Monday, January 2, 2012

உலகப்போரில் ஹிட்லருடன் போரிட்ட நாய்ப்படை

  
  உலகையே உள்ளங்கையில் கொண்டுவர நினைத்த ஜேர்மனை ஆண்ட சர்வாதிகாரி அடால்ப் ஹிட்லரின் வரலாறு முழுவதுமே நம்பமுடியாததாகவும், சுவையானதாகவும் அமைந்திருக்கிறது. ஹிட்லர் ஈவு இரக்கமற்ற கொடியவராக இருந்தாலும், ஆச்சரியப்படத்தக்க வகையில் சில நல்ல குணங்களும் இருந்தன. யூதர்களை நடு நடுங்க வைத்து ஆட்டிப்படைத்த சர்வாதிகாரியான ஹிட்லர், குழந்தைகளிடமும், பிராணிகளிடமும் அன்பு கொண்டவர். மது அருந்த மாட்டார். புகை பிடிக்க மாட்டார். சைவ உணவு மட்டுமே சாப்பிடுவார்.ஹிட்லர் வளர்த்த ப்ளாண்டி என்னும் ஜெர்மன் ஷெஃபர்ட் வகை நாய் அவரது பதுங்குழி காலம் வரை கூடவே இருந்துள்ளது. அவர் தனது காதலியுடன் தற்கொலை செய்து கொண்டு இறக்கும் தருவாயிலும் அந்த பாசமான நாய் ஹிட்லருடன் இருந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
  
இரவுக்காவலில் நாய்
ஜெர்மனியர்கள் நாய்களை மனிதனுக்கு சமமாக புத்தியுள்ள பிராணிகளாக கருதினார்கள். ஜெர்மன் ஷெஃபர்ட் நாய்கள் குறிப்பாக அவற்றின் நுண்ணறிவுத் திறனுக்காகவே வளர்க்கப்பட்டன.இந்தப் பண்பின் காரணமாகவே அவை இன்றும் புகழ் பெற்று விளங்குகின்றன. நுண்ணறிவைப் பொறுத்த வரையில், பார்டர் கோலி மற்றும் பூடில் என்னும் நாய் வகைகளுக்கு அடுத்தாற்போல, மூன்றாவது இடத்தில் அவை இருப்பதாகக் கருதப்படுகின்றன. இவை எளிய பணிகளை ஐந்தே முறை மீண்டும் மீண்டும் செய்தவுடன் அவற்றைப் புரிந்து கொள்ளும் திறன் கொண்டிருந்ததாகவும் மற்றும் 95 சத நிகழ்வுகளில் இவை முதலில் அளிக்கப்படும் கட்டளையை நிறைவேற்றுகின்றன என்றும் நாய்களின் நுண்ணறிவு என்னும் புத்தகத்தில், ஸ்டேன்லி கோரென் குறிப்பிட்டுள்ளார்.அவற்றின் உடல் வலிமையுடன் கூடுதலாக, இந்தப் பண்பும் இணைகையில் இந்த இனத்து நாய்கள், காவல்துறை, பாதுகாவலன் மற்றும் தேட்டம் மற்றும் இடர்மீட்பு நாய் ஆகிய பணிகளுக்கு உகந்தவையாகின்றன; இவை பெரும் உருவம் கொண்ட பிற வளர்ப்பின நாய்களை விடவும் விரைவில் பணிகளைக் கற்றுக் கொண்டு, ஆணைகளைப் புரிந்து கொண்டு செயல்படும் ஆற்றல் கொண்டுள்ளன.
  

சர்வாதிகாரி ஹிட்லரும் சிறந்த புத்தியுடைய நாய்களின் படை ஒன்றை வைத்திருந்தார். அந்த நாய்கள் தங்கள் ராணுவ அதிகாரிகளுக்கு தகவல் பரிமாற்றிக்கொள்ள உதவும் என்று ஹிட்லர் நம்பினார். அவர் நாய்களுக்கு என்றே ஒரு சிறப்பு பள்ளி ஒன்றையும் நிறுவியிருந்தார். அப்பள்ளியில் நாய்களுக்கு பேச கற்றுக்கொடுக்கப்பட்டது. ஹிட்லரின் நாய்ப்படை அதிகாரிகள் கல்வியறிவு உள்ள நாய்களை பேச பயிற்சி அளித்த தோடு, அவற்றின் பாதங்கள் மூலம் சிக்னல்களை கண்டறியவும் கற்றுக் கொடுத்தனர். அந்த நாய்கள் ஒரு நாள் அவற்றின் பாதங்களை தட்டி பேசின.ஜெர்மனியர்கள் நாய்களை இவ்வாறு அதி புத்திசாலிகளாக பழக்கியதற்கு இரண்டாம் உலக போரில் ராணுவத்திற்கு அவை உதவியாக இருக்கும் என்பதே காரணமாகும். மேலும் இத்தகைய நாய்கள் சிறைச்சாலைகளில் அதிகாரிகளின் பணிச்சுமையை குறைத்து நன்கு காவல்காத்தன என சமீபத்திய ஆய்வுகள் கூறுகின்றன.

0 comments:

Post a Comment

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | cheap international calls