Tuesday, April 3, 2012

அவுஸ்ரேலிய விமான உணவுப் பொட்டலத்தில் கூட்டுப்புழுக்கள்!

அவுஸ்திரேலிய விமானமான காண்ட்டாஸ் விமானத்தில் லாஸ் ஏஞ்சல்ஸிலிருந்து மெல்போர்ன் நோக்கிப் பயணித்த அவுஸ்திரேலியப் பெண்மணி யொருவர் உணவுப் பொட்டலத்தில் உயிர்ப்புழுக்கள் இருந்தது கண்டு கடும் அதிர்ச்சி யடைந்துள்ளார். கடந்த வியாழனன்று காண்ட்டாஸ் விமானத்தில் பயணித்த அப்பெண் இருக்கை விளக்கை ஒளிரச் செய்யாமலேயே தனக்கு அளிக்கப்பட்ட உலர்பழங்கள் பருப்புகள் கொண்ட உணவுப்பொட்டலத்தை பிரித்து உண்ணத் தொடங்கியுள்ளார்.
"முதலில் சுவை வித்தியாசமாக இருந்ததை உணர்ந்தேன்; உடனடியாக விளக்கை ஒளிரச் செய்து பார்த்தேன் பொட்டலம் முழுதும் லார்வா எனப்படும் கூட்டுப்புழுக்களைக் கண்டு அதிர்ந்தேன்" என்கிறார்
42 வயதான விக்டோரியா க்ளெவன் என்கிற அப்பெண்மணி "தூக்கிவாரிப் போட்டது; பேச முடியவில்லை. அதிர்ந்துபோனேன்" என்றார்.

உடனடியாக அப்பெண்ணின் பதினைந்து வயது மகனும் தனக்கு அளிக்கப்பட்ட உணவுப் பொட்டலத்தைப் பிரிக்க அதிலும் கூட்டுப்புழுக்களே குவிந்திருந்தனவாம். காண்ட்டாஸ் விமான நிறுவனம் அப்பெண்மணியிடம் உடனடியாக தனது மன்னிப்பைச் சமர்ப்பித்து துறை வாரியான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.

"உளமாற வருந்துகிறோம். இச்சம்பவத்தை மிகவும் கடுமையாக எடுத்துக்கொள்கிறோம். எங்கள் உணவு விநியோகிப்பாளரிடம் புழுக்கள் உணவுப் பொட்டலத்தில் இடம்பிடித்ததற்கான காரணத்தைச் சொல்லும்படி வற்புறுத்துவோம்" என்று காண்ட்டாஸ் செய்தித் தொடர்பாளர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

2 comments:

இராஜராஜேஸ்வரி said...

அதிர்ச்சியளிக்கும் பகிர்வு..

abimanju said...

ஆனால் உன்மை தவறுகள் நடப்பது சகஜம்

Post a Comment

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | cheap international calls