Monday, January 2, 2012

கிட்லர் என்ற பாசிச மிருகத்திடமிருந்து உலகை காப்பாற்றிய சோவியட் வீரன் டான்கோ

  
தோழர் ஸ்டாலின் தலைமையில்இ ஹிட்லர் என்ற பாசிச மிருகத்திடமிருந்து உலகை காப்பாற்றிய சோவியத் வீரர்கள் பற்றிய உண்மைகதைகள் சிலவற்றை மாஸ்கோ நூலில் இருந்து தேர்தெடுத்து மொத்தமாக நமது வலைத்தளத்தில் வெளியிடப்பட்டது. தோழர் ஸ்டாலின் அவர்களின் பிறந்த தினத்தை (டிசம்பர் 21) முன்னிட்டு அக்கதைகள் ஒவ்வொன்றாக பிரித்து வெளியிட முடிவு செய்ததில் இரண்டாவது பதிவுவாக “சோவியத் வீரன் டான்கோ” வை வெளியிடுகிறோம். மாக்சிம் கோர்க்கியின் கதைகளில் ஒன்றில் வருகின்ற வியப்பைத் தரும் பாத்திரம் டான்கோ. ஒரு இருண்ட காட்டில் அகப்பட்டுக் கொண்ட சிலரைக் காப்பாற்றுவதற்காக டான்கோ தன்னுடைய மார்பிலிருந்து இருதயத்தைப் பிய்த்துக் கொடுத்தான். அந்த இருதயம் பிரகாசமான நெருப்பாக கொழுந்து விட்டெரிந்து காட்டை விட்டு வெளியே போகின்ற பாதையை அவர்களுக்குக் காட்டியது.

ஸ்தாலின்கிராடு ஒரு அசாதாரணமான நகரம். வோல்கா நதியின் வலது கரையில் வடக்கிலிருந்து தெற்கே அறுபது கிலோமீட்டர் தூரம்  ஒரு நீண்ட பிரதேசமாக இருந்தது.
செப்டம்பர் மாத கடைசியில் நகரத்தின் வட பகுதியில் மிகவும் தீவிரமான யுத்தம் நடைபெற்றது. “சிகப்பு அக்டோபர்”இ”தடையரண்கள்”. பிரபலமான ஸ்தாலின் கிராடு டிராக்டர் தொழிற்சாலை அகியவை இந்தப் பிரதேசத்தில்தான் இருந்தன. ஸ்தாலின்கிராடு வாசிகள் தொழிலாளர்களுக்கு கீர்த்தியளிக்கும் தங்கள் தொழிற்சாலைகளைப் பற்றி மிகவும் பெருமப்பட்டனர். இந்த்த் தொழிற்சாலைப் பிரதேசத்தில்தான் நாஜிகள் நகரத்துக்குள் ஊடுருவுவதற்கு முயற்சி செய்தார்கள். காலையிலிருந்து மாலைவரையிலும் உக்கிரமான யுத்தம் நடைபெற்றது.
மிஹியீல் பானிக்காகா ஒரு மாலுமி; இளம் கம்யூனிஸ்டுகள் கழகத்தை சேர்ந்தவன். ஒரு கூட்டத்தில் அவன் நின்றால் மற்றவர்களுக்கும் அவனுக்கும் வித்யாசம் தெரியாது. அவன் உயரம் நடுத்தரம்; உடலும் அப்படியே. அவன் சாதாரணமான தோற்றத்தைக் கொண்ட மாலுமிதான்.
ஒரு மாலுமியின் தொப்பியும் கோடுகள் போட்ட சட்டையும் அணிந்திருந்தான். அவனுடைய அகலமான கால்சராயின் நுனிப் பகுதிகளை பூட்சுகளுக்குள் திணித்துக் கொண்டுருந்தான்.
மிஹியீல் பானிக்காகா கடற்படையைச் சேர்ந்தவன். இந்த்த் தொழிற்சாலைப் பிரதேசத்தில் அவன் தன்னுடைய படைப்பிடிவோடு சேர்ந்து யுத்தத்தில் ஈடுபட்டுருந்தான்.
நாஜிகள் கடற்படை வீரர்களுக்கு எதிராகத் தங்களுடைய டாங்கிகளை அனுப்பினார்கள். பலம் பொருந்திய எதிரிகளுக்கும் கடற்படைவீரர்களுக்கும் யுத்தம் நடைபெற்றது.
டாங்கிகள் இரும்பு கவசமும் பீரங்கிகளும் இயந்திரத் துப்பாக்கிகளும் இருந்தன; மோலும் அவை குறவான எண்ணிக்கையிலே தான் இருந்தன.
மிஹியீல் பானிக்காகா குழிக்குள் மறைந்திருந்து இரும்புக் கவசத்தையும் பீரங்கியையும் இயந்திரத் துப்பாக்கிகளையும் எதிர்த்துத் தன் தோழர்களோடு சேர்ந்து சண்டை செய்தான். ஆனால் அவனிடமிருந்து கைவெடிகுண்டுகள் தீர்ந்து போகும் தருணம் வந்தது.  அவனிடம் மிச்சமிருந்தது வெடிக்க்கூடிய திரவம் நிரப்பப்பட்டிருந்த இரண்டு பாட்டில்கள்தான். ஆனால் டாங்கிகள் வருவதும் போவதுமாக இருந்தன. அந்தச் சண்டை முடிவடைவதாகத் தெரியவில்லை.
மிஹியீல் பானிக்காகாவுக்கு நேர் எதிரே ஒரு டாங்கி வந்து கொண்டிருந்த்து. அதிலிருந்து தப்புவதற்கு வழியில்லை; மனித உடலை நசுக்கி அழிப்பதற்கு எஃகு முன்னேறிக் கொண்டிருந்தது.
டாங்கி குழிக்குச் சமீபத்தில் வரட்டுமென்று அந்த மாலுமி குழியின் ஓரத்தில் காத்துக் கொண்டிருந்தான். அவன் பாட்டிலைக் கையில் தயாராக வைத்துக் கொண்டான். குறி தவறிவிடக் கூடாது என்பதற்காக மிகவும் கவனமாக குறி பார்த்தான். இப்பொழுது அந்த டாங்கி போதிய அளவுக்குச் சமீபத்தில் வந்துவிட்டது. அவன் குழியில் நன்றாக நின்று கொண்டான். பாட்டிலைத் தலைக்கு மேலே தூக்கி அந்த எஃகு வண்டிக்கு அடியில் எறியத் தயாரானான். அந்த நேரத்தில் பாட்டில் மீது ஒரு குண்டு பட்டு அது நொறுங்கியது. அதிலிருந்து திரவம் தீப்பற்றி பானிக்காகாவின் உடல் மீது கொட்டியது. ஒரு சில வினாடிகளுக்குள் அவன் உடல் எரியும் நெருப்பாக மாறியது.
அவனைச் சுற்றியிருந்தவர்கள் பயத்தில் அப்படியே கல்லானார்கள். வானம் இருந்த நிலையிலேயே உறைந்து போயிற்று. வானத்திலே பவனிவந்த சூரியன் அப்படியே நிலைகுத்தி நின்றது….
“இல்லைஇ உன்னை விட மாட்டேன்” என்று அந்த மாலுமி கத்தினான்.
அவன் இரண்டாவது பாட்டிலைக் கையிலே எடுத்தான். தீப்பற்றிய உடலோடு குழியிலிருந்து வெளியே குதித்தான்; நாஜி டேங்கியை நோக்கி ஓடினான். டாங்கி இயந்திரத்தின்  மூடியின் மீது பாட்டிலை ஓங்கி உடைத்தான். நாஜி டாங்கி சீறியது; கடகடவென்று சத்தமிட்டது; பிரகு அதற்கு மூச்சுத் திணறியது. உயரமான அனற் பிழம்பு தன் கைகளை நீட்டி வானத்தை தொட்டது.
யுத்தம் எப்பொழுதோ முடிந்து விட்டது.; போர்வீரர்கள் தங்களுடைய வீடுகளுக்கு திரும்பிவிட்டார்கள். யுத்தத்தைப் பற்றிய நினைவுகளும் மறைந்து வருகின்றன. ஆனால் அச்சமென்பதே இல்லாத  இந்த வீரர்களின் சாதனைகள் என்றும் அழியாதவை. மிஹியீல் பானிக்காகாவின் வீரத்தைப் பற்றிய நினைவு இன்னும் வாழ்கிறது. அதற்கு அழிவு கிடையாது.
ஸ்டாலின்கிராடு டான்கோ-அவன் தோழர்கள் அவனை அப்படித்தான் கூப்பிட்டார்கள். அவன் பெயர் வரலாற்றில் இடம் பெற்றுவிட்டது.

0 comments:

Post a Comment

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | cheap international calls