Sunday, March 4, 2012

வேகமாக அழிந்து வரும் ஆஸ்திரேலிய பறவைகள்: ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை

விலங்குகள் பறவைகள் குறித்த ஆராய்ச்சியாளர்கள் மேற்கொள்ளும் ஆராய்ச்சிகளில் புதிய இனங்கள் கண்டறியப்படுவதுடன் அழிவின் விளிம்பில் உள்ள உயிரினங்களும் சுட்டி காட்டப்படுகின்றன.
இந்தியாவில் குருவி இனம் அதற்கு மிகச்சிறந்த உதாரணமாக உள்ளது. ஆங்காங்கே பரவலாக இருந்த குருவிகள் இப்போது பெருமளவில் குறைந்துவிட்டன.
இந்த இனத்தை பாதுகாக்க தற்போது விழிப்புணர்வு பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதேபோல் ரீஜன்ட் ஹனிஈட்டர் உள்ளிட்ட ஆஸ்திரேலிய பறவைகள் அழிவில் உள்ளதை ஆஸ்திரேலிய இயற்கை மற்றும் உயிரினங்கள் குறித்த ஆராய்ச்சி கழகம் சுட்டிக் காட்டி எச்சரித்துள்ளது.

இந்த இனங்கள் முற்றிலும் அழியும் முன்பு அவசர கதியில் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளனர். 1990ம் ஆண்டு எடுக்கப்பட்ட ஆய்வுகளும் இதனை சுட்டிக் காட்டியுள்ளதை நினைவுகூரும் ஆராய்ச்சியாளர்கள் மற்ற நாடுகளுடன் ஒப்பிடும் போது அழிந்து வரும் ஆஸ்திரேலிய பறவைகளின் எண்ணிக்கை மிக வேகமாக உள்ளது என்று தெரிவித்துள்ளனர்.

1 comments:

Thava said...

நன்றி சகோ..

Falling Down (1993) - ஹாலிவுட் "இந்தியன்" தாத்தா (திரைப்பார்வை)

Post a Comment

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | cheap international calls