:புதுடெல்லியில் கடுமையான பனிமூட்டம் நிலவுவதால் 350 விமானங்கள் தாமதமாக வந்தன. இதனால் பயணிகள் பெரிதும் அவதிக்கு உள்ளாயினர். டெல்லி முழுவதுமே இன்று அதிகாலை பனிமூட்டமாக காணப்பட்டது. எதிரில் வரும் வாகனங்கள் தெரியாத அளவுக்கு பனி மூட்டம் நிலவியதால் வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமத்திற்குள்ளாயினர். பனி மூட்டத்தால் இந்திரா காந்தி பன்னாட்டு விமான நிலையத்தில் விமானங்கள் தரையிறங்கும் ஓடுதளம் சரியாக தெரியவில்லை இதனால் விமானங்கள் வானிலேயே சுற்றிக் கொண்டிருந்தன. மேலும் சில விமானங்கள் அருகில் உள்ள விமான நிலையங்களில் தரை இறங்கின. மேலும் பனி மூட்டத்தால் சாலை போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டது. பனிமூட்டம் காரணமாக 28 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
Saturday, January 21, 2012
Friday, January 20, 2012
தொடர் தோல்விக்கு பின்னர் முதல் வெற்றியை பதிவு செய்தது இலங்கை
Thursday, January 19, 2012
முட்டையுடன் பேசும் கோழிகள்: விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு
ஆமாம் முட்டை வெளிவந்து 48 மணி நேரம் வரை அதனோடு தொடர்பு வைத்திக்கொண்டிருக்கிறது கோழி. பதினொரு வகை ஒலிக்குறிப்புகள் வல்லுனர்களால் பதிவு செய்யப்பட்டு, மேற்படி தகவலை விஞ்ஞானிகள் கண்டு பிடித்திருக்கின்றனர்.
தாய்க் கோழி ‘ப்ளாக்’ என்ற பாச ஒலியை எழுப்புவதாகவும், கரு முட்டை ‘பீப்’ என்ற வாஞ்சை ஒலியை பதிலாக எழுப்புவதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.
48 மணி நேரம்வரை நீடிக்கும் இந்த உறவுப்பரிமாற்றம் பின்னர் நின்று கோழியும் முட்டையும் வேறாகி விடுகின்றன என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.
பெண்ணின் மனசு கடலின் ஆழத்திற்க்கு சமமாகுமா !!சுவாரஷ்யமான தகவல்
பெண்கள் எதைத்தான் விரும்புகிறார்கள்? அதற்கான காரணங்கள் என்ன என்பதைப்பற்றி பேகோ மிகப்பெரிய பட்டியலிட்டுள்ளார். அவை உங்களுக்கு:
தனித்திறன் அவசியம்
இணையத்தளங்களுக்கான ஒழுக்கக்கோவையை வெளியிட்டது ஊடகத்துறை அமைச்சு!
:தகவல் ஊடகத்துறை அமைச்சு 27 இணையத்தளங்களுக்கு மாத்திரமே செயற்படுவதற்கான அனுமதிப்பத்திரத்தை இது வரையில் வழங்கியிருக்கிற தென்று தகவல் ஊடகத்துறை அமைச்சின் செயலாளர் டபிள்யு.பி. கணேகல தெரிவித்தார். செய்திகளை வெளியிடும் இணையத்தளங்கள் கடைப்பிடிக்க வேண்டிய ஒழுக்க நெறியொன்றையும் அமைச்சு இப்போது வெளியிட்டிருக்கிறதென்றும், இந்த ஒழுக்க நெறிக்கு அமைய பதிவு செய்யப்பட்ட இணையத்தளங்கள் செயற்படுவதற்கு தமது அமைச்சு ஆதரவளிக்கும் என்றும் அவர் கூறினார். இணையத்தளங்களுக்கென வெளியிடப்பட்டுள்ள ஒழுக்க நெறியின் முக்கிய அம்சங்கள் சிலவற்றை இங்கே தருகின்றோம்.
Wednesday, January 18, 2012
ஆகக் கூடிய வாழ்க்கைச் செலவு கொண்ட மாவட்டமாக யாழ்ப்பாணம்..
இலங்கையில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம், தனிநபர் ஒருவர் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்ய குறைந்த பட்சம் 3,307 ரூபாவினை செலவு செய்ய வேண்டி இருந்தது. இலங்கையில் ஆகக் கூடிய வாழ்க்கைச் செலவு கொண்ட மாவட்டமாக யாழ்ப்பாணம் காணப்படுவதாக குடிசன மதிப்பு புள்ளிவிபரத் திணைக்களம் வெளியிட்டுள்ள உத்தியோகபூர்வ தரவுகள் காட்டுகின்றன.
எனினும், இது மாவட்டங்களைப் பொறுத்து வேறுபட்டதுடன், தனிநபர் வாழ்க்கைச் செலவு ஆகக் கூடிய மாவட்டமாக யாழ்ப்பாணம் (ரூபா.3,555) காணப்படுவதனை புள்ளிவிபரத் தரவுகள் காட்டுகின்றன.எத்தனை ஜீவன்களுக்கு வாழ்வழிக்கின்றது மெரினா கடற்கரை
வானமே கூரை எனக்கொண்டு தம் இரவுப் பொழுதை கழிக்கின்றனர் இறைவனின் குழந்தைகள் . அலையின் ஓசைகளில் வாகன இசைச்சலில் தூங்கிப் பழக்கப்பட்டு விட்டனர். எத்தனை பேருக்கு வாழ்வழிக்கின்றது இந்த மெரினா கடற்கரை சாலை என எண்ணத் தோண்றுகின்றது. காலையில் தம் வேலைகளை முடித்து விட்டு இரவில் வீடு பொல வந்து செர்கின்றனர் .சென்னையில் வங்கக் கடலோரம் அமைந்துள்ளது மெரினா கடற்கரை. இதன் நீளம் 12 கிலோ மீட்டர் ஆகும். இது உலகின் இரண்டாவது மிக நீளமான கடற்கரை என்று மக்களால் பரவலாகக் கூறப்பட்டாலும், இதே போன்று நீளமான கடற்கரைகள் பல உள்ளன. சென்னைக்கு வரும் பெரும்பாலான சுற்றுலாப் பயணிகளின் பொழுதுபோக்கும் இடமாக திகழ்கிறது இந்த மெரினா கடற்கரை. இந்த கடற்கரை தண்ணீரிக்கு பிரபலமோ இல்லையோ உணவுப் பொருட்களுக்கு மிகவும் பிரபலம். தேங்காய் சுண்டல், ஏலக்காய் டீ, பஜ்ஜி, பேல் பூரி போன்ற சாட் வகைகள் இங்கு ஒரு பிடி பிடிக்கலாம். என்னதான் குளிப்பது தடை செய்யப்பட்டிருந்தாலும் ஏராளமானோர் இன்றுவரை குளித்துக்கொண்டுதான் இருக்கின்றனர்.
சிங்கார சென்னையின் சிதறுண்ட கோலம் [இந்தியாவின் எதிர்காலம் வீதியில்}
"அக்கா பசிக்குதக்கா ஏதாவது வாங்கிக்கோக்கா ஜஞ்சு சங்கு பத்துருவாக்கா" என்ற குரல் இன்றும் என்காதுகளை தொட்டுச்செல்கின்றன. கொட்டும் மழையில் நடுங்கியபடி சென்றுகொண்டிருந்த என்னை பின்னிருந்து ஒரு குரல் திரும்பி பார்க்க வைத்தது. குளிரில் நடுங்கியபடி சங்குகளை கையில் வைத்து பசிக்காக விற்றபடி நின்றால் ஒரு சிறுமி பார்ப்பதற்கே பரிதாபமா இருந்தது. . பெய்துகொண்ருந்த மழையை கூட பொறுப்படுத்தாமல் வரும் சுற்றுளாப்பயணிகளிடம் கூவிக்கூவி விற்றால் சில கரங்கள் அவளை கண்டுக்காமலே சென்றன சிர் அவளிடம் சங்கு வாங்கிச்சென்றனர். பிச்சை எடுகக்காமல் சுயமாக விற்று வாழ்கின்றாளே என நினைத்துக்கொண்டேன். இத்தகைய அவலங்களை சந்திக்கும் தருணம் தருணமாயினும் இதனை பெற்றுத்தந்த பயணம் வாழ்க்கையில் மறக்கமுடியாத நினைவுகளே. சில அனுபவங்கள் நினைத்தாலே சிரிக்கனும் பொல இருக்கும் சில நினைவுகள் என் வாழ்ககைக்கான பாலமாய் அமைந்துள்ளன.
3:41 AM
abimanju






