Saturday, April 21, 2012

இலங்கையில் கோழி "பிரசவித்தது'!!வழக்கத்திற்கு மாறாக முட்டைக்குப் பதிலாக கோழி குஞ்சு பொரித்த அதிசயம்

வழக்கத்திற்கு மாறாக முட்டைக்குப் பதிலாக கோழி குஞ்சு பொரித்த அதிசயம் இலங்கையில் நடந்துள்ளது. உலகில் இன்னமும் விடை காணப்பட முடியாமல் பல்வேறு பட்டிமன்றங்கள் உட்பட விவாத மேடைகளில் முக்கிய தலைப்பாக இருந்து வருவது "கோழி முதலா அல்லது முட்டை முதலா' என்பது தான். பொதுவாக முட்டையிட்டதும் கோழி அதன் மீதமர்ந்து அடை காக்கும். கோழியின் உடல் வெப்பத்தால் முட்டையில் இருந்து சில நாட்களுக்குப் பின் கோழிக் குஞ்சு வெளிவரும். இது தான் வழக்கம். ஆனால் இலங்கையில் கோழியொன்று முட்டையிடாமல் நேரடியாக குஞ்சை பிரசவித்த சம்பவம் நடந்துள்ளது.
இதுகுறித்து கொழும்புவில் உள்ள கால்நடை மருத்துவர் பி.ஆர்.யாப்பா என்பவர் கூறுகையில் "இந்த கோழியின் கருப்பையில் ஏற்பட்ட மாற்றங்கள் காரணமாக கோழியின் வயிற்றிலேயே முட்டை தங்கிவிட்டது. கோழிக்குள்ளேயே இருந்த முட்டையிலிருந்து 21 நாட்கள் கழித்து குஞ்சு வெளிவந்துள்ளது. குஞ்சை பிரசவித்த கோழி அடுத்த சில நிமிடங்களில் இறந்து விட்டது. கோழி இறந்ததற்கான காரணம் குறித்து நடத்தப்பட்ட பரிசோதனையில் உள்காயங்கள் காரணமாகத் தான் கோழி இறக்க நேரிட்டது என்பது தெரியவந்தது.

Friday, April 20, 2012

தமிழீழம் குறித்து பேசும் கருணாநிதி பயங்கரவாதி: கோத்தபாய பாய்ச்சல்

தமீழீழம் குறித்து பேசுபவர்களை பயங்கரவாதிகளாக கருதுவதாகவும் தமீழீழத்தை இந்தியாவில் வைத்துக் கொள்ளும் படியும் இலங்கை ஜனாதிபதி ராஜபக்ச தம்பி கோத்தபாய ஆவேசமாக கூறியுள்ளார்.
தனித் தமிழீழம் அமைக்க ஐ.நாவின் கண்காணிப்பில் பொதுவாக்கெடுப்பு நடத்தும் யோசனைக்கு திமுக தலைவர் மு.கருணாநிதி ஆதரவு தெரிவித்துள்ளதை அடுத்தே அவரைக் கடுமையாக பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச விமர்சித்துள்ளார். இலங்கையில் வாழும் தமிழர்களை விட மிகவும் அதிகமான தமிழர்கள் தமிழ்நாட்டில் வாழ்கின்றனர். அவரால் இலங்கையில் ஈழத்தை உருவாக்க முடியாது. இது ஒரு இறைமையுள்ள நாடு.

ஈழம் பற்றி யார் பேசுகிறார்களோ அவர்களை நாம் பயங்கரவாதிகளாகவே கருதுகிறோம். இலங்கையில் இப்போது போர் இல்லை. இன இணக்கப்பாடு உள்ளது.

எல்லோருடைய வாழ்வும் அமைதியாக உள்ளது. இலங்கையில் உள்ள தமிழ் மக்களை கருணாநிதி தூண்டிவிடக் கூடாது.

சர்ச்சைக்குரிய அறிக்கைகளின் மூலம் எமது நாட்டை அழிக்கும் இந்திய அரசியல்வாதிகளில் கருணாநிதியும் ஒருவர். இது அரசியல் ஆதாயத்துக்கான தரம்குறைந்த தந்திரோபாயம்.

எமது நாடு சுதந்திரமான ஒரு நாடு என்பதை கருணாநிதி புரிந்து கொள்ள வேண்டும். ஈழத்தை உருவாக்க அவர் முயற்சிக்கக் கூடாது.

அவருக்கு ஈழத்தை அமைக்கும் விருப்பம் இருந்தால் அதை பெருமளவு தமிழர்கள் வசிக்கும் தமிழ்நாட்டில் உருவாக்கட்டும் என கோத்தபாய ராஜபக்ச மேலும் தெரிவித்துள்ளார்

சுவிஸ்சில் புலம்பெயர்ந்து வருவோருக்கான புதிய திட்டம்

எட்டு ஐரோப்பிய நாடுகளிலிருந்தும் புலம் பெயர்ந்து ஸ்விட்சர்லாந்து வருவதற்கு மீண்டும் ஒதுக்கீடு கொண்டுவரும் அரசின் திட்டம் குறித்து பல பத்திரிகைகள் தங்களின் கருத்துக்களை வெளியிட்டுள்ளன.
ஐரோப்பிய நாடுகளான போலந்து வங்கேரி செக் குடியரசு ஸ்லோவேனியா சுலோவேகியா மற்றும் லித்துவேனியா பால்டிக் நாடுகள் லாத்வியா எஸ்டோனியா போன்றவற்றிலிருந்து 2000பேர் வரை ஸ்விட்சர்லாந்திற்கு புலம்பெயர்ந்து வர புதிய ஒதுக்கீட்டுத் திட்டத்தில் வழங்கப்பட்டுள்ளது.

இவர்கள் 12 மாதம் வரை இங்கு தங்கலாம். இந்தத் திட்டம் குறித்து பத்திரிகைகள் தமது விமர்சனத்தை வெளியிட்டுள்ளன. அவற்றில் சில ஆதரவும் சில எதிர்ப்பும் தெரிவித்துள்ளன.

ஐரோப்பிய யூனியனுக்கும் ஸ்விட்சர்லாந்துக்கும் இடையிலான இரு தரப்பு ஒப்பந்தத்தின் அடிப்படையில் மக்கள் எவ்விதக் கட்டுப்பாட்டுமின்றி ஐரோப்பாவிற்குப் போய் வர இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மே முதல் நாளிலிருந்து அறிமுகமாகும் இத்திட்டம் மறு ஆய்வுக்கு உட்பத்தப்படும்.

ஸ்விட்சர்லாந்துக்கும் ஐரோப்பிய யூனியனுக்கும் இடையிலான நல்லுறவு இதனால் மேம்படும் என்றாலும் இத்திட்டத்தினை செம்மையாக நிறைவேற்றுவது குறித்தும் இதன் விளைவுகள் குறித்தும் பல பத்திரிகைகள் தலையங்கம் தீட்டியுள்ளன.


ஜேர்மனியில் கார் ஓட்டுவதற்கு உரிமம் பெறும் வயதை 16ஆக அறிவிக்க முடிவு

ஜேர்மனியில் கார் ஓட்டுவதற்கு உரிமம் பெறும் வயதை 16ஆக அறிவிக்க அரசு திட்டமிட்டுள்ளது. மேலும் பல்வேறு புதிய விதிமுறைகளும் அறிமுகமாக உள்ளது.
தற்போதைய சட்டப்படி ஜேர்மனியில் 17 வயதினர் பெற்றோர்களின் மேற்பார்வையுடன் கார் ஓட்டலாம்.
நுகர்வோர் பாதுகாப்பு அமைச்சகத்தின் நாடாளுமன்ற அரசுச் செயலரான பீட்டர் பிளெசர் கார் ஓட்டுவதற்கு உரிமம் பெறும் வயதை 18ஆக அறிவிப்பதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனால் குறிப்பாக கிராமப்புறங்களில் வசிக்கும் இளைஞர்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாவர் என்றார்.

இவர் ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில் தொழிற் பயிற்சிக்கு செல்லும் கிராமப்புற இளைஞர்கள் பெரும் அவதிக்கு உள்ளாகுகின்றனர் இவர்களை 16 வயதிலேயே கார் ஓட்ட அனுமதித்தால் கிராமங்களில் தங்குவதையும் விரும்புவர். இவர்கள் கார் ஓட்டுவதற்கு பெற்றோரின் அனுமதியையும் பெறும் படி வலியுறுத்த வேண்டும் என்றார்.

ஜேர்மனியின் விபத்துக் காப்பீடு ஆய்வுக் குழு 16 வயதினர் கார் ஓட்டுவதால் விபத்துகள் அதிகரிக்கும் என்ற கருதுகிறது. வயதான நபர்களை விட 18 முதல் 24 வயதினர் அதிகமாக விபத்துகளில் சிக்குகின்றனர் என்பதால் இக்குழு 16 வயதில் கார் ஓட்ட அனுமதி வழங்குவது ஆபத்தை ஏற்படுத்தும் என்றும் கண்டனம் தெரிவிக்கின்றது.

தினமும் 1 பாக்கெட் சிகரெட் பிடிக்கும் 8 வயது சிறுவன்

இந்தோனோஷியாவை சேர்ந்தவன் இப்ராகிம். 8 வயது சிறுவனான இவன் தினமும் 1 பாக்கெட் சிகரெட் பிடிக்கிறான்.
ஒரு வயது குழந்தையாக இருந்த போது இவனுக்கு சிகரெட் பிடிக்கும் பழக்கம் ஏற்பட்டது. தற்போதுஇ 4 வயதில் இருந்து 1 பாக்கெட் சிகரெட் பிடித்து வருகிறான். இதை அறிந்த அந்நாட்டு குழந்தைகள் நலவாழ்வு துறை அவனது சிகரெட் பிடிக்கும் பழக்கத்தை கைவிட தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. கடந்த மாதம் (மார்ச்) முதல் அதற்கான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Wednesday, April 18, 2012

செசன்யாவில் டைனோசர் முட்டைகள்

செசன்யா நாட்டில் டைனோசர் நாற்பதுக்கும் மேற்பட்ட முட்டை படிமங்கள் கண்டெடுக்கப் பட்டுள்ளன. ரஷியாவைச் சேர்ந்த புவியியல் ஆய்வாளர்கள் இதனை கண்டு பிடித்துள்ளனர்.
60 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு இந்த பூமியில் வாழ்ந்தவை டைனோசர்கள். பூமியில் வாழ்ந்த விலங்குகளிலே மிகவும் பிரம்மாண்டமானவை அவை. புவியியல் மாற்றங்களினால் காலப்போக்கில் அவை அழிந்து விட்டாலும் அவற்றின் எலும்புகள் முட்டைகள் மட்டும் படிமங்களாக உலகம் முழுவதும் கண்டெடுக்கப்பட்டு வருகின்றன.

செசன்யா நாட்டில் ஆய்வு செய்ய புவியியல் ஆய்வாளர்கள் அங்கு ஒரு பாறையில் இருந்த 40 டைனோசர் முட்டை படிமங்களை கண்டுபிடித்துள்ளனர். இது குறித்து செசன் மாநில பல்கலைக்கழகத்தின் புவியியல்துறை பேராசிரியர் கூறியதாவது

முன்னாள் சோவியத் ஜார்ஜியாவின் எல்லைப் பகுதியில் இருந்த மலையை சாலைப் பகுதிக்காக உடைத்து எடுத்த போது அந்த மலையில் ஓவல் வடிவ படிமங்கள் அதிகம் இருந்தன. அவற்றை புவியியல் நிபுணர்கள் அடங்கிய குழு ஆய்வு செய்த போது அவை டைனோசர் முட்டை படிமங்கள் என்பது தெரியவந்தது.

அந்த பாறையை மென்மையாக உடைத்து தனியாக சேகரித்ததில் 40 முட்டை படிமங்கள் கிடைத்தன. அவை 25 செமீ முதல் 1 மீ வரை உள்ளன என்றார். டைனோசர் முட்டை உள்ள பகுதியை சுற்றுலா தலமாக செசன்யா அரசு முடிவு செய்துள்ளது.

செசன்யா நாட்டில் 1994 முதல் 2001 வரை போர் நடைபெற்றது. ரஷ்யாவின் நிலப்பகுதி என்று ரஷ்யாநாட்டினரும் நாங்கள் சுதந்திர நாட்டை சேர்ந்தவர்கள் என்று செசன்யா நாட்டினரும் தெரிவித்து வருகின்றனர். தற்போது போர் முடிவுக்கு வந்ததை அடுத்து செசன்யாவை புணரமைக்க பல மில்லியன் டாலர் பணம் ஒதுக்கப்பட்டுள்ளது. அதேபோல் செசன்யாவிற்கு சுற்றுலா பயணிகள் வருவதை ஊக்குவிக்கும் வகையிலும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக செசன்யா நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

உலகில் மிகவும் அசிங்கமான பறவை

பிறந்த உடனே இறக்கைகள் ஏதும் இல்லாமல் வினோதமாக தோற்றமளித்ததால் நெல்சன் என்ற இந்த பறவை தனது பெற்றோர்களால் கைவிடப்பட்டது.
ஜேர்மனியில் உள்ள Bergzooவில் நெல்சன் கடந்த மாதம் பிறந்தது.
பிறந்த உடனேயே இதன் பெற்றோரால் நிராகரிக்கப்பட்டதால் நான்கு வாரங்கள் ஐnஉரடியவழச-ல் வைத்து பராமரிக்கப்பட்டது. இருப்பினும் தனக்கு என்றாவது ஒருநாள் இறக்கை முளைக்கும் என்ற நம்பிக்கையுடன் இந்த பறவை உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறது.

டிஸ்கவரி விண்கலம் ஓய்வுபெற்றது!

அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா 1984 இல் உருவாக்கிய விண்கலம் டிஸ்கவரி. 18ம் நூற்றாண்டை சேர்ந்த இங்கிலாந்து ஆராய்ச்சி கப்பலின் பெயரை நினைவு கூர்ந்து இப்பெயர் வைக்கப்பட்டது. 1984ம் ஆண்டு ஆகஸ்ட் 30ம் தேதி பயணம் தொடங்கிய டிஸ்கவரி 27 ஆண்டுகளில் 39 முறை வெற்றிகரமாக பறந்து தனது கடைசி பயணத்தை கடந்த ஆண்டு மார்ச் 9ம் தேதி நிறைவு செய்தது.
மொத்தத்தில் 365 நாட்கள் (ஒரு ஆண்டு) விண்ணில் இருந்து சாதனை படைத்திருக்கிறது. இதையடுத்து பணியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவிக்கப்பட்டது. வர்ஜீனியா மாநிலம் சான்டிலி நகரில் உள்ள தேசிய விண்வெளி அருங்காட்சியகத்துக்கு நாசா 747 விண்கலம்தாங்கி விமானம் மூலம் நேற்று எடுத்து செல்லப்பட்டது. முன்னதாக தலைநகர் வாஷிங்டன் பகுதியில் முக்கால் மணி நேரம் வட்டமடித்த டிஸ்கவரிக்கு மக்கள் பிரியாவிடை கொடுத்தனர்.

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | cheap international calls