Wednesday, April 11, 2012

இந்தோனேஷியாவில் உள்பட அனைத்து நாடுகளிலும் சுனாமி எச்சரிக்கை வாபஸ்

இந்தோனேஷியாவில் இன்று மதியம் சுமத்ரா தீவை மையம் கொண்டு கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 8.9 ஆக பதிவானது. இதையடுத்து இந்தோனேஷியா உள்ளிட்ட 28 நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடப்பட்டிருந்தது. 
இந்நிலையில் ஹவாய் தீவில் அமைந்துள்ள பசுபிக் சுனாமி எச்சரிக்கை மையம் இந்தோனேஷியால் ஏற்பட்ட நிலநடுக்கம் குறித்து கூறியதாவது 
இந்தோனேஷியாவில் இன்று மதியம் ஏற்பட்ட இரண்டு நிலநடுக்கங்களும் சுனாமியை ஏற்படுத்தக்கூடிய நிலநடுக்கங்கள் இல்லை. அது வேறுவிதமான விளைவுகளை உண்டாக்கக்கூடிய நிலநடுக்கங்களே. 

இந்நிலநடுக்கத்தால் இந்தோனேஷியாவில் உள்ள கடற்கரை பகுதிகளில் பாதிப்பு இருக்கும். தற்போது அரை மணி நேரத்திற்கு முன்னதாக ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக ஏதேனும் சுனாமி ஏற்படுமா என்பது குறித்து ஆய்வு செய்து வருகிறோம். 

இந்த நிலநடுக்கத்தால் சுமார் அரை மீட்டரிலிருந்து 1 மீட்டர் அளவுக்கே சுனாமி அலைகள் எழும்பும் எனவும் தெரிவித்துள்ளது. இதனால் தமிழகம் உள்ளிட்ட இந்திய கடற்கரையோர பகுதிகளில் சுனாமி ஏற்பட வாய்ப்பு இல்லை என்று முதலில் தெரிவித்திருந்தது.

இருப்பினும் சர்வதேச கடல் பகுதிகள் அனைத்தும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் இந்திய கடல் பகுதிகளையும் தீவிரமாக கண்காணித்து வருகிறோம் எனவும் அம்மையம் தெரிவித்துள்ளது. 

இந்தோனேஷியாவில் முதல் நிலநடுக்கத்தை அடுத்து தொடர்ந்து இரண்டு நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளதால் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இது சுமார் 6 மீட்டர் அளவில் அலைகள் எழும்பும் எனவும் எச்சரிக்கை விடப்பட்டிருந்தது.

இதனால் இந்திய கடற்கரையோரப் பகுதிகளிலும் சுனாமி எச்சரிக்கை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இந்தோனேஷியாவில் சிமியூலு தீவில் அடுத்தடுத்து ஏற்பட்ட 4 நிலநடுக்கங்களால் அங்கு சுனாமி எச்சரிக்கை விடப்பட்டிருந்தது. அங்கு 6 மீட்டர் அளவுக்கு சுனாமி அலைகள் தாக்கலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது.  மேலும் அப்பகுதியில் முற்றிலுமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.

தற்போது கிடைத்துள்ள தகவலின் படி:

பசுபிக் சுனாமி மையம் அறிவித்திருந்த சுனாமி எச்சரிக்கை வாபஸ் பெற்றுக் கொள்வதாக அறிவித்துள்ளது. நிலநடுக்கம் ஏற்பட்ட கடற்பகுதியை கண்காணித்து வந்ததில் ஆபத்தை விளைவிக்கும் சுனாமி அலைகள் ஏற்படவில்லை. இதனால் கண்காணிப்பு நிறுத்தப்படுகிறது என்றும் 28 நாடுகளுக்குவிடப்பட்ட சுனாமி எச்சரிக்கை வாபஸ் பெறப்பட்டதாக அம்மையம் தெரிவித்துள்ளது.

உலகின் மிகச்சிறிய கோழி முட்டை: கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்தது

இங்கிலாந்தின் டெர்பிஷயர் பகுதியில் உள்ள பேக்வெல் என்ற இடத்தில் ஹாரி இவான்ஸ்(வயது 58) என்பவர் கோழி பண்ணை வைத்துள்ளார்.
அவரது பண்ணையில் உள்ள ஆர்பிங்டான் என்ற வகையை சேர்ந்த கோழி மிகச்சிறிய முட்டை இட்டுள்ளது.
உலகிலேயே இவ்வளவு சின்னதாக கோழி முட்டை போட்டது இதுதான் முதல் முறை என்பதால் கின்னஸ் சாதனையில் இடம் பெற உள்ளது.
இதுபற்றி இவான்ஸ் கூறுகையில் ஒருநாள் காலை வழக்கம் போல முட்டைகளை சேகரிக்க பண்ணைக்கு சென்றேன். என்னை பார்த்தவுடன் இந்த கோழி நகர்ந்தது. அங்கு மிகமிக சிறிய முட்டை ஒன்று இருந்தது.

வேறு பறவையின் முட்டையாக இருக்கலாம் என்று நினைத்தேன். கோழி முட்டைதான் என்பதை உறுதி செய்த பிறகு கின்னஸ் அதிகாரிகளுக்கு தெரிவித்தேன். இதுவரை கின்னஸ் சாதனை பட்டியலில் கோழி முட்டை இடம்பெற்றதில்லை என்றார்கள்.

இந்த முட்டை பற்றிய விவரத்தை சேர்க்க முடியுமா என்று தெரியவில்லை என்றும் கூறினார்கள். என் கோழியின் சாதனை எப்படியாவது கின்னஸில் இடம்பெற்றுவிட வேண்டும் என விரும்பினேன். ஒருவழியாக ஒப்புக்கொண்டார்கள்.

முட்டையை மிக பாதுகாப்பாக பிரிட்ஜில் வைத்து பராமரித்து வருகிறேன். கோழிக்கு ஒன்றரை வயது ஆகிறது. இதுவரை வழக்கமான சைஸில்தான் முட்டை போட்டது. என்ன காரணத்தாலோ சிறிதாக போட்டிருக்கிறது என்றார்.

முட்டை லேசான பழுப்பு நிறத்தில் இருக்கிறது. பொதுவாக முட்டைகள் 5.7 செமீ நீளம் 4.4 செமீ சுற்றளவு 57 கிராம் எடையுடன் இருக்கும். இது 2.5 செமீ நீளம் 2 செமீ சுற்றளவு 7.3 கிராம் எடைதான் இருக்கிறது என்று கின்னஸ் அதிகாரிகள் கூறினர்.




Tuesday, April 10, 2012

டைட்டானிக் கப்பல் கவிழ்ந்து இன்றுடன் 100 ஆண்டுகள்!

உலகை உருக்கிய வரலாற்றுச் சம்பவங்களில் முக்கியமானதாக டைட்டானிக் கப்பல் கவிழ்ந்ததும் கருதப்படுகிறது. 1912ம் ஆண்டு ஏப். 10ம் தேதி தனது முதலும் கடைசியுமான பயணத்தை துவக்கிய இந்த கப்பலை நினைவு கூறும் விதமாக உலகம் முழுவதும் நூறாவது ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. டைட்டானிக் வட அயர்லாந்தின் பெல்பாஸ்ட் நகரில் உள்ள ஹார்லாண்ட் மற்றும் ஊல்ப் நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது.
உலகின் மிகப்பெரிய முதல் நீராவி ஆடம்பர கப்பல் இது. 1909 முதல் மூன்று ஆண்டுகளுக்கு இக்கப்பலின் கட்டுமானப் பணிகள் நடந்தன. 882 அடி நீளம் 175 அடி உயரம் 46328 டன் எடை 9 தளங்களையும் கொண்டது.

435 பயணிகள் 892 பணியாட்கள் தங்கலாம். ஆபத்து காலத்தில் உதவும் வகையில் 20 லைப் படகுகள் இருந்தன. இவற்றின் உதவியுடன் 1178 பேர் உயிர் பிழைக்கலாம்.

1912இ ஏப்.12ல் இங்கிலாந்தில் உள்ள சவுத்தாம்ப்டன் துறைமுகத்திலிருந்து நியூயார்க்கை நோக்கி கேப்டன் எட்வர்டு ஸ்மித் தலைமையில் 2224 பயணிகளுடன் தன் பயணத்தை துவக்கிய டைட்டானிக் கப்பல் ஏப்.14ம் தேதி நள்ளிரவு 11.40 மணிக்கு அட்லாண்டிக் கடல் பனிப்பாறையின் மீது மோதியது. மீட்புப் படையினர் வருவதற்குள் 2 மணி 40 நிமிடங்களில் முற்றிலுமாக மூழ்கியது.

கடலில் இருந்த திசை காட்டும் கருவி சரியாக செயல்படாததே விபத்திற்கு காரணம் என கப்பலில் பயணம் செய்த கேப்டனின் பேத்தி தனது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார். இதில் பயணம் செய்த 1514 பேர் இறந்தனர்.மற்றவர்கள் லைப் படகுகள் உதவியுடன் தப்பித்தனர். கடலில் விழுந்தவர்கள் கடும் குளிர் (-2 டிகிரி செல்சியஸ்) காரணமாக உறைந்து இறந்தனர்.

விபத்திற்குள்ளான கப்பலின் பாகங்கள் 12000 அடி ஆழத்தில் மண்ணில் புதைந்தன. 1985 செப்.1ல் அமெரிக்காவைச் சேர்ந்த ராபர்ட் பாலர்டு பிரான்சை சேர்ந்த ஜீன் லூயிஸ் ஆகியோர் மேற்கொண்ட ஆய்வால் கப்பலின் உதிரிபாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அந்த பாகங்களை எடுத்த போட்டோ ஒன்று மட்டுமே பல கோடிக்கு விற்பனையானது.

1997ம் ஆண்டு இச்சம்பவத்தை அடிப்படையாகவும் காதலை மையமாகவும் கொண்டு ஹாலிவுட் இயக்குனர் ஜேம்ஸ் காமரூன் டைட்டானிக் என்ற படத்தை தயாரித்தார். கப்பலையும் விபத்தையும் நேரில் பார்ப்பதைப் போன்ற உணர்வை இந்த படம் ஏற்படுத்தியது. இப்படம் வசூலை வாரிக் குவித்தது மட்டுமல்லாமல் 11 ஆஸ்கர் விருதுகளையும் வென்றது. தற்போது கப்பலின் நூறாவது ஆண்டை கொண்டாடும் வகையில் இந்த படம் மீண்டும் 3டி தொழில்நுட்பத்தில் மாற்றி அமைக்கப்பட்டு மீண்டும் வசூல் செய்கிறது.

டைட்டானிக் கப்பல் மூழ்கிய இடத்தில் அஞ்சலி செலுத்தும் நோக்கில் தி பால்மோரல் என்ற கப்பல் நேற்று சவுத்தாம்டனிலிருந்து புறப்பட்டு டைட்டானிக் கப்பல் சென்ற அதே பாதையிலே பயணித்து ஏப்ரல் 15ம் தேதி விபத்து நடந்த இடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்த உள்ளது.

Monday, April 9, 2012

பனிப்பாறையில் புதைந்த ஒருவரைக் கூட மீட்க முடியாமல் பாகிஸ்தான் இராணுவம் திணறல்!

சியாசின் பகுதியில் பனிப் பாறை சரிவில் புதையுண்டவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இந்திய- பாகிஸ்தான் எல்லையில் உள்ள சியாசின் மலைப் பகுதியில் நேற்று முன்தினம் பனிச்சரிவு ஏற்பட்டதில் ஜியாரி என்ற இடத்தில் முகாமிட்டிருந்த பாகிஸ்தானிய வீரர்கள் 124 பேர் உள்ளிட்ட 135 பேர் பலியாயினர். 19 ஆயிரம் அடி உயரத்தில் மைனஸ் 50 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை கொண்ட இந்த பகுதியில் நேற்று முன்தினம் இரவு போதிய வெளிச்சம் இல்லாததால் மீட்புப் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டன.


பனிப்பாறையில் சிக்கியுள்ள சடலங்களை மீட்க மோப்பநாய்களும் இயந்திரங்களும் நேற்று கொண்டு வரப்பட்டன. பாகிஸ்தான் ராணுவத் தளபதி அஷ்பக் பர்வேஸ் கயானி விபத்து நடந்த இடத்தை நேற்று பார்வையிட்டார். பனிப்பாறை சரிவு ஏற்பட்ட இடத்தில் ஒரு கி.மீ. நீளத்துக்கு 80 அடி உயரத்துக்கு பனித் துகள்கள் கொட்டிக் கிடக்கின்றன.

இதன் அடியில் சிக்குண்ட சடலங்களை மீட்க ராவல்பிண்டியில் இருந்து நவீன இயந்திரங்கள் நேற்று கொண்டு வரப்பட்டுள்ளன. பனிப்பாறையில் சிக்கி யாராவது உயிரோடு இருந்தால் அவர்களை உடனடியாக மீட்க ஹெலிகாப்டர்களும் கூடுதல் ராணுவ வீரர்களும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சம்பவ இடத்தில் பனிப் பொழிவு தொடர்வதால் மீட்புப் பணியில் தொய்வு காணப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பனி பாறையில் சிக்கியுள்ளவர்களை மீட்க தேவையான மனிதாபிமான உதவிகளை செய்ய தாயாராக உள்ளதாக பிரதமர் மன்மோகன்சிங் டில்லி வந்துள்ள பாகிஸ்தான் அதிபர் சர்தாரியிடம் தெரிவித்துள்ளார். தேவைப்படும் பட்சத்தில் இந்தியாவின் உதவியை ஏற்பதாக சர்தாரி கூறியுள்ளார்.

Sunday, April 8, 2012

இங்கிலாந்தில் சிகரெட்டை விளம்பரப்படுத்த தடை


இங்கிலாந்தில் உள்ள கடைகளில் சிகரெட் பாக்கெட்டுகளை விளம்பரப்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
சிகரெட் பாக்கெட்டுகளை அதிகளவு விற்பனை செய்ய வேண்டும் என்ற நோக்கத்துடன் வரிசையாக அடுக்கி வைத்து விற்பனை செய்து வருகின்றனர்.
இவ்வாறு விளம்பரப்படுத்துவதன் மூலம் அவை இளைஞர்களை சுண்டி இழுத்து புகைக்கும் ஆவலை தூண்டுகிறது.
எனவே இளைஞர்கள் அவற்றை வாங்கி புகைப்பதால் புற்றுநோய் காசநோய் உட்பட பல்வேறு நோய்களுக்கு ஆளாகுகின்றனர்.



இதை தடுக்க கடைகளில் சிகரெட் பாக்கெட்டுகளை அடுக்கி வைத்து விளம்பரப்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடை நேற்று முதல் அமுலுக்கு வந்தது.

அரசின் இந்த நடவடிக்கையை பலர் வரவேற்றுள்ள போதிலும் சிலர் எதிர்ப்பு தெரிவித்து இருக்கின்றனர். இது தனி மனித சுதந்திரத்துக்கு எதிரானது என்றும் பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

கொலையாளியை பிடிக்க ஆவியின் உதவியை நாடும் பொலிசார்

தமிழக முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் தம்பி ராமஜெயம் கடந்த மாதம் 29ம் திகதி கடத்திக் கொலை செய்யப்பட்டார்.
அவரை கொலை செய்த கூலிப்படையையும் அவர்களை ஏவிய முக்கிய பிரமுகர்களையும் பிடிக்க 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளது.
ராமஜெயத்தின் தொழில் எதிரிகள் பணம் கொடுக்கல் வாங்கலில் மோதியவர்கள் தனிப்பட்ட வாழ்க்கை விவகாரம் என பல கோணங்களில் விசாரணை நடந்தது. 500-க்கும் மேற்பட்டவர்களிடம் விசாரணை நடத்தியும் சரியான துப்பு கிடைக்கவில்லை.


இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த ஒரு காதல் ஜோடி திருமண விவகாரத்தில் ராமஜெயம் தலையிட்டதால் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என கூறப்பட்டது.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதியை சேர்ந்த அந்த காதல் திருமண ஜோடி இருக்கும் இடம் பற்றி இதுவரை துப்பு துலங்கவில்லை. இதனால் தனிப்படை பொலிசார் சோர்ந்து போய் உள்ளனர்.

ராமஜெயத்தை கொலை செய்த கூலிப்படையை பிடித்து அதன் மூலம் பின்னணியில் உள்ளவர்களை மடக்கலாம் என்ற விசாரணையிலும் ஏமாற்றமே ஏற்பட்டு உள்ளது.

எனவே ராமஜெயத்தை கொன்ற கூலிப்படை கல்லணை வழியாக சென்றது என்பதால் அவர்கள் தஞ்சை நாகை மாவட்டத்தை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என கூறப்பட்டதால் அதன் அடிப்படையில் அந்த மாவட்டத்தை சேர்ந்த ரவுடிகள் யார்-யார்? வெளியில் நடமாடுகிறார்கள் என திருச்சி மத்திய சிறையில் இருந்து பட்டியல் பெற்று விசாரணை நடந்தது.

சிறையில் இருந்த ரவுடிகளிடமும் விசாரணை நடந்தது. ஆனால் அதிலும் எந்த முன்னேற்றமும் இல்லை. இதனால் தனிப்படை பொலிசார் ஆவி மூலம் ராமஜெயம் கொலையாளிகளை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளனர்.

திருச்சியில் புத்தூர் வயலூர் ரோடு பகுதியில் ஆவியை வரவழைத்து கொலை திருட்டில் ஈடுபடுபவர்களை அடையாளம் காட்டுபவர்களை தனிப்படை அணுகி உள்ளது.

ஆங்கில எழுத்துக்கள் யு முதல் ணு வரை மற்றும் 1 முதல் ஜீரோ வரை எண்களை தரையில் எழுதி ஒரு கவிழ்த்திய டம்ளரில் ஆட்காட்டி விரலை வைத்து ஆவியை வரவழைப்பார்கள்.

அப்போது இறந்தவரின் ஆவி ஆட்காட்டி விரல் வைத்து உள்ள டம்ளரை கொலையாளியின் ஆங்கில முதல் எழுத்து எது? என்பதை காட்டும் வகையில் அங்கு நகர்ந்து செல்லும். இதன் மூலம் குற்றவாளி பெயர் என்ன? அவர் எந்த திசையில் உள்ளார் என்பது தெரியவரும்.

கொலையானவர்களையோ அல்லது அவரது குடும்பத்தில் இதற்கு முன் இறந்தவர்களையோ மனதில் நினைத்து 5 நிமிடம் பூஜை செய்து ஆவியை வரவழைப்பார்களாம். அப்போது ஆவி வந்து கொலையாளியின் பெயரை அடையாளம் காட்டும் என்று கூறப்படுகிறது.

செய்யாத குற்றத்திற்காக தண்டனையை அனுபவித்த பிரெஞ்சு நபர்

ஒரே பெயரை கொண்ட காரணத்தினால் குற்றவாளி என கைது செய்யப்பட்டு பிரான்சை சேர்ந்த நபர் ஒருவர் சிறைத் தண்டனையை அனுபவித்துள்ளார்.
 Rachid Alamin  (வயது 29) கடந்த 2011ம் ஆண்டு நவம்பர் மாதம் பிரான்ஸ்- பெல்ஜியம் எல்லைப் பகுதி அருகே உள்ள நகர் ஒன்றில் கைது செய்யப்பட்டார்.
இதே பெயரை கொண்ட நபர் ஒருவர் போதைப் பொருள் வழக்கில் கடந்த 2009ம் ஆண்டு குற்றவாளி என அறியப்பட்டார்.



இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்ததில் குற்றவாளியின் பெயரை கொண்ட அவரது உறவினர் ஒருவரை கைது செய்தனர்.

அதன் பின் விசாரணையில் உண்மை தெரியவந்த பின்னர் 5 மாதங்கள் கழித்து யுடயஅin விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

இதுகுறித்து யுடயஅinமின் நண்பர் கூறுகையில் சிறையில் 40 நபர்களுடன் தங்கியிருந்து மிகவும் கொடுமைகளை அனுபவித்துள்ளார் என்றார்.

இன்று பூமியில் விழப் போகும் ரஷ்ய செயற்கைகோள்

இராணுவ தகவல் தொடர்புக்காக ரஷ்யா விண்ணில் செலுத்திய செயற்கைகோள் இன்று பசிபிக் கடல் பகுதியில் விழும் என்று அறிவிக் கப்பட்டுள்ளது.
இராணுவத்தின் பயன்பாட்டுக்காக கடந்த 1996ம் ஆண்டு மோல்னியா189 என்ற செயற்கைகோளை ரஷ்யா விண்ணில் செலுத்தியது.
அதன்பின் இந்த செயற்கைகோளை ரஷ்யா இராணுவத்தின் தகவல் தொடர்புக்கு பயன்படுத்தி வந்தது.
இந்நிலையில் மோல்னியா செயற்கைகோள் செயலிழந்துள்ளதால் அது பூமியில் விழும் என்று ரஷ்ய பாதுகாப்பு துறை செய்தித் தொடர்பாளர் அலெக்ஸி ஜோலோடுகின் நேற்று தெரிவித்தார்.


பூமியில் விழும் போது செயற்கைகோளின் பாகங்கள் நொறுங்கி விடும். எனவே அந்த பாகங்கள் பசிபிக் கடல் பகுதியில் விழும். அதனால் மக்களுக்கு எவ்வித ஆபத்தும் இல்லை என்று ரஷ்ய விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

1.6 டன் எடை கொண்ட இந்த செயற்கைகோள் தற்போது பூமியில் இருந்து 2378 கிலோ மீட்டர் உயரத்தில் மிதந்து கொண்டிருக்கிறது.

அதை விஞ்ஞானிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். இன்றைக்குள் அது பசிபிக் கடல் பகுதியில் விழும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

செயலிழந்த மோல்னியா1 செயற்கைகோளுக்கு பதில் 2006ம் ஆண்டு மோல்னியா2 என்ற செயற்கைகோளை இராணுவ பயன்பாட்டுக்காக ரஷ்யா விண்ணில் செலுத்தியது குறிப்பிடத்தக்கது.


 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | cheap international calls