Thursday, April 26, 2012

பிரிட்டிஷ் பொருளாதாரம் நெருக்கடியில்!

பிரிட்டிஷ் பொருளாதாரம் பொருளாதார நிபுணர்களின் எதிர்வுகூறல்களுக்கு மாறாக மீண்டும் நெருக்கடி நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இந்த ஆண்டின் முதல் காலாண்டில் பிரிட்டனின் பொருளாதாரம் 0.2 வீத வீழ்ச்சியைக் காட்டுகிறது. இதே போன்று இதற்கு முந்தைய காலாண்டிலும் பிரிட்டிஷ் பொருளாதாரம் வீழ்ச்சியை கண்டது.
டபுள் டிப் ரிஸஷன் எனப்படும் பொருளாதார நெருக்கடியிலிருந்து மீண்டெழுந்த மாத்திரத்திலேயே இன்னொரு சடுதியான வீழ்ச்சிக்குள் செல்லும் இரண்டாவது தடவை நெருக்கடியை 1970களுக்குப் பின்னர் பிரிட்டன் முதற்தடவையாக சந்திக்கிறது. நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளது என்பதை காட்டும் புள்ளிவிபரங்கள் மிக மிக ஏமாற்றம் அளிப்பதாக உள்ளது என்று பிரதமர் டேவிட் கேமரன் கூறியுள்ளார்.

இப்பொருளாதார வீழ்ச்சிக்கு பிரதமரும் நிதியமைச்சர் ஜார்ஜ் ஆஸ்பர்ணுமே பொறுப்பு என்று எதிர்கட்சித் தலைவர் எட் மிலிபாண்ட் குற்றஞ்சாட்டியுள்ளார். அழிவை ஏற்படுத்தக் கூடிய பொருளாதார கொள்கைகளே இந்த நிலையை ஏற்படுத்தியுள்ளது என்றும் மிலிபாண்ட் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த திங்களன்று தானும் பொருளாதார நெருக்கடிக்குள் வீழ்ந்துவிட்டதாக ஸ்பெயின் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

1 comments:

Thava said...

பதிவு அருமைங்க..தகவலுக்கு நன்றி.

Post a Comment

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | cheap international calls