Thursday, January 5, 2012

ஈழத்து தழிழர் பிரச்சினையில் தோற்றுப்போன ஊடகங்கள்

கருத்துக்களையும் செய்திகளையும் பரப்புவதில் முக்கிய இடம் வகிப்பது ஊடகங்கள. கருத்துக்கள் சரியான முறையில் பரப்பட்டு அது எந்த அளவு மக்களை சென்றடைகின்றன என்பதிலேயேஊடக வளர்ச்சி தங்கியுள்ளது. போராட்டங்களும் புரட்சிகளும் ஊடகங்களினூடாகவே அதிக வளர்ச்சி கண்டு வெற்றி பெற்றன. இலங்கைத்தழிழர்களின் பிரச்சினைகள் ஆரம்ப காலத்தில் ஊடகங்களினுடாகவே பரப்பட்டன உண்மைகள் சரியான முறையில் பரப்பட்டு மக்களிடையே ஆதரவினை பெற்றன. அன்று கிட்லர் பாசிச ஆட்சிகயின் வெற்றிக்கு உறுதுணையாக அமைந்தது ஊடகங்களே கிட்லர் கவர்சிகரமான பேச்சினுடாக மக்களின் ஆதரவினை திரட்டினான். கிட்லர் ஊடகத்தினை பற்றி நன்கறிந்து அதனுடாக மக்களின் ஆதரவினை பரப்பினான். அரசுகள் புரட்சி இயக்கங்களை செயலிழக்க செய்யவேண்டுமாயின் உடகங்களை தம் கட்டுப்பாட்டில் கொண்டுவரவேண்டும்
பல அரசாங்கங்கள் இவ்வாறான முறையை கையாண்டே பல புரட்சி இயக்கங்களையும் போராட்டங்களையும் அடக்கினார்கள்.
இலங்கையில் தழிழீழ  விடுதலைப்புலிகளின் ஆதரவினை குறைப்பதற்கு இலங்கை அரசாங்கம் இம் முறையனையேகையாண்டனர். விடுதலைப்புலிகலை தடைசெய்து அவசர கால சட்டத்தினை அழுழ் படுத்தி ஊடக சுதந்திரத்தை நசுக்கினர். யுத்தகாலத்தின் போது டகங்கள் செல்லமுடியாமல் தடுக்கப்பட்டமையும் ஊடகவியாளர்கள் தாக்கப்பட்டமையும் உண்மையை வெளிவாமல் செய்தமையே ஆகும். இதனை விட சிங்கள ஊடகங்கள் யுத்தகளத்தில் செய்தி சேகரிக்கும் பணியில் ஈடுபட்டன. சிங்கள் ஈரானுவத்தினரின் கருத்துக்களை மட்டுமே பதிவு செய்ய முடிந்தது. மொழி தெரியாத காரணத்தினால் தழிழர்களின்கருத்துக்கள் பதிவு செய்யப்படவில்லை.

யுத்தகாலத்தில் விடுதலைப்புலிகளின் கருத்துக்களும் செய்திகளும் யும் மக்களிடம் சேர்ப்பதற்கு ஊடகவியாளர்களும் ஊடகங்களும் காணப்படவில்லை. விடுதலைப்புலிகளின்  ஊடகநிறுவனங்கள் அடித்து நொறுக்கப்பட்டமையும் அவர்களின் தகவல்கள் வெளிவாராமைக்கு முக்கிய காரணம். இன்றுவரை இறுதியுத்தத்தின் செய்திகள்வெளிவவில்லை இநுதிக்ட நிகழ்வுகளைஉண்மைகளை வெளிப்படுத்த ஊடகங்கள் செயற்படவில்லை என்ற கூற வேண்டும் தழிழ் மக்களின் குரல்கள் உரிய முறையில் ஊடகத்தின் ஊடாக வெளிப்படுத்தப்படவில்லை இதற்கு ஊடகங்களை தப்பு கூற முடியாது ஊடகங்களின் சுதந்திர செயற்பாட்டை அரசாங்கம் தடைசெய்துள்ளமை வருத்தத்திற்குரியதே.

இன்று சமுக வலைத்தளங்களினுடாக ஆதரவுகள்அதிகரிக்கப்பட்டு அரசாங்க அடக்கு முறைக் கெதிரான பொராட்டங்களும் புரட்சிகளும் வெடிக்கின்றன அந்த புரட்சி இயக்கத்தின்செயற்பாடுகளுக்கு  புரட்சி இயக்கத்தின் ஆதரவினை அதிகரிப்பதற்கு ஊடகஙகள் செயற்படுகின்றமை ஊடக வெற்றியினை வெளிக்காட்டுகின்றது. புரட்சி வாதிகளின் உண்மையாக குருத்துக்களும் கோரிக்கைகளும் மக்களை சென்றடைய ஊடகமே முக்கிய காரணம். இந்தியாவின் அன்னா ஹசாரேயின் போராட்டம் வெறிறி பெறுவதற்கும் மக்கின் ஆதரவு அதிகரிப்பதற்கும் ஊடகங்களே காரணம் அன்னாவின் கோரிக்கைகளும் அவரின் போராட்டத்தின் போராட்டம் தொடர்ச்சியாக ஊடகங்ஙளுடாக வெளியிட்பட்டமைமே ஆகும்.
இலங்கை தழிழர்களின் பிரச்சினைகள் கோரிக்கைகள் உரிய முறையில் ஊடகங்களினுடாக் வெளியிடப்படவில்லை.  தழிழர்களுக்கு எதிராக சிங்கள மக்களை திசை திருப்புவதற்கு சிங்களஊடகங்கள் சிறப்பாக செயற்பட்டு வெற்றி கண்டுள்ளன.  இன்று வரை இறுதியுத்தத்தின் போதான செய்திகள் வெளியிடப்படாமல் மாறுபட்ட கருத்துக்கள் வெளிவருகின்றமை ஊடகம் மீதான மக்களின்நம்பிக்கை இன்மை வளர ஊண்று கோளாய் அமைகின்றது.
இறுதி யுத்தத்தின் போது அங்கிருந்த மக்கள் உயிர் பயம் காரணமாக உண்மைகளை மறைக்கும் போத பிரச்சினைக்கு தீர்வு என்பது காணப்படாமலே போவதற்கான வாய்ப்புக்கள் உள்ளன.

ஊடகங்கள் கொடுப்பதையே மக்கள் வாசிக்கின்றனர். ஊடகங்கள் பொய்யான தகவல்களை பரப்பும் போது ஊடகம் மீதாக மக்களின் ஆதரவு குறைவடையும் உண்மைக்காக போராடும் புரட்சி இயக்கங்களுன் கோரிக்கைகள் செய்திகள் உரிய முறையில் வெளியிடப்படாத விடத்து மக்களின் ஆதரவு குறைவடந்து போராட்டம் தோலவியுற வாய்புள்ளது புரட்சியின் வெற்றியை தீர்மானிப்பதில் உடகங்களுக்கு முக்கிய பங்குண்ட இந்த வகையில் ஈழத்து போராட்டத்தில் ஊடகங்கள்தோற்றுப்போய்விட்டன

0 comments:

Post a Comment

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | cheap international calls