இலங்கை::இலங்கையின் சுற்றுலாக் கைத்தொழிலானது புதியதொரு மறுமலர்ச்சியை நோக்கி சென்றவண்ணம் உள்ளது. இதற்கு ஆதாரக 2011 ஆம் ஆண்டின் 800,000ஆவது சுற்றுலாப் பிரயாணி கடந்த டிசம்பர் 19 ஆம் திகதி பண்டபரநாயக சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தார். லண்டனில் இருந்து யூஎல் 501 இலங்கை எயாலைன் விமானத்தின் மூலம் வந்தடைந்த சுற்றுலா பிரயாணியை இலங்கை சுற்றுலாத்துறை தலைவரான டாக். நாலக கொடஹேவா, முகாமைத்துவ பணிப்பாளர் திரு. ருமி ஜபரூ மற்றும் பிரதிநிதிகள் ஆகியோர் இணைந்து வரவேற்றனர்.முன்பு ஒருகாலமும் இல்லாதவாறு இவ் ஆண்டு 800,000 சுற்றுலாப் பிரயாணிகள் இங்கு வருகைதந்துள்ளனர்இவ் வருடம் பெரும்பாலான சுற்றுலாப் பிரயாணிகள் இந்தியா, ஜப்பான், ஜேர்மன், ஐக்கிய இராட்ச்சியம், பிரான்ஸ், நெதர்லாந்து, இத்தாலி மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து வருகை தந்துள்ளனர்.
1:34 AM
abimanju




0 comments:
Post a Comment