கால வோட்டத்தில் கலைகளும் சடங்குகளும் மழுங்கடிக்கப்பட்டு இன்றைய இளம் சமுதாயத்தின் மனதில் மேவி நிற்பவை திரைப்படங்களே. கட்டாயம் என்ற மகுடத்தில் திருவிழாக்களும் சடங்கு முறைகளும் வழமை தவறாது பேணப்பட்டு வருகின்றன. “மானாட மயிலாட”, “சுப்பர் சிங்கர்”; போன்ற தொலைக்காட்சித் தொடர் நிகழ்வுகளும்; ஒவ்வொருவரின் இரசனைக்கு தீனி போடுவதாய் அமைந்து விடுகின்றது.
ஊர்த்; திருவிழாக்களில் நடைபெறும் நாடகங்கள் கூத்துக்கள் வில்லுப்பாட்டுக்கள் விடயங்களை அலசும் சுவாரஸ்யமான பட்டிமன்றங்கள் மனித மனங்களில் இடம் பிடித்துவிடுகின்றன தனித்துவம் மிக்க கூத்துக்களும் காலமாற்றத்தினால் காணாமல் போய்விட்டன.
சமுதாயத்தின் மாற்றமும், தேவையும் அதிகரித்து கூத்து ஆடியவர்கள் தொடர்ந்து ஆட முடியாமல் ஒரு நழுவல் நிலையை ஏற்படுத்தி விட்டன. மக்களோடு நேரடியாக உறவாடும் கலையாக நாடகங்கள் அமைகின்றன இன்றைய நவீன சினிமா உலகம் தோன்ற முன்னர் மக்களின்...
Tuesday, June 12, 2012
Monday, April 30, 2012
யாழ் மக்களின் மனங்களுக்கு கொண்டாட்டங்கள் தீணி போடுமா?
நிகழ்வுகளும் சடங்குகளும் ஏன் வருகின்றன என்ற மன விரக்த்தியோடு வாழும் யாழ் மக்களின் மனங்களுக்கு விருந்தளிக்க பொங்கலிற்கு வருடப்பிறப்பிற்கு அரங்கேற்றப்படும் கலை நிகழ்வுகளும் பாரம்பரிய விளையாட்டுக்களும் தீணி போடுவதாய் அமைகின்றனவா என்ற கேள்வி எழுப்பப்படுகின்றது.நிம்மதியற்ற மனங்களும் தொடர் இழப்புக்களையும் மரணப்பீதியையும் கடந்து வந்த மக்களின் மனங்கள் கொண்டாட்டங்களை சம்பிரதாயத்தின் அங்கமாக பார்க்கின்றனர். நாள் பார்த்து ஆரவாரத்துடன் அரங்கேற்றப்படும் கொண்டாட்ட நிகழ்வுகள் யாழை திருவிழாக்கோலம் போல அலங்கரித்திருக்கின்றன. இந்த கொண்டாட்டங்கள் ஏன் நடத்தப்படுகின்றன எதற்காக நடத்தப்படுகின்றன? என்ன எதிர்பார்ப்புடன் நடத்தப்படுகின்றன யார் நடத்துகின்றார்கள் என்ற...
கதைகள் சொல்லும் வயல்வெளி விளையாட்டு. சுவாரஸ்யமான அனுபவங்கள்
மனிதனுக்கு அடையாளங்கள் தவிர்க்க முடியாதவை. நினைவுகளும் அடையாளங்களும் இல்லை என்றால் நீங்கள் உங்களுடைய வீட்டிற்கே திரும்பிச்செல்ல முடியாது. காலத்தின் மாற்றமும் எம் எதிர்கால சந்ததிக்கு நினைவுகளை மட்டுமே கடத்திச்செல்ல முடிகின்றது. எம் பாட்டன் முப்பாட்டன் ஓடியாடி விளையாடிய வயல் வெளிகளையும் குச்சொழுங்கை களையும் கேட்டுப் பாருங்கள் சுவாரஸ்யமான கதைகளை சொல்லும்.தோட்டத்து வயல் வெளிகளில் மாலை நேர கூட்டமும் இரவு நேர குச்சொழுங்கை மகிழ்வுகளுமே அன்றைய நாட்களின் தினப் பொழுதுகள். சின்னச் சின்ன குடிசை வீடுகளும் சொந்த பந்தங்களின் கலகலப்பும் ஊர் முழுதும் தினக் கொண்டாட்டம் தான். கிராமத்தவர்களின் தொழிலாகவும் சொத்தாகவும் இருந்தது விவசாயம். காலை எழுந்து தோட்டத்திற்கு...
Thursday, April 26, 2012
பிரிட்டிஷ் பொருளாதாரம் நெருக்கடியில்!

பிரிட்டிஷ் பொருளாதாரம் பொருளாதார நிபுணர்களின் எதிர்வுகூறல்களுக்கு மாறாக மீண்டும் நெருக்கடி நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இந்த ஆண்டின் முதல் காலாண்டில் பிரிட்டனின் பொருளாதாரம் 0.2 வீத வீழ்ச்சியைக் காட்டுகிறது. இதே போன்று இதற்கு முந்தைய காலாண்டிலும் பிரிட்டிஷ் பொருளாதாரம் வீழ்ச்சியை கண்டது.டபுள் டிப் ரிஸஷன் எனப்படும் பொருளாதார நெருக்கடியிலிருந்து மீண்டெழுந்த மாத்திரத்திலேயே இன்னொரு சடுதியான வீழ்ச்சிக்குள் செல்லும் இரண்டாவது தடவை நெருக்கடியை 1970களுக்குப் பின்னர் பிரிட்டன் முதற்தடவையாக சந்திக்கிறது. நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளது என்பதை காட்டும் புள்ளிவிபரங்கள் மிக மிக ஏமாற்றம் அளிப்பதாக உள்ளது என்று பிரதமர் டேவிட் கேமரன் கூறியுள்ளார்.
இப்பொருளாதார...
Wednesday, April 25, 2012
சீனாவில் மலசலகூடத்துக்குள் வசிக்கும் குடும்பம்

சீன குடும்பம் ஒன்று மலசலகூடத்தை வீடாக்கி வாழ்ந்து வருகின்றது. வடகிழக்கு சீனாவில் உள்ள Jilin மாகாணத்தில் உள்ள குட்டிக் கிராமம் ஒன்றில் பிறந்தவர் Zeng Lingjun. ஆயினும் வீட்டு வறுமை காரணமாக பாடசாலைக்கு சென்று படிக்க இவரால் முடியவில்லை.வளர்ந்து பெரியவர் ஆன பிற்பாடு கிராமத்தை விட்டு வெளியேறினார். அவரது மாகாணத்தின் மிக பெரிய நகரமான ளூநலெயபெ இற்கு வந்து சேர்ந்தார். இவர் மிகுந்த பிரயாசைக்காரர். திறமையாக செருப்பு தைப்பார். இதனால் இப்பெரிய நகரத்தில் மாதாந்தம் ஓரளவு நல்ல வருமானத்தை விரைவாகவே சம்பாதிக்க தொடங்கினார். ஆயினும் சொந்த வீடு ஒன்றை வாங்குகின்ற அளவுக்கு வசதி கிடைக்கவில்லை. நண்பர் ஒருவரிடம் இருந்து ஆறு வருடங்களுக்கு...
உலகிலேயே மோசமான கணவர் ஐன்ஸ்டீன்தான்!?

உலகிலேயே மோசமான கணவர் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்தான் என்று ஒரு புத்தகத்தில் கூறப்பட்டுள்ளது.உலகிலேயே மிகப் பெரிய விஞ்ஞானியாக நாம் அனைவரும் ஐன்ஸ்டீனை நினைத்துக் கொண்டிருக்கையில் இப்படி ஒரு குண்டைப் போட்டுள்ளார் வால்டர் ஐசக்சன். இவர் எழுதிய 'நுiளெவநin: ர்ளை டுகைந யனெ ருniஎநசளந' என்ற நூலில்தான் உலகிலேயே மோசமான கணவர் ஐன்ஸ்டீன் என்று குறிப்பிட்டுள்ளார்.ஐன்ஸ்டீன் தொழில் ரீதியாக எத்தனையோ பெரிய சாதனைகளைப் படைத்திருந்தாலும் அற்புதங்களை நிகழ்த்தியிருந்தாலும் தனிப்பட்ட வாழ்க்கையில் எதையும் சாதிக்கவில்லை என்று அவர் கூறியுள்ளார்.
தன்னுடன் பணியாற்றிய விஞ்ஞானி மிலவா மாரிக்கைத்தான் கல்யாணம் செய்து கொண்டு வாழ்ககை நடத்தினார் ஐன்ஸ்டீன். இவர்களது திருமண வாழ்க்கை 11 ஆண்டு...
Monday, April 23, 2012
கனடாவில் ஆரம்பமாகும் பனிப்புயல்: வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரிக்கை

கனடாவின் ஓண்டேரியோ பகுதியில் இதமான வெப்பம் குறைந்துள்ளது. இன்னும் சில தினங்களில் பனிப்புயல் வீசப்போவதாக என்விரான்மெண்ட் கனடா என்ற வானிலை அமைப்பு தெரிவித்துள்ளது.மெக்ஸிகோ வளை குடாவில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடக்கு நோக்கி ஓண்டேரியோவுக்குள் வீசும்போது பனி பனிக்கட்டி மழை மற்றும் மழை எனப் பல பரிமாணங்களில் வெளிப்பட வாய்ப்பு உள்ளது. இந்நிகழ்வு ஞாயிறு இரவு தோன்றி திங்கள் முதல் செவ்வாய் வரை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
ஓண்டோரியோவின் தென்மேற்கு மற்றும் மத்திய தென் பகுதிகளில் திங்கட்கிழமை வாடைக்காற்று மணிக்கு 70 கி.மீ வேகத்தில் வீசும். அன்று 7 டிகிரி–10 டிகிரி என்கிற சராசரி வெப்பத்தை விடக் குறைவாக இருக்கும் காற்றின் வேகம் செவ்வாய்க்கிழமை...
இறந்த பின் மனைவியை புதைப்பதற்காக குட்டி தீவை விலைக்கு வாங்கிய பள்ளி ஆசிரியர்

இறந்த பிறகு தனது உடலையும் மனைவியின் உடலையும் புதைப்பதற்காக இங்கிலாந்தில் குட்டி தீவை விலைக்கு வாங்கி உள்ளார் பள்ளி ஆசிரியர் கசிமிர் ரோசின்ஸ்கி இங்கிலாந்தின் ஹெர்ட்போர்ட் ஷயர் கவுன்டியில் உள்ளது செயின்ட் ஆல்பன்ஸ் நகரம். இங்கு மெக்கன்சி என்ற பெயரில் குட்டி தீவு உள்ளது.இங்கு தண்ணீர் சாலைகள் மின்சார வசதி எதுவும் இல்லை. இந்த குட்டி தீவு 18 மாதத்துக்கு முன்பு விலைக்கு வந்தது. ஆனால் யாரும் வாங்கவில்லை. இந்நிலையில் செயின்ட் ஆல்பன்ஸ் நகரில் உள்ள பீச்வுட் பார்க் பள்ளி ஆசிரியர் கசிமிர் ரோசின்ஸ்கி குட்டி தீவை 46 லட்சம் ரூபாய்க்கு வாங்கி உள்ளார்.
கசிமிருக்கு தற்போது 50 வயதாகிறது. மனைவி பவுலின் மகன் மைல்ஸ்(12) மகள் லிடியாவுடன்(11) வாழ்ந்து வருகிறார்.
இதுகுறித்து...