Friday, April 20, 2012

ஜேர்மனியில் கார் ஓட்டுவதற்கு உரிமம் பெறும் வயதை 16ஆக அறிவிக்க முடிவு

ஜேர்மனியில் கார் ஓட்டுவதற்கு உரிமம் பெறும் வயதை 16ஆக அறிவிக்க அரசு திட்டமிட்டுள்ளது. மேலும் பல்வேறு புதிய விதிமுறைகளும் அறிமுகமாக உள்ளது.
தற்போதைய சட்டப்படி ஜேர்மனியில் 17 வயதினர் பெற்றோர்களின் மேற்பார்வையுடன் கார் ஓட்டலாம்.
நுகர்வோர் பாதுகாப்பு அமைச்சகத்தின் நாடாளுமன்ற அரசுச் செயலரான பீட்டர் பிளெசர் கார் ஓட்டுவதற்கு உரிமம் பெறும் வயதை 18ஆக அறிவிப்பதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனால் குறிப்பாக கிராமப்புறங்களில் வசிக்கும் இளைஞர்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாவர் என்றார்.

இவர் ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில் தொழிற் பயிற்சிக்கு செல்லும் கிராமப்புற இளைஞர்கள் பெரும் அவதிக்கு உள்ளாகுகின்றனர் இவர்களை 16 வயதிலேயே கார் ஓட்ட அனுமதித்தால் கிராமங்களில் தங்குவதையும் விரும்புவர். இவர்கள் கார் ஓட்டுவதற்கு பெற்றோரின் அனுமதியையும் பெறும் படி வலியுறுத்த வேண்டும் என்றார்.

ஜேர்மனியின் விபத்துக் காப்பீடு ஆய்வுக் குழு 16 வயதினர் கார் ஓட்டுவதால் விபத்துகள் அதிகரிக்கும் என்ற கருதுகிறது. வயதான நபர்களை விட 18 முதல் 24 வயதினர் அதிகமாக விபத்துகளில் சிக்குகின்றனர் என்பதால் இக்குழு 16 வயதில் கார் ஓட்ட அனுமதி வழங்குவது ஆபத்தை ஏற்படுத்தும் என்றும் கண்டனம் தெரிவிக்கின்றது.

0 comments:

Post a Comment

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | cheap international calls