Wednesday, April 18, 2012

காந்தி ரத்தம் படிந்த புல் ரூ.8 லட்சத்துக்கு ஏலம்: கண்ணாடி ரூ.28 லட்சத்துக்கு ஏலம் போனது

லண்டனை சேர்ந்த பிரபல ஏல நிறுவனமான முல்லாக் மகாத்மா காந்தி பயன்படுத்திய பொருட்களை ஏலம் விடப்போவதாக அறிவிப்பு வெளியிட்டது. இந்த ஏலத்துக்கு பல்வேறு தரப்பிலிருந்து எதிர்ப்பு கிளம்பியது. ஆனால் அதையும் மீறி காந்தி பயன்படுத்திய பொருட்கள் ஏலத்தில் விடப்பட்டன.
இந்த ஏலத்தின்போது காந்தியின் ரத்தம் படிந்த புல் மண் ஆகியவை ரூ.8.2 லட்சத்துக்கு ஏலம் போனது. இந்த ரத்தம் படிந்த புல் 1948-ம் ஆண்டில் காந்தி சுட்டுக்கொல்லப்பட்ட போது அந்த இடத்தில் இருந்து சேகரிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ரத்தம் தோய்ந்த புல்லும் மண்ணும் கண்ணாடியால் ஆன மேல்புறத்தை கொண்ட ஒரு பெட்டியில் வைக்கப்பட்டிருந்தன. அவற்றின் உண்மை தன்மையை உறுதி செய்வதற்கான கடிதமும் அதில் வைக்கப்பட்டிருந்தது.

இதேபோல காந்தி பயன்படுத்திய கண்ணாடி ராட்டை போன்றவை எதிர்பார்த்ததை விட 2 மடங்கு தொகைக்கு ஏலம் கேட்டகப்பட்டன. கண்ணாடி ரூ.28 லட்சத்துக்கும் ராட்டை ரூ.21 லட்சத்துக்கும் ஏலம் விடப்பட்டன. ஏலம் விடப்பட்ட கண்ணாடி 1890-ம் ஆண்டு கால கட்டத்தில் காந்தி லண்டனில் வாங்கியதாகும். காந்தி எழுதிய கடிதங்கள் ஆன்மீக தகவல்கள் அடங்கிய பழங்கால இசைத்தட்டு மற்றும் ஆவணங்கள் போன்றவையும் ஏலம் விடப்பட்டன. 

0 comments:

Post a Comment

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | cheap international calls