவிட்டனர். பின்பு இவர் தான் பயணச் சீட்டு வாங்கிய முகமைக்கு 20 பக்கக் கடிதம் ஒன்றை எழுதினார்.

கிங்கின் கடிதத்தை அண்மையில்தான் சுவிஸ் டைட்டானிக் நிபுணர் கூண்டெர் பாப்லெர் கண்டுபிடித்துள்ளார். அந்தக் கடிதத்தின் சில பகுதிகள் சுவிஸ் செய்தித்தாள் ஒன்றில் வெளிவந்துள்ளன.

கிங்க் தான் எழுதிய கடிதத்தில் தனக்கு இழப்பீடு கிடைக்குமா என்று கேட்டிருக்கிறார். டைட்டானிக்கை அனுப்பிய ஒயிட் ஸ்டார் லைன் நிறுவனம் பயணச்சுமை காப்பீடு வழங்குமா என்றும் இறந்து போன தன் சகோதர சகோதரியின் சட்ட வாரிச்சுரிமை பற்றியும் கேட்டு எழுதியிருக்கிறார்.

இவருடைய கேள்விகளுக்குப் பதில் கிடைத்ததா இல்லையா என்பது தெரியவில்லை மேலும் இது போன்று எத்தனைக் கடிதங்கள் கண்டிறியப்படாமல் இருக்கின்றன என்பதும் கேள்விக் குறியாக உள்ளன.

0 comments:

Post a Comment

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | cheap international calls