Thursday, March 8, 2012

ஐஸ்கிரீமும் ஒரு போதையே அமெரிக்க விஞ்ஞானிகள் அதிரடி!

ஐஸ்கிரீமும் ஒரு போதை தான் என்று அமெரிக்க விஞ்ஞானிகள் அதிரடியாக கருத்துத் தெரிவித்துள்ளனர். இது மனிதர்களை அடிமையாக்குகிறது என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். கொழுப்புச் சத்தும் குளுக்கோசும் அதிகம் உள்ள ஐஸ்கிரீமைத் தொடர்ச்சியாக சாப்பிடும் போது மூளையின் திருப்தி தன்மையில் சடுதியான மாற்றங்கள் ஏற்படுகின்றனவாம். தொடர்ந்து மூளை ஐஸ்கிரீமை எதிர்பார்க்கத் தொடங்குகிறது.
இது உலகின் மிக மோசமான போதைப் பொருளான கோகைனுக்கு ஒப்பான நிலையாகும் என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.

புகுஷிமா விபத்துக்கு பிறகு அணு உலை பணிகளை மீண்டும் தொடங்குகிறது சீனா!

ஜப்பானில் புகுஷிமா அணு உலை விபத்தை தொடர்ந்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அணு உலை கட்டுமான பணிகளை சீனா மீண்டும் தொடங்குகிறது. ஜப்பானில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் 9.0 ரிக்டர் அளவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து சுனாமி அலைகள் பொங்கி ஊருக்குள் புகுந்தன. நிலநடுக்கத்தால் புகுஷிமாவில் உள்ள அணுமின் நிலையம் கடுமையாக பாதிப்படைந்தது. 3 அணு உலைகள் சேதம் அடைந்ததால் கதிரியக்கம் வெளியானது.

Wednesday, March 7, 2012

ஆப்கானிஸ்தானில் பயங்கர பனிச்சரிவில் புதைந்து 42 பேர் பரிதாப பலி!

ஆப்கானிஸ்தானில் உறைய வைக்கும் கடும்குளிர் காரணமாக பல பகுதிகளில் பனி படர்ந்து கிடக்கிறது. அங்குள்ள படக்ஷன் மாநிலம் பனியால் அதிகம் பாதிப்புக்கு உள்ளாகியிருக்கிறது. அம் மாநிலத்தின் மலைப்பாங்கான ஷேகாய் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் நேற்று கடுமையான பனிச்சரிவு ஏற்பட்டது. அந்த கிராமத்தில் 300 பேர் வசிக்கின்றனர். அதில் பெரும்பாலானோர் பனியில் புதைந்து விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பனிச்சரிவு குறித்து தகவல் அறிந்ததும் மீட்பு குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.

கோப்பையை வெல்வது யார்? கடைசி பைனலில் நாளை ஆஸி. ரூ இலங்கை மோதல்!!

3 நாடுகள் கிரிக்கெட் போட்டி முதல் பைனலில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்ற நிலையில் நேற்று நடந்த 2வது பைனலில் இலங்கை பதிலடி கொடுத்தது. 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஆஸி. மண்ணில் அவர்களுடைய வேகப்பந்து வீச்சுக்கு எதிராக ஜெயவர்த்தனேயும் தில்ஷானும் ஆடிய ஆட்டம் சவுக்கடி கொடுக்கும் வகையில் இருந்தது. இந்த வெற்றியால் தொடர் 1ரூ1 என சமநிலை வகிக்கிறது.

அமெரிக்காவின் அழிவு தொடங்கிவிட்டது ................?

அமெரிக்கா ஈரானுக்கு எதிராக ஒரு யுத்தத்தில் குதிக்குமாயின் அது அமெரிக்காவின் முடிவாகவே இருக்கும்" என்று துருக்கியின் சிரேஷ்ட அரசியல்வாதியும் துருக்கிய சனநாயகக் கட்சியின் தலைவருமான நாமிக் காமில் ஸெய்பிக் நேற்று (சனிக்கிழமை 03.03.2012) எச்சரிக்கை விடுத்துள்ளார் ."ஈரானுக்கு எதிராக யுத்தப் பிரகடனம் செய்பவர்கள் 1980-1988 காலப்பகுதியில் ஈராக்-ஈரான் யுத்தத்தில் சுமார் எட்டு வருடகாலம் சளைக்காமல் தன்னைத் தற்காத்துக்கொண்ட அதன் வல்லமையை நினைவுகூர்வது நல்லது" என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

ஆசியாவில் இலங்கைக்கு முதலிடம்...............!!!

:சமூகத்தில் பெண்களுக்கு வழங்கப்படும் முக்கியத்துவத்திற்கு அமைய ஆசியாவில் இலங்கைக்கு முதலிடம் கிடைத்துள்ளது . உலகப் பொருளாதார அமைப்பினால் 2011 ஆம் ஆண்டுக்காக வெளியிடப்பட்ட ஆண் - பெண் வேறுபாடு தொடர்பான அறிக்கையின் மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளது. ஹாவார்ட் மற்றும் கலிபோர்னியா பல்கலைக்கழகங்கள் இணைந்து உலகிலுள்ள அனைத்து நாடுகளும் உள்ளடங்கும் வகையில் மேற்கொண்ட ஆய்வில் இந்த விடயம் கண்டறியப்பட்டுள்ளதாக குடும்பநல சுகாதார பணியகத்தின் விசேட வைத்திய நிபுணர் கபில ஜயரத்ன குறிப்பிட்டுள்ளார்.

பின்லேடன் உடல் கடலில் வீசவில்லை: அமெரிக்காவில் அடக்கம் - புதிய தகவலால் பரபரப்பு!

சர்வதேச பயங்கரவாதியும் அல்கொய்தா தீவிரவாத இயக்கத்தின் தலைவருமான பின்லேடன் கடந்த ஆண்டு மே 2-ந்தேதி பாகிஸ்தானில் சுட்டுக் கொல்லப்பட்டார். அபோதாபாத்தில் பதுங்கி இருந்த அவரை அமெரிக்க ராணுவம் அதிரடியாக சுட்டுக் கொன்றது பின்னர் அவரது உடலை உறவினர்களிடம் ஒப்படைக்கவில்லை. மாறாக வடக்கு அரபிக் கடலில் இஸ்லாமிய முறைப்படி அடக்கம் செய்ததாக அறிவிக்கப்பட்டது. ஆனால் அவரது உடல் கடலில் வீசப்படவில்லை. மாறாக அமெரிக்காவுக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு அடக்கம் செய்யப்பட்டதாக பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பிளவுபடுத்தி அதன் உறுப்பினர்களை உள்வாங்க அரசாங்கம் கடுமையாக முயற்சி

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பிளவுபடுத்தி அதன் உறுப்பினர்களை உள்வாங்க அரசாங்கம் கடுமையாக முயற்சித்து வருகின்றது. இந்த நிலையானது அரசியலுக்கு சாதகமாக அமைந்தாலும் நாட்டிற்கு பேராபத்தாகவே அமையும் என்று தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் கலாநிதி குணதாச அமரசேகர தெரிவித்தார்.
ஜெனீவா சவால்களை எதிர்கொள்ள அரசாங்கம் தவறான வியூகங்களை வகுத்து வருகின்றது. இலங்கைக்கு எதிரான சர்வதேசத்தின் குற்றச்சாட்டுக்களில் இருந்து மீள கூட்டமைப்பினரின் உதவியை நாட நினைப்பது கோழியை பாதுகாக்க நரியிடம் கொடுத்ததைப் போன்ற விடயமாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | cheap international calls