Friday, April 6, 2012

மமத் விலங்கின குட்டியொன்றின் சிதையாத தோல்பாகங்கள் பத்திரமாக மீட்பு

இற்றைக்கு 3500 வருடங்களுக்கு முன்னர் முற்றாக அழிந்து போனதாக நம்பப்படும் மமத் விலங்கினத்தின் குட்டி மமத் ஒன்ற்றின் சிதையாத தோல் பாகத்தினை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்துள்ளனர்.
கடும் குளிர் மற்றும் பனியில் அகப்பட்டு கொண்டதால் இக்குட்டி மமத்தின் தோல் பாகங்கள் எந்தவொரு சிதைவுமின்றி பத்திரமாக மீட்கப்பட்டுள்ளன. பொதுவாக சிங்கங்களால் வேட்டையாடப்படுகின்ற போதும் இந்த மமத் விலங்கு மனிதனால் வேட்டையாடப்பட்டிருக்கலாம் அல்லது நஞ்சு கொடுக்கப்பட்டு கொல்லபப்ட்டிருக்கலாம்

என இந்த யானையின் தோல் பாகங்களின் காயங்களிலிருந்து ஆராய்ச்சியாளர்கள் முடிவெடுத்துள்ளனர். மேலும் 10000 வருடங்களுக்கு முன்னதாக இந்த மமத் வாழ்ந்திருக்கலாம் எனவும் அவர்கள் கணிப்பிட்டுள்ளனர்.

இதன் தோல் பாகங்கள் மற்றும் உரோமங்கள் குளிரை தாங்கும் வகையில் தடித்த கம்பளி போன்றிருக்கிறது. மமத் விலங்கினம் தொடர்பான வருங்கால ஆராய்ச்சிகளுக்கு இக்கண்டுபிடிப்பு பெரிதும் உதவக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.


உறையவைக்கும் கடுங்குளிர் இந்த மமத் விலங்கின் தோல்களை சில ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு நேர்த்தியாக பாதுகாத்து வந்துள்ளது ஆச்சரியத்தை அளித்துள்ளது. இந்த மமத் விலங்கு சிபேரியாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதற்கி யூகா என பெயரிடப்பட்டுள்ளது. இந்த மமத் பிறந்து இரண்டரை வருடங்களில் கொல்லப்பட்டிருக்கலாம் அல்லது இறந்திருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறான விலங்கினங்களின் உயிரற்ற உடலங்கள் இயற்கையாகவே பதபப்டுத்தப்பட்டு பலவருடங்களின் பின்னர் மீட்கப்படுவதென்பது மிக அரிதான நிகழ்வென்பதால் இக்குட்டி மமத்தின் புகைப்படம் மிக பிரபல்யமாகி வருகிறது.
இவ்விலங்கினம் குளிர் பகுதியில் வாழ்ந்திருந்ததால்  The Wooly Mammoth   ( Mammuthus primigenius ) 'கம்பளி போன்ற தடித்த தோலுரு கொண்ட மமத்' என அழைக்கப்படுகிறது. இவற்றின் வெளித்தோலுரு 10 செ.மீ திடத்தன்மை வாய்ந்ததாக காணப்படுகிறது. அவற்றின் காதுகள் மிகச்சிறியனவாகவும் வால் மிக குறுகியதாகவும் காணப்படுவதுடன் தடிமமான உரோமங்கள் வெப்ப இழப்பை தடுக்க உதவுகின்றன.

அவற்றின் கொம்புகள் 5 மீற்றல் நீளத்திற்கு இருந்துள்ளன. பனியை ஆழமாக தோண்டுவதற்கும் எதிரிகளுடன் சண்டையிடுவதற்கும் அவை பயன்பட்டுள்ளன

ஒரே ஒருவர் வாழும் அமெரிக்க நகரத்தை ஏலத்தில் எடுத்த வியட்னாமியர்!

அமெரிக்காவில் ஒருவர் மட்டுமே வாழ்ந்து வந்த குட்டி நகரம் ரூ.4.5 கோடிக்கு ஏலம் விடப்பட்டது. இதை வியட்னாமை சேர்ந்த கோடீஸ்வரர்கள் 2 பேர் விலைக்கு வாங்கி உள்ளனர். அமெரிக்காவின் கொலராடோ அருகில் லாராமி  செயெனி பகுதிக்கு இடையில் உள்ளது பபோர்ட். பத்து ஏக்கரில் அமைந்துள்ள இந்த குட்டி நகரத்தில் 3 படுக்கை அறை கொண்ட சொகுசு வீடு பெட்ரோல் பங்க் சில சிறிய வீடுகள் உள்ளன.
இங்கு வசித்தவர் டான் சம்மன்ஸ். இவர் ஒருவர் மட்டும்தான் இந்த நகரில் வசித்தார். அதனால் அமெரிக்காவிலேயே மிகமிக குறைந்த மக்கள் தொகை கொண்ட நகரம் என்று பெயர் பெற்றது. கடந்த 1980ம் ஆண்டு இந்த நகரத்துக்கு மனைவி மகனுடன் சம்மன்ஸ் குடியேறினார். 1990ல் நகரத்தை விலைக்கே வாங்கி விட்டார்.

வண்ண ஓவியங்கள் வரைந்த 10000 முட்டைகளை கொண்டு தயாரித்த 'ஈஸ்டர்' மரம்!

ஜெர்மனியில் 10000 முட்டைகளுடன் 'ஈஸ்டர்' மரம் தயாராகி உள்ளது. ஈஸ்டர் பண்டிகையின் போது கிறிஸ்தவர்கள் ஒருவருக்கொருவர் வண்ண ஓவியங்கள் வரைந்த முட்டைகளை பரிசாக வழங்குகின்றனர். இந்த வழக்கம் வெளிநாடுகளில் பெருமளவில் உள்ளது.
அது போன்று வழங்கப்பட்ட முட்டைகளை ஜெர்மனியை சேர்ந்த ஒரு நபர் மரத்தில் கட்டி தொங்க விட்டு ஈஸ்டர் மரம் உருவாக்கியுள்ளார். அவரது பெயர் வொல்கர் கிராப்ட் 76 வயதான இவர் ஓய்வு பெற்ற ஊழியர். கடந்த 1965-ம் ஆண்டு முதல் இவர் ஈஸ்டர் மரத்தை உருவாக்கி வருகிறார்.

10 வயதில் தாயான கொலம்பியச் சிறுமி!

கொலம்பியாவில் 10 வயது சிறுமி தாயாகி இருப்பது அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது. இவள்தான் உலகிலேயே மிக குறைந்த வயதில் தாயானவள் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. கொலம்பியாவின் வடக்கு பகுதியில் வயூ பழங்குடியின மக்கள் வசிக்கின்றனர். இங்கு 10 வயது சிறுமி ஒருத்தி திடீரென கர்ப்பமானாள். 39 வாரங்கள் தீவிர கண்காணிப்புக்கு பிறகு சிறுமிக்கு பெண் குழந்தை பிறந்தது.
குழந்தை ஆரோக்கியமாக உள்ளது. ஆனால் பிரசவம் சற்று சிக்கலாக இருந்ததால் ஆபரேஷன் செய்து குழந்தை எடுக்கப்பட்டது. இத்தகவலை டெய்லி மெயில் பத்திரிகை வெளியிட்டுள்ளது.

தென்சீனக்கடல் சீனாவுக்கு சொந்தமானதல்ல! - இந்தியா

தென் சீன கடல் பகுதி உலகிற்கு தான் சொந்தம் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ் எம் கிருஷ்ணா கூறியுள்ளார். தென் சீன கடல் பகுதியில் இந்திய எண்ணெய் நிறுவனங்கள் துரப்பண பணிகளை மேற்கொள்வது குறித்து கருத்து தெரிவித்த சீனா பணிகளை நிறுத்தி விட்டு தென் சீனக்கடலில் இருந்து இந்தியா வெளியேற வேண்டும் என எச்சரித்திருந்தது. இல்லாவிட்டால் அதிக விலை கொடுக்க நேரிடும் என எச்சரித்தது.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ் எம் கிருஷ்ணா தென் சீனா கடல் பகுதி உலகிற்கு சொந்தம் என்பதே இந்தியாவின் கருத்து. இந்த பகுதி எந்த நாட்டின் தலையீடு இல்லாமல் பார்த்து கொள்ள வேண்டும். இந்த பகுதியில் வர்த்தகம் அதிகரிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என கூறினார். மேலும் அவர் இது பற்றி ஆசியான் மாநாட்டிலும் ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது எனவும் கூறினார்.

Thursday, April 5, 2012

கனடாவில் பனி குறைவடைந்து வருகின்றது.

உறைபனி மற்றும் பனிப்பொழிவுக்கான நாடு என்று பெயர் பெற்றிருந்த கனடாவில் பனிபடர்ந்த நிலப்பரப்பின் அளவு குறைந்து கொண்டே வருகிறது என கனடாவின் புள்ளியியல் துறை தெரிவித்துள்ளது.
1972ம் ஆண்டு முதல் 2010ம் ஆண்டு வரையிலான அறிக்கையில் தற்போது பனி 5.1 சதவீதம் குறைந்தது தெரியவந்துள்ளது.
கடந்த 39 ஆண்டுகளில் 1998ம் ஆண்டில் ஐந்து மில்லியன் சதுர கிலோ மீற்றர் அளவிற்கு உறைபனி காணப்பட்டது. அதன்பின்பு கடந்த 2010ம் ஆண்டில் 5.5 மில்லியன் சதுர கிலோமீற்றர் அளவு பனி படர்ந்திருந்தது.

பிரிட்டிஷ் தூதரகத்தை நோக்கி அர்ஜெண்டினாவில் பேரணி

பிரிட்டிஷார் வசம் உள்ள ஃபாக்லாந்து தீவைத் திருப்பித் தரவேண்டுமென்று கோஷமிட்ட படி அர்ஜெண்டினா தலைநகரான புயுனாஸ் ஏர்ஸில் உள்ள பிரிட்டிஷ் தூதரகத்தை நோக்கி 2000 பேர் ஊர்வலமாகச் சென்றனர்.
இந்த நாட்டிலுள்ள கியுபிராக்கோ என்ற வன்முறை இயக்கம் அண்மைக்காலமாக பிரிட்டனுக்கு எதிராகப் போர்க்கொடி உயர்த்தியுள்ளது.
இந்த இடதுசாரி அமைப்பு இதற்கு முன்பு ர்ளுடீஊ மற்றும் கிளாக்சோ ஸ்மித்க்ளைன் போன்ற பிரிட்டன் நிறுவனங்களை அடித்து நொறுக்கியது.

இஸ்லாமிய நாடாக மாறப் போகும் மாலி: பிரான்ஸ் கவலை

மாலியின் வடபகுதியில் துவாரெக் பிரிவினை வாதிகளின் ஆதிக்கம் வளர்ந்து வருவதால் அல்கொய்தா இயக்கத்தின் செல்வாக்கும் வளர்ந்து வருகிறது என பிரான்ஸ் கவலை தெரிவித்துள்ளது.
பிரான்சின் வெளி விவகாரத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளரான பெர்னார்டு பலேரோ கூறுகையில் வடக்கு மாலியில் அரசியல் சூழ்நிலை நிலையற்றதாக உள்ளது என்று தெரிவித்தார்.
இந்த அகிம் இயக்கத்தினரின் முக்கியத்துவம் வளர்ந்து வருவது பிரான்சுக்கு கவலை அளிக்கிறது என்றார்.

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | cheap international calls