Monday, January 2, 2012

துரோகியாக கணிக்கப்பட்ட அக்பர்

  
ஹிஜ்ரி ஏழாம் நூற்றாண்டில் தார்த்தாரியப் பெரு வெள்ளம் இந்திய பாக்கிஸ்தான துணைக் கண்டத்தைத் தவிர உள்ள ஏனைய அனைத்து இஸ்லாமிய உலகத்தையும் நாசப்படுத்தியது. இந்த நாட்டிலிருந்த சுகபோகவாசிகள் மற்ற நாட்டிலுள்ள சுகபோகவாசிகளைப் போல இந்த எச்சரிக்கையை ஒரு பொருட்டாகவே எடுக்காமல் தங்களின் தீயவர்களிலேயே நிலைத்திருந்தனர். குராஸான் மற்றும் ஈராக் ஆகிய நாடுகளின் அரசர்களின் கட்டுப்பாடற்ற அதிகார பிரயோகம்ää ஆட்சியாளர்களால் நடத்தப்பட்ட ஆடம்பர வரம்பு மீறிய வாழ்க்கைகள் சட்ட விரோத முறையில் செல்வத்தை பதுக்கி வைத்து அவைகளை நீதியற்ற முறையில் செலவளித்தல் கொடுங்கோன்மை மற்றும் நிர்ப்பந்த ஆட்சிää இறைவனை மறுத்தல் மேலும் சத்திய வாழ்வை விட்டு விடல் போன்ற பலவீனங்களும் ஒழுக்கக் கேடுகளும் எங்கும் காணப்பட்டன. மார்க்கக் கண்ணோட்டத்தில் வரம்பு மீறலாக உள்ள இந்த அனைத்தும் அக்பரின் காலத்தில் அதனுடைய உச்ச நிலையை அடைந்தது. அப்போது வீழ்ச்சி அதனுடைய இறுதி எல்லையை தொட்டது.
இஸ்லாமிய கலாச்சாரம் அரேபிய நாடோடிகளின் மத்தியில் பிறந்தது. ஆகவே அது பண்பாடும் சிறப்பம்சமிக்க சமூகத்தின் தேவைகளுக்கு பொருந்தி வராது என்ற நினைப்பே இஸ்லாத்தைப் பற்றி அக்பரின் அவையில் பொதுவாக நிலவியது. நபித்துவம்ää வஹீää மறுமையில் எழுப்பப்படுதல்ää சுவர்க்கம்-நரகம் ஆகியன அனைத்தும் கேலிக்குள்ளாக்கப்பட்டு தாக்கப்பட்டன. திருக்குர்ஆன் இறைவாக்கு என்பதும் வஹீ வருவதற்கான சாத்தியக் கூறுகளும் சந்தேகிக்கப்பட்டது. மரணத்திற்கு பிறகுள்ள தண்டனை-வெகுமதி ஆகியவைகள் சந்தேகத்திற்கிடமானதாக கருதப்பட்டது. நபி (ஸல்) அவர்களின் மிஃராஜ் பயணம் நடக்க சாத்தியமில்லாதது என்று வெளிப்படையாகவே பேசப்பட்டது. நபி (ஸல்) அவர்களே மிகவும் சாதாரணமாகää குறிப்பாக அவர்களின் பலதாரமணம் மற்றும் அவர்கள் நடத்திய புனித போர்கள் பற்றி விமர்சனத்திற்கு உள்ளாக்கப்பட்டு விட்டார்கள். அது எந்த அளவிற்கேன்றால் அஹ்மத் முஹம்மத் என்ற பெயர்களே வேறுக்கப்பட்டு அவைகளை உபயோகிப்பது நிறுத்தப்பட்டது மாத்திரமல்லாமல் இந்த வார்த்தைகளை கொண்ட பெயர்கள் மாற்றப்படவும் ஆரம்பிக்கப்பட்டது. உலகத்தையே குறிக்கோளாக கோண்ட உலமாக்கள் தங்களின் சொற்பொழிவுகள் மற்றும் எழுத்துக்கள் ஆகியவற்றில் நபி (ஸல்) அவர்களின் மேல் ஸலவாத்துச் சொல்வதையும் அவர்களை கண்ணியப்படுத்தும் வார்த்தைகளை உபயோகிப்பதையும் தவிர்த்து விட்டனர். நபி (ஸல்) அவர்களை தஜ்ஜாலின் சில அடையாளங்களோடு ஒப்பிட்டு பேசுமளவிற்கு அவர்களில் சிலர் துஇருhகிகளாக மாறி விட்டனர். (நாம் அல்லாஹ்வின் அருளையும் அவனுடைய மன்னிப்பையும் தேடுகிறோம்). அரசரின் அரண்மனையின் சுற்றுப்புறத்தில் கூட தொழுவதற்கு எவரும் தைரியம் பெறவில்லை. அக்பரின் நம்பிக்கைகுரிய அவையினரில் ஒருவரான அபுல் பஸல் இதூழுகைää நோன்புää ஹஜ் மற்றும் இவை போன்ற இஸ்லாமிய கட்டளைகளுக்கு எதிராக தரக்குறைவான கருத்துக்களை வெளியிட்டார். கவிஞர்கள் தங்களின் கவிதையால் இந்த கட்டளைகளை எள்ளி நகையாடினர். அவர்களின் கீழ்த்தரமான கவி வரிகள் சாதாரண பொது மக்களையும் எட்டியது.அக்பரின் காலத்தில்தான் முதன்முதலாக ''பஹாய்"" கொள்கையைப் பற்றி பேச்சு ஆரம்பிக்கப்பட்டது. நபி (ஸல்) அவர்களின் பணி காலம் முதல் இது வரை இஸ்லாத்திற்குக் கொடுக்கப்பட்ட ஆயிர வருட கெடு முடிந்து விட்டதால் அந்த மார்க்கத்தின் பயன்பாடு முடிந்துää தானாகவே இதுவையற்ற நிலைக்கு ஆகி விட்டது. ஆகவே அது புதிய கொள்கைகளால் மாற்றப்பட வேண்டும் என்பஇது அக்கொள்கையாகும். அந்த காலத்தில் மிகவும் சக்தி வாய்ந்த பிரச்சார சாதனமான நாணயத்தின் மூலம் இந்த கொள்கை பரப்பப்பட்டது. ஹிந்து முஸ்லிம் கொள்கைகளை ஒன்றுக்கொன்று சேர்த்து புதியஇதூரு கலவையை ஏற்படுத்தி அதன் மூலம் பேரரசை பலப்படுத்தி ஒன்று கூட்டும் நோக்கத்துடன் புதிய மதம் புதிய "ரூரீயா" வுடன் இறுதியாக அறிமுகப்படுத்தப்பட்டது. பசுவை காப்பதற்காக பிறக்கப் போகும் மிகப் பெரும் ஆத்மா என்று தங்களின் முனிவர்களால் முன் அறிவிக்கப்பட்டவர் அக்பர் அவர்களே என்று அவையிலுள்ள முகஸ்துதி பாடும் இந்தக்கள் கூறத் இதூடங்கினர். அக்பர் அவர்கள் இவ்வுலகை ஆள வரும் இமாம் வாக்களிக்கப்பட்ட மஹ்தி என்றும் எல்லாவற்றிற்கும் மேலாக அவஇரு இமாமே முஜ்தஹித் என்றும் முஸ்லிம் அறிஞர்கள் நிரூபிக்க முயன்றனர். அவையிலுள்ள மிகவும் புகழ்பெற்ற ஸ_பி அவர்கள் அக்பரை ‘முழுமையடைந்த மனிதர்’ ‘எல்லாக் காலங்களின் கலீபா’ பெ; ப{மியல் ‘இறைவனின் பிரதிபலிப்பு‘ என்றெல்லாம் அறிவிக்க முன் வந்தார். நீதி உண்மை ஆகியவைகள் எல்லா மதத்திற்கும் பொதுவாகவுள்ள உலகளாவிய மாண்புகளாகும். ஆகவே எந்த ஒரு மதமும் இந்த மாண்புகளுக்கு தனியான உரிமை கொண்டாட முடியாது என சாதாரண மக்கள் நம்ப வைக்கப்பட்டனர். இதனால் பல்வேறு மதங்களிலுள்ள நல்ல உயர்ந்த கருத்துக்களை உள்ளடக்கிய பரந்தஇதூரு கொள்கையை அறிமுகப்படுத்துவது மிகவும் பொருத்தமானது என்றும் இதன் மூலம் பல்வேறு வித்தியாசமான கருத்துக்கள் நம்பிக்கைகள் கொண்ட மக்கள் இந்த புதிய மதத்தை தழுவி தங்களின் பிரிவு மற்றும் இன வித்தியாசங்களை மறக்கலாம் என்றும் கருதப்பட்டது. இந்த எல்லாம் தழுவிய மதம் தீன் இலாஹி என்று பெயரிடப்பட்டது. அதனுடைய அடிப்படைக் கொள்கை ''லா இலாஹ இல்லல்லாஹ் அக்பர் கலீபத்துல்லாஹ்"" (வணக்கத்திற்கும் அடிபணிவதற்கும் தகுந்த நாயன் அல்லாஹ்வைத் தவிர வேறில்லை: அக்பர் அவர்கள் அல்லாஹ்வின் பிரதிநிதி ஆவார்கள்) என்றாயிருந்தது. இந்த புதிய மார்க்கத்தை தழுவும் மக்கள் தங்கள் முன்னேர்களிடமிருந்து கண்டää கேட்ட பரம்பரையாக இருந்து வரும் மற்றும் இதுதான் மார்க்கம் என நினைக்கப்பட்டிருந்த இஸ்லாத்தை வெளிப்படையாக கைவிட்டு விட்டு ஆத்மார்த்தமாக அக்பரின் தீனே இலாஹியில் நுழைந்து விட வேண்டும். இவ்வாறு மதம் மாறியவர்கள் ரூPலாஸ் என்று அழைக்கப்பட்டனர். ஸலாம் சொல்லும் முறையும் மாற்றப்பட்டது. ஸலாம் சொல்பவர் அல்லாஹ{ அக்பர் என்று சொல்வார். பதில் சொல்பவர் ஜல்ல ஜலாலுஹ{ என்று சொல்ல வேண்டும். அக்பரின் பேரான ஜலாலுத்தீன் அக்பர் என்பதை ஸலாம் சொல்பவர்கள் நினைவு கூறும் வகையில் இது இஇவ்வாறு மாற்றப்பட்டது. அரசரின் உருவப்படத்தை தங்களின் தலைப்பாகையில் அணிந்து கொள்ளுமாறு ரூPலாஸ்கள் கட்டளையிடப்பட்டனர். அரசரை வணங்க வேண்டும் என்பது அடிப்படைக் கட்டளைகளுள் ஒன்றாக இருந்தது. அதிகாலையில் அரசரின் தோற்றத்தை ஒரு முறை காண்பதன் மூலம் இது நிறைவேற்றப்பட்டது. யாராவது அரசர் இருக்குமிடத்திற்கு சென்று அவரை சந்திக்க அனுமதிக்கப்பட்டால் அவர் முதன் முதலில் அவருக்கு ஸஜ்தா செய்ய வேண்டும். உலமாக்கள் ஸ{பிகள் என்றழைக்கப்பட்டவர்களும் கூட இந்த சக்கரவர்த்திதான் தங்களின் பிரார்த்தனைகளை அங்கீகரிப்பவர் என்பது போல் அவரின் முன் ஸஜ்தா செய்தனர். இந்த வெளிப்படையான குப்ரை இது ஸஜ்தா தஹிய்யாதான் (மரியாதைக்காக செங்யப்படும் ஸஜ்தா) கூமீன் போஸ்தான் (பூமியை முத்தமிடுதல்) என்ற வார்த்தைப் போர்வைகளினால் மறைக்க முயன்றனர். இவைகளெல்லாம் நபி (ஸல்) அவர்களால் முன்னறிவிப்புக்களில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ள சபிக்கப்பட்ட தந்திரங்கள்தான். "ஒரு காலம் வரும் அக்காலத்தில் மக்கள் தடுக்கப்பட்ட பொருட்களை ஆகுமானவைகளாக ஆக்குவதற்காக அவைகளின் பெயர்களை மாற்றுவார்கள்" என அவர்கள் கூறினார்கள். புதிய மதம் எந்த வித மாச்சாரியமுமின்றி எல்லா மதங்களின் நற் கொள்கைகளையும் உள்ளடக்கியிருக்கும் என்ற வாதத்துடன்தான் நிலைநாட்டப்பட்டது. ஆனால் உண்மையில் இஸ்லாத்தை முற்றிலும் ஒதுக்கித் தள்ளிவிட்டு அதனுடைய கட்டளைகளையும் கொள்கையும் எல்லாவித சாபஞ்கள் மற்றும் வேறுப்புக்கள் ஆகியவற்றுடன் மறுத்து விட்டு மற்ற மதங்களை ஆதரிக்கும் உள் நோக்கத்துடன்தான் அப் புதிய மதம் உண்டாக்கப்பட்டது.

ஜொராஸ்டீரியர்களிடமிருந்து நெருப்பு வணக்கம் கடன் வாங்கப்பட்டு அரண்மனையில் எப்போதும் நெருப்பு எரிந்து கொண்டிருக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டது. விளக்குகள் கொளுத்தப்படும் போது மாலை நேரத்து சடங்குகளை நிறைவேற்றுவதற்காக அவையே எழுந்து நிற்கும். "''மணியடித்தல்"" "திரித்துவ சின்னங்களை வணங்குதல்" ஆகியவைகள் மற்றும் பல சடங்குகள் கிறிஸ்துவ மதத்திலிருந்து பின்பற்றப்பட்டது. ஆயினும் நாட்டின் மக்கள் தொகையில் இந்தக்களே பெருவாரியாக இருந்ததால் அரசாங்கத்தின் பலத்தை வலுப்படுத்துவதற்காக அவர்களை சாந்தப்படுத்தி அவர்களின் ஆதரவைப் பெற வேண்டியதிருந்ததால் அவர்களின் கொள்கைகளே வெகுவாக ஆதரிக்கப்பட்டது. பசு வதை தடுக்கப்பட்டது. ஹிந்துக்களின் பண்டிகைகளான தீபாவளிää தஸராää ராகிää ஓனம்ää சிவராத்திரி போன்றவைகள் முழு ஆர்வத்துடன் கொண்டாடப்பட்டன: அரண்மனையில் ஹவான் தொடர்ந்து அனுசரிக்கப்பட்டது. தினமும் நான்கு முறைகள் சூரியன் வணங்கப்பட்டது. அதனுடைய ஆயிரம் திருநாமங்கள் முழு மத பக்தியோடு திருப்பித் திருப்பிக் கூறப்பட்டன. யாராவது ஒருவர் சூரியனுடைய பெயரை கூறி விட்டால் அதைக் கேட்பவர் "''அது புகழப்படுவதா"" என்று சொல்வார். ‘கரூ;கா’வினால் நெற்றி அலங்கரிக்கப்பட்டது. தோல் பட்டையைச் சுற்றி புனிதக் கயிறு அணியப்பட்டது. பசு உயர்ந்த அந்தஸ்தில் மதிக்கப்பட்டது. மறு ஜென்மக் கொள்கை முற்றிலுமாக ஏற்றுக் கோள்ளப்பட்டது மேலும் பல கொள்கைகள் பிராமணர்களிடமிருந்து ஏற்றுக் கொள்ளப்பட்டது. இவ்வாறுதான் மற்ற மதங்கள் நடத்தப்பட்டது. ஆனால் இஸ்லாத்தைப் பொறுத்த வரையில் அது சக்கரவர்த்தியாலும் அவருடைய அவையினராலும் மிகவும் பரிகாசமான-கீழ்த்தரமான முறையில் நடத்தப்பட்டது. இஸ்லாத்தை கீழ்மைப்படுத்தும் எதையாவதொன்றை எவரேனும் அவையின் மனோபாவத்திற்கிணங்க தத்துவ அல்லது ஆத்மீக வாழ்வில் கூறிவிட்டால் அது இறை வாக்கு போல் ஏற்றுக் கொள்ளப்பட்டது. உண்மையான இஸ்லாமிய போதனை வெறுத்து ஒதுக்கப்பட்டது. உண்மையான உலமாக்கள் உண்மை இஸ்லாத்தை எடுத்துச் சொல்லி விட்டாலோ அல்லது சில தீமைகளை கண்டித்தாலோ அவர்கள் பகீ| - அவைச் சொல் மரபுப்படி கவனிக்கத் தேவையற்ற முட்டாள் என்ற வார்த்தைக்கு இணையானது - என்று முத்திரை குத்தப்பட்டனர். எல்லா மதங்களைப் பற்றியும் தீவீர ஆராய்ச்சி செய்வதற்காக நாற்பது பேர்கள் கொண்ட ஒரு குழு நியமிக்கப்பட்டது. மற்ற மதங்களைப் பற்றி அவர்கள் ஆய்வு நடத்தும் போது மிகவும் சகிப்புத் தன்மை கொண்டவர்களாக மாத்திரம் இருந்ததோடல்லாமல் மரியாதையுள்ளவர்களாகவுமிருந்தார்கள்: ஆனால் அவர்கள் இஸ்லாத்தையும் அதனுடைய ஏவல் விலக்கல்களையும் பகிரங்கமாக பரிகசிப்பார்கள். இஸ்லாத்தை ஆதரிக்கும் எவரேனும் எதிர்த்து கருத்துக் கூற முயற்சித்தால் அவர் மௌணியாக்கப்பட்டார். நடைமுறையில் இஸ்லாமிய ஏவல் விலக்கல்கள் எந்த தயக்கமுமின்றி தள்ளுபடி செய்யப்பட்டது அல்லது மிகவும் வெட்ககரமான மாற்றங்களுக்கு உள்ளாக்கப்பட்டது. வட்டிää சூதாட்டம்ää மது ஆகியவைகள் சட்டபூர்வமானதாக்கப்பட்டன.
‘நவ்ரஸ்’ பண்டிகையின் போது ஒயின் குடிப்பது மிகவும் முக்கியமானதொன்றாகி விட்டது. அப்போது நீதிபதிகளும் வழக்கறிஞர்களும் கூட தாராளமாகக் குடித்தனர். தாடியை சிரைப்பது பொதுவான பேஷனாகி விட்டது. அதை நியாயப்படுத்த ஷரீஆவிலிருந்து ஆதாரம் காட்டப்பட்டது. தாயின் அல்லது தந்தையின் உடன்பிறந்தவர்களின் மக்களை திருமணம் செய்வது தடுக்கப்பட்டது. ஆணுக்கும் பெண்ணுக்கும் திருமண வயது முறையே 16ஆக 14 ஆக நிர்ணயிக்கப்பட்டது. பலதார மணம் தடுக்கப்பட்டு பட்டுää தங்கம் ஆகியவற்றின் உபயோகம் அனுமதிக்கப்பட்டது. புலிää நரி ஆகியவற்றின் இறைச்சி ஆகுமாக்கப்பட்டது. இஸ்லாத்தின் போதனைக்கு எதிராக பன்றி சுத்தமான பிராணியாக கருதப்பட்டது. எந்த அளவிற்கேன்றால் அதிகாலையில் அதனுடைய முகத்தில் விழிப்பது நற்சகுனமாக கருதப்பட்டது. இறந்த சடலங்கள் புதைக்கப்படுவதற்கு பதிலாக எரிக்கப்பட்டன அல்லது ஓடும் நதியில் போடப்பட்டன. புதைக்க வேண்டுமேன எவரேனும் பிடிவாதம் பிடித்தால் பிணத்தின் காலை கிப்லாவை நோக்கியே வைக்க வேண்டுமேன அவர்கள் கட்டளையிடப்பட்டனர். இஸ்லாமிய கொள்கைகளுக்கு நேர் எதிராக சக்ரவர்த்தி அவர்களே கிப்லாவை நோக்கி கால் நீட்டி உறங்குவதில் மகிழ்ச்சி கொள்ளலானார். கல்விக் கொள்கைகளும் இஸ்லாமிய உணர்வற்றே இருந்தது. அரபிää இஸ்லாமிய சட்டக் கலைää ஹதீத் ஆகியவற்றை போதித்தல் அவசியமற்றதாக கருதப்பட்டது இவைகளைக் கற்றவர்கள் கீழ்த்தரமானவர்களாகவும் மிகவும் பின்தங்கியவர்களாகவும் கருதப்பட்டனர். தத்துவம்ää கணிதம்ää வரலாறு போன்ற உலகத் தேவைக்கான கல்விகளையே அரசு ஆதரித்தது. மொழியைப் பொறுத்த வரையில் சமஸ்கிருதம் கலந்த ஹிந்தியை உபயோகிக்கும் மனோபாவம் வலுவானதாகவும் வளர்ந்து வருவதாகவும் இருந்தது. அரபி வார்த்தைகள் படிப்படியாக கைவிடப்பட்டன. இது போன்ற சோதனையான சூழ்நிலைகளில் மார்க்க கல்விக் கூடங்களுக்குச் செல்வது கைவிடப்பட்டது. ஆகவே மார்க்க அறிஞர்கள் நாட்டை விட்டு வெளியேறும்படியாயிற்று.

பொது மக்களின் நிலைமையோ மிகவும் மோசமானதாயிருந்தது. ஈராக் மற்றும் குராஸானிலிருந்து வந்த குடியேற்றவாசிகள் தங்களுடன் எல்லாவிதமாக ஒழுக்க மற்றும் சமூக கேடுகளைக் கொண்டு வந்திருந்தனர். மேலும் இந்தியாவில் இஸ்லாத்தைத் தழுவியவர்கள் நல்ல முறையில் கவனிக்கப்பட்டு இஸ்லாத்தின் உண்மையான அடிப்படை மற்றும் கலாச்சாரம் ஆகியவற்றை அவர்களுக்கு ஊட்டுவதற்கு பயிற்சியளிக்கப்படவில்லை. அவர்களின் நடைமுறை வாழ்க்கை பெரும்பாலும் எல்லாத் துறையிலும் இன்னும் இஸ்லாத்திலிருந்து மாறுபட்டதாகவே இருந்தது. இந்த இருண்டு வகையான முஸ்லிம்களின் சமூக வாழ்க்கை ஒரு விதமான பொருத்தமற்ற காலாச்சாரங்களின் கலவையை உண்டாக்கியது. அதற்கு அவர்கள் "இஸ்லாமிய கலாச்சாரம்" என பெயர் சூட்டினர். அக் கலாச்சாரத்தினுள் சிலை வணக்கம்ää இன மற்றும் வகுப்பு மாச்சாரியங்கள்ää ஆசைகளும் அறியாமைகளும்ää எல்லாவற்றிற்கும் மேலாக புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட பழக்கங்களும்ää சடங்குகளும் நிறைந்திருந்தன. உலக வாழ்க்கையையே குறிக்கோளாகக் கொண்டிருந்த "உலமாக்களும்" "மத வழிகாட்டிகளும்" இந்த "இஸங்களை" உருவாக்கினதோடல்லாமல் அதைப் பின்பற்றுபவர்களாகவும் அதனுடைய பூசாரிகளாகவும் மாறி விட்டனர். மக்கள் தங்களுடைய காணிக்கைகளை அவர்களிடம் கொண்டு வருவார்கள். அவர்களும் பதிலாக மிகப் n;பரும் பிரிவு மாச்சரியங்களுடன் அவைகளை ஆசிர்வதிப்பர்.

‘ஆத்மிக வாழ்காட்டி’களும் பொது மக்களிடையே மற்றொரு நோயை பரப்ப காரணமாகிக் கொண்டிருந்தனர். அவர்கள் நியோ-பிளாடோனிஸம்ää ஸ்டோங்ஸிஸ்ம்ää மனீஸெம் மற்றும் வேதாந்திஸம் ஆகியவைகளை கலந்து ஒரு விசித்திரமான தத்துவ ஞானத்தை உருவாக்கினர். அது இஸ்லாமிய ஒழுக்க முறைகள் மற்றும் ஈமானின் கொள்கைகளோடு கிஞ்சிற்றும் ஒத்துப் போகவில்லை. ஸ_பித்துவ முறைகள் இஸ்லாமிய ஷரீஆவை விட்டும் சுதந்திரமானவைகளாக கருதப்பட்டன (ஷரீயாவிற்கு கட்டுப்பட வேண்டியதில்லை) மேலும் தனிப்பட்ட வாழ்க்கை பொது வாhழ்க்கையிலிருந்து பிரிக்கப்பட்டது. இதன் விளைவாக ஹலால்ää ஹராம் ஆகியவற்றிற்கு இஸ்லாம் விதித்திருந்த எல்லைகள் நிராகரிக்கப்பட்டன. மார்க்க கட்டளைகள் வெளிப்படையாகவே மீறப்பட்டன. தனிப்பட்ட எண்ணங்களும் ஆசைகளும் வாழ்க்கையின் எல்லா விவாகரங்களையும் தீர்ப்பனவாகவே ஆக்கப்பட்டன. இவ்வாறாக ஷரீஆவினால் நிலைநாட்டப்பட்ட ஒரு சட்டத்தை மறுப்பதும் ஷரீஆவில் எந்தவோரு அடிப்படையுமே இல்லாததை உண்டென்று சொல்லி அதற்கு முழு சட்ட அந்தஸ்து கொடுப்பதும் சாதாரண விசயங்களாகி விட்டன: அதாவது சட்டபூர்வமானவைகளை தடுப்பதும் சட்ட விரோதமானவைகளை அனுமதிப்பதும். இவர்களை விட கொஞ்சம் பரவாயில்லாமல் இருந்த ஸ_பிகளும் இதற்கு விதிவிலக்கல்ல. ஏனென்றால் ‘இறைவன் எங்குமிருக்கிறான் - தோன்றுவது யாவும் கடவுளே’ என்று கூறும் தத்துவ ஸ_பித்துவத்தின் மயக்கத்தில் அவர்கள் இருந்தனர். அது அவர்களின் வாழ்க்கை மற்றும் நடைமுறை உண்மை ஆகியவற்றிலிருந்து அவர்களை விலக்கி ஒன்றுமில்லாமலாக்கியிருந்தது.

அக்பரின் ஆட்சிக்காலத்தின் ஆரம்பத்தில் ஸிர்ஹிந்தில் ஷேக் அஹ்மத் பிறந்த போது நிலைமைகள் இந்த அளவிற்கு மோசமானவைகளாக இருந்தன. அவர் தன் காலத்தலுள்ள மிகவும் இறையச்சமுடையோருக்கிடையே வளர்க்கப்பட்டார். அவர்கள் தங்களைச் சுற்றி புகுந்து வரும் தீமைகளை எதிர்க்க சக்தி இல்லாதவர்களாக இருந்த போதிலும் தங்களின் ஈமானிலும் பரிசுத்தமான நடவடிக்கைகளிலும் மிகவும் உறுதி மிக்கவர்களாக இருந்தனர். நேரிய வாழ்வை கடைப்பிடிக்குமாறு மற்றவர்களை தங்களுக்கு சாத்தியமான வரை ஏவிக் கொண்டிருந்தனர். அக்காலத்தில் ஆத்மீக ரீதியாக மிகவும் உன்னத ரீதியில் இருந்த ஹஸ்ரத் பாகி பில்லாவிடமிருந்து ஷேக் அஹ்மத் அவர்கள் பெரும்பாலும் (சீர்திருத்த வேண்டும் என்ற) உணர்வும் பயனும் பெற்றார்கள். ஆயினும் ஷேக் அஹ்மத் அவர்களும் மிகவும் உன்னத ஆற்றல்களைப் பெற்றிருந்தார்கள். அவர்கள் ஹஸ்ரத் பாகி பில்லாவிடம் முதன் முதலில் வந்த போது அவரால் பாகி பில்லா அவர்கள் மிகவும் கவரப்பட்டு தன்னுடைய நண்பர்களில் ஒருவருக்கு எழுதியதாவது :

ஸிர்ஹிந்திலிருந்து ஒரு இளைஞர் சமீபத்தில் வந்துள்ளார். அவர் மிகவும் அறிவாளியாகவும் எக்காரியத்தையும் நடைமுறையில் கொண்டு வரும் மிகப் பெரும் ஆற்றல் பெற்றவராகவும் திகழ்கிறார். அவர் கடந்த சில நாட்களாக என்னிடம் வந்து போய்க் கொண்டிருக்கிறார். இந் நாட்களில் நான் அவரைக் கவனித்த வரை வரும் காலங்களில் அவர் மிகப் பெரும் கலங்கரை விளக்கமாக திகழ்ந்து முழு உலகையும் பிரகாசிக்க வைப்பார் என நான் எதிர்பார்க்கிறேன்.

0 comments:

Post a Comment

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | cheap international calls