Wednesday, April 18, 2012

கொட்டும் பனியால் ஏற்பட்ட கொடூரங்கள்

சுவிட்சர்லாந்தில் முன்பு இல்லாத அளவிற்கு போன ஆண்டு குளிரும் பனியும் அதிகமாக இருந்தது. பனிச்சரிவால் பலர் உயிரிழந்தனர். டேவோஸில் உள்ள பனி மற்றும் பனிச் சரிவு ஆய்வு நிறுவனம் செவ்வாயன்று ஓர் ஆய்வு அறிக்கையை வெளியிட்டது.
இதில் 2012 ஏப்ரல் 15க்குள் பனிச்சரிவால் 26 பேர் இறந்துள்ளனர். சராசரியாக ஒரு ஆண்டிற்கு 25 பேர் உயிரிழப்பதுண்டு. இந்த எண்ணிக்கை வெளிவந்த அன்றே மேலும் இருவர் பனிச்சரிவில் பலியாயினர்.
பேசெல் நாட்டைச் சேர்ந்த ஐவர் குழு உச்சிப் பனிச்சறுக்கு விளையாட்டில் ஈடுபட்டபோது ஒருவர் உயிரிழந்தார் இன்னொருவர் காயமடைந்தார்.

மற்றொரு சம்பவத்தில் ஒரு டச்சுக்காரர் வலாய்ஸ் மாநிலத்தில் உச்சிப் பனிச்சறுக்கு விளையாடிய போது பனிச்சரிவில் சிக்கிக் கொண்டார். அவர் நண்பர் எச்சரிக்கை மணியை ஒலித்து பனிமூடிய உடலை மீட்டெடுத்தார்.

இந்தப் பனிக்காலம் ஏற்ற இறக்கத்துடன் இருந்ததாக ஆய்வறிக்கை தெரிவிக்கின்றது. 1953 முதல் டிசம்பர் மாதத் தொடக்கம் வரை பனி குறைவாக இருக்கும். டிசம்பர் ஜனவரி மாதங்களில் பனிப்பொழிவு அதிகரிக்கும். பாதி இடங்களுக்கும் மேலாக இந்தப் பனிப்பொழிவு இந்த ஆண்டு 23 மடங்கு அதிகரித்தது வலாய்ஸ் மாநிலத்தில் சமேதனிலும் பனிப்பொழிவு சாதனையை ஏற்படுத்தியது.

அறுபதாண்டுக்கு முன்பிலிருந்து பனிபடர்ந்த உயரத்தை அளந்து வருகின்றனர். இந்த ஆண்டு டேவோஸில் உள்ள வீஸ் ஃபளுஜோக் என்ற இடத்தில் 270 செ. மீட்டர் உயரத்திற்கு பனி படர்ந்திருந்தது. 1951 இல் படர்ந்த பனியைக் காட்டிலும் தற்போது 20 செ.மீ அதிக உயரத்திற்கு பனி பொழிந்துள்ளது.

மிகப்பெரிய மலைக்கணவாய்கள் எல்லாம் பனிச்சரிவு ஆபத்து காரணமாக மூடப்பட்டுவிட்டன. இந்த ஆண்டில் மே மாதக் கணவாய்கள் மூடப்பட்டிருக்கும் சென்ற ஆண்டு இதை விடச் சீக்கிரமாக திறந்து விடப்பட்டது.

தூய கோத்தார்டு கனவாய் மே 23ம் நாள் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. போன வருடம் ஏப்ரல் கடைசியிலேயே இந்தக் கனவாய் திறக்கப்பட்டது. பெர்ன் மற்றும் ஊரிக்கு இடையில் உள்ள சூஸ்டென் கனவாய் ஜுன் 22 வரை மூடப்பட்டிருக்கும். சென்ற ஆண்டு இந்தக்கணவாய் மே கடைசி வரை மட்டுமே மூடப்பட்டிருந்தது.

ஊரி மாநிலத்தில் உள்ள ஆண்டர்மட் மற்றும் கிராவு பூண்டென் மாநிலத்தில் உள்ள சேட்ரூனை இணைக்கும் ஓபர் ஆல்ப் மலைக்கணவாய் தான் சீக்கிரமாகத்த திறக்கப்படுகிறது.

 ஃபுலூயெலா ஸ்புலூன் மற்றும் ஸான் பெர்னாடினோ போன்றவை மே மாதத் தொடக்கத்தில் மக்களின் போக்குவரத்துக்குத் திறந்துவிடப் படலாம். இந்தக் கணவாய்களும் கிராவு பூண்டென் மாநிலத்தில் காணப்படுகின்றன.

0 comments:

Post a Comment

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | cheap international calls