Wednesday, April 25, 2012

சீனாவில் மலசலகூடத்துக்குள் வசிக்கும் குடும்பம்

சீன குடும்பம் ஒன்று மலசலகூடத்தை வீடாக்கி வாழ்ந்து வருகின்றது. வடகிழக்கு சீனாவில் உள்ள   Jilin மாகாணத்தில் உள்ள குட்டிக் கிராமம் ஒன்றில் பிறந்தவர்  Zeng Lingjun.  ஆயினும் வீட்டு வறுமை காரணமாக பாடசாலைக்கு சென்று படிக்க இவரால் முடியவில்லை.
வளர்ந்து பெரியவர் ஆன பிற்பாடு கிராமத்தை விட்டு வெளியேறினார். அவரது மாகாணத்தின் மிக பெரிய நகரமான ளூநலெயபெ இற்கு வந்து சேர்ந்தார். இவர் மிகுந்த பிரயாசைக்காரர். திறமையாக செருப்பு தைப்பார். இதனால் இப்பெரிய நகரத்தில் மாதாந்தம் ஓரளவு நல்ல வருமானத்தை விரைவாகவே சம்பாதிக்க தொடங்கினார். ஆயினும் சொந்த வீடு ஒன்றை வாங்குகின்ற அளவுக்கு வசதி கிடைக்கவில்லை. நண்பர் ஒருவரிடம் இருந்து ஆறு வருடங்களுக்கு முன்னர் இவருக்கு ஒரு தகவல் கிடைத்தது.

கைவிடப்பட்ட ஹோட்டல் ஒன்றின் மலசலகூடம் ஒன்று மிக குறைந்த வாடகைக்கு கொடுக்கப்பட இருக்கின்றது என்பதுதான் தகவல். தேவையான பணத்தை இவர் கடனாக பெற்றுக் கொண்டார். மலசலகூடத்தை வாடகைக்கு பெற்றார். அதை வீடாக ஆக்கிக் கொண்டார்.

2008 ஆம் ஆண்டு இவர் ஒரு பெண்ணிடம் மனதை பறி கொடுத்தார். பெண்ணும் ஒரு பாட்டாளிதான். 2010 ஆம் ஆண்டு இருவரும் திருமணம் செய்து கொண்டனர். விரைவிலேயே ஒரு குழந்தைக்கு பெற்றோர் ஆயினர். தற்போது வரை இம்மலசலகூட வீட்டில்தான் வசிக்கின்றார்கள்.


0 comments:

Post a Comment

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | cheap international calls