Monday, January 2, 2012

உலகில் மிகவும் அபாயகரமான சுற்றுளாத்தளம்

  
 விடுமுறைக்காலம் வந்ததும்  தமது மனங்களை இலகுவாக்கி கொள்வதறள்கும் புதிய அனுபவங்ளை பெற்று கொள்வதற்கும் சுற்றுளாத் தளங்களை நோக்கிப் பயனிப்பார்கள்.  சுற்றுளாப் பயனிகளை மகிழ்விக்கும் சில இடங்களுக்கு மத்தியில் மரண பயத்தை உண்டு பண்ணும் இடங்களும் உண்டு இந்த வகையில்   அந்த இடத்தைப் பார்த்தால் அம்மாடியோவ் என்ன ஒரு ஆழம் என்று ஒருகணம் தலை விறைத்துப் போய் நிற்பீர்கள். அந்த இடம் அவ்வளவு பிரமிப்பாக இருக்கும். ஆம் இது தான் உலகின் மிகவும் அபாயகரமான சுற்றுலாத்தலம். சுற்றுலாப் பயணிகளை சுண்டி இழுக்கும் இந்த இடத்தில் அவர்களுக்குத் தேவையான எந்தவித பாதுகாப்பு வசதிகளும் இல்லை.
ஆபத்தை எதிர்நோக்கும் தன்மை உள்ள சுற்றுலாப் பயணிகளே இந்த ஆபத்தான இடத்தை நோக்கி போகலாம். தற்செயலாக கால் இடறி விழுந்தால் 1982 அடி அதலபாதாளத்தில் விழ வேண்டும்.நோர்வேயில் அமைந்துள்ள Pulpit Rock  என்று அழைக்கப்படும் குறித்த பிரதேசம் வருடாந்தம் ஆயிரக்கணக்கான த்ரில்லான சுற்றுலாப் பயணிகளைக் கவருகின்றது.அபாயகரமான பாறையின் விளிம்பில் இருந்து புகைப்படம் எடுத்துக் கொள்வதை அங்கு வரும் த்ரில்லான சுற்றுலாப் பயணிகள் விரும்புகிறார்கள்.விளிம்பில் தலை வைத்துப் படுத்து எனக்கு எந்தப் பயமும் இல்லை என்று உதார் விடுபவர்களும் அங்கு வருகிறார்களாம்... எங்கே நீங்களும் அந்த காட்சியைப் பார்க்கப் போகின்றீர்களா? கவனம் தலையைப் பிடித்துக் கொண்டு பாருங்கள்.
  

  

  

  

0 comments:

Post a Comment

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | cheap international calls