Monday, April 23, 2012

கனடாவில் ஆரம்பமாகும் பனிப்புயல்: வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரிக்கை

கனடாவின் ஓண்டேரியோ பகுதியில் இதமான வெப்பம் குறைந்துள்ளது. இன்னும் சில தினங்களில் பனிப்புயல் வீசப்போவதாக என்விரான்மெண்ட் கனடா என்ற வானிலை அமைப்பு தெரிவித்துள்ளது.
மெக்ஸிகோ வளை குடாவில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடக்கு நோக்கி ஓண்டேரியோவுக்குள் வீசும்போது பனி பனிக்கட்டி மழை மற்றும் மழை எனப் பல பரிமாணங்களில் வெளிப்பட வாய்ப்பு உள்ளது. இந்நிகழ்வு ஞாயிறு இரவு தோன்றி திங்கள் முதல் செவ்வாய் வரை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஓண்டோரியோவின் தென்மேற்கு மற்றும் மத்திய தென் பகுதிகளில் திங்கட்கிழமை வாடைக்காற்று மணிக்கு 70 கி.மீ வேகத்தில் வீசும். அன்று 7 டிகிரி–10 டிகிரி என்கிற சராசரி வெப்பத்தை விடக் குறைவாக இருக்கும் காற்றின் வேகம் செவ்வாய்க்கிழமை தணியக்கூடும்.

கொட்டும் பனியானது கிங்ஸ்டன் ஒட்டாவா பீட்டர்பரோ ஹேமில்டன் மற்றும் டொரொண்டோவில் ஆகிய பகுதிகளில் பரவலாக இருக்கும். ஹேலியர்டன் பீட பூமியில் உறைபனி 5 முதல் 10 செ.மீ வரை படர்ந்திருக்கும். ஒண்டேரியோவின் மத்திய தென் பகுதியில் ஒன்று அல்லது இரண்டு செ.மீ. வரை பனி உயர வாய்ப்புள்ளது.

கிழக்குப் பகுதியில் முதலில் சில செ.மீ வரை உயரும் பனி மழையானது பின்பு 25 மி.மீ. வரை உயர்ந்து அந்தப் பகுதி முழுவதையும் குளிர்விக்கும். எச்சரிக்கை விடும் அளவிற்கு இப்பனி ஆபத்தானது இல்லை என்றாலும் இந்தக் காலகட்டத்திற்கு தற்போதைய பனியின் அளவு அதிகமாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

ஞாயிறு மாலை லேக் தூய ஜீன் பகுதியில் 20 செ.மீ. உயரத்திற்கு பனி படரும். இந்தப்ப பனிப்புயலால் கார்இ வண்டி ஓட்டுவது கடினமாக இருக்கும் என வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரித்துள்ளது.

0 comments:

Post a Comment

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | cheap international calls