அபிவிருத்திப் பாதையை நோக்கி பயனிக்கும் மக்கள் நவீனத்தை வேண்டிநிற்பதால் பண்டைய பொக்கிஷங்களும் அழிக்கப்பட்டு வருகின்றன. அப் பொருட்களை மீண்டும் நினைவுக்கு கொண்டுவருபவை புகைப்படங்கள் தாங்க வார்த்தைகளை சொல்ல முடியாத விடயங்களை புகைப்படங்கள் பேசும் செய்திகளையும் மக்களுக்கு கூறுவதாய் அமைகின்றன. கிராம மக்களின் வாழ்வியலை புகைப்படங்களினுடாக பதிவு செய்து கொள்ளமுடியும் கிராம மக்களுக்கு விளிப்புனர்வை ஏற்படுத்த புகைப்படங்கள் உதவுவுகின்றன. கிராமிய பாரம்பரியங்கள் சடங்குகள் சம்பிரதாயங்கள் அழிவடைந்து வருகின்றது. பாரம்பரியமாக ஆடப்பட்டு வந்த கலைகளும் இல்லாமல் போய்விட்டன.
Saturday, January 7, 2012
Thursday, January 5, 2012
ஈழத்து தழிழர் பிரச்சினையில் தோற்றுப்போன ஊடகங்கள்
கருத்துக்களையும் செய்திகளையும் பரப்புவதில் முக்கிய இடம் வகிப்பது ஊடகங்கள. கருத்துக்கள் சரியான முறையில் பரப்பட்டு அது எந்த அளவு மக்களை சென்றடைகின்றன என்பதிலேயேஊடக வளர்ச்சி தங்கியுள்ளது. போராட்டங்களும் புரட்சிகளும் ஊடகங்களினூடாகவே அதிக வளர்ச்சி கண்டு வெற்றி பெற்றன. இலங்கைத்தழிழர்களின் பிரச்சினைகள் ஆரம்ப காலத்தில் ஊடகங்களினுடாகவே பரப்பட்டன உண்மைகள் சரியான முறையில் பரப்பட்டு மக்களிடையே ஆதரவினை பெற்றன. அன்று கிட்லர் பாசிச ஆட்சிகயின் வெற்றிக்கு உறுதுணையாக அமைந்தது ஊடகங்களே கிட்லர் கவர்சிகரமான பேச்சினுடாக மக்களின் ஆதரவினை திரட்டினான். கிட்லர் ஊடகத்தினை பற்றி நன்கறிந்து அதனுடாக மக்களின் ஆதரவினை பரப்பினான். அரசுகள் புரட்சி இயக்கங்களை செயலிழக்க செய்யவேண்டுமாயின் உடகங்களை தம் கட்டுப்பாட்டில் கொண்டுவரவேண்டும்
Tuesday, January 3, 2012
தொடர்கிறது காதலனை தேடிய அபியின் பயணம்
காதல் இல்லாத வாழ்க்கையே இல்லைங்க ஒவ்வொருவருக்கும் காதல் இருக்கும் சிலர் காதலிச்சு திருமணம் செய்வாங்க சிலர் திருமணம் செய்து காதலிப்பாங்க பதினாறு வயதிலிருந்து காதலிக்க ஆரம்பித்தாலும் எப்ப காதல் நிறைவடைகின்றது என்று யாருக்கும் தெரியாது. இன்றைக்கு எல்லோரும் காதல் திருமணத்தை தாங்க வரவேற்கிறாங்க ஏன்னா அறிமுகம் இல்லாத ஒருவரை எப்படிங்க கல்யானம் செய்ய முடியும் அது தாங்க நான் ஒரு முடிவ பண்ணியிருக்கேன் காதலிச்சு தான் தரிருமணம் செய்யனும் என்று
என் வயது மட்டும் ஓடிட்டே இருக்கு என் காதலன் மட்டும் இன்னும் கிடைக்கவே இல்லைங்க. பதினெட்டு வயசிலை இரந்து தேடிட்டு தான் இருக்கேன் . இரண்டு வருஷமாயிட்டு இன்னும் மாட்டவே இல்லை எல்லோரும் சொல்றாங்க பார்த்தவுடன் காதல் வருமாம் நானும் பார்கிறேன் பார்க்கிறேன் காதல் வரலைங்க என்னோட காதலன் எப்படி இருக்கனும் என்று சொல்றன் கேக்கிறீங்களா.
Monday, January 2, 2012
காதலுக்கு மட்டுமல்ல கலைக்கும் புத்துயிர் ஊட்டிய முகலாயர்
காதலிற்கும் கட்டடக் கலைக்கும் அதிசயிக்கத்தக்க அழியாத சான்றாக இருந்துவரும் தாஜ் மஹால் என்ற அற்புதத்திற்கு அருகே யமுனை நதிக்கரையிலுள்ள மற்றுமொரு பிரம்மாண்ட மானுடப் படைப்பாக திகழ்கிறது லால் கீலா என்றழைக்கப்படும் ஆக்ரா செங்கோட்டை.தாஜ் மஹாலைப் போல இதுவும் ஐ.நா.வின் யுனெஸ்கோ அமைப்பால் உலக பாரம்பரியச் சின்னமாக அங்கீகரிக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகிறது முகலாயப் பேரரசர் ஷா ஜஹானின் கை வண்ணமே ஆக்ரா கோட்டையை இந்த நாட்டிலுள்ள மற்ற கோட்டைகளிலிருந்து வேறுபடுத்திக் காட்டுகிறது இக்கோட்டையிலுள்ள மூசாம்மன் புர்ஜ் காஸ் மஹால் ஆகிய பகுதிகள் கட்டக் கலைக்கும் சிற்ப வேலைப்பாடுகளுக்கும் அழியாத சான்றாகத் திகழ்கின்றன
கற்பனையால் உருவாக்கப்பட்ட புகைப்படங்கள்
அரைவாசிக்கு மேற்பட்டவை கற்பனையால்உருவாக்கப்பட்டவை முன்னைய கால அரசர்கள் தம் கற்பனையில் தோன்யதை ஓவியங்களாய வரைந்துவைத்தனர். சிற்பங்களாகவும் செதுக்கினர். ஆயினும் இன்று இயற்கைக்கு முற்றுமுழுதாக முரன்பட்டதாக வானத்தில் வீடுகட்டுவது நிலாவஜல் வசிப்பது போன்று தம் கற்பனையில் எட்டியதை கவிதைகளாக வரைகின்றனர். அப்படி கற்பனையால் உருவாகி இயற்கைக்கு முரனான ஜதார்த்தத்திற்கு சாத்தியமற்ற சில புகைப்படங்கள்
உலகப்போரில் ஹிட்லருடன் போரிட்ட நாய்ப்படை
உலகையே உள்ளங்கையில் கொண்டுவர நினைத்த ஜேர்மனை ஆண்ட சர்வாதிகாரி அடால்ப் ஹிட்லரின் வரலாறு முழுவதுமே நம்பமுடியாததாகவும், சுவையானதாகவும் அமைந்திருக்கிறது. ஹிட்லர் ஈவு இரக்கமற்ற கொடியவராக இருந்தாலும், ஆச்சரியப்படத்தக்க வகையில் சில நல்ல குணங்களும் இருந்தன. யூதர்களை நடு நடுங்க வைத்து ஆட்டிப்படைத்த சர்வாதிகாரியான ஹிட்லர், குழந்தைகளிடமும், பிராணிகளிடமும் அன்பு கொண்டவர். மது அருந்த மாட்டார். புகை பிடிக்க மாட்டார். சைவ உணவு மட்டுமே சாப்பிடுவார்.ஹிட்லர் வளர்த்த ப்ளாண்டி என்னும் ஜெர்மன் ஷெஃபர்ட் வகை நாய் அவரது பதுங்குழி காலம் வரை கூடவே இருந்துள்ளது. அவர் தனது காதலியுடன் தற்கொலை செய்து கொண்டு இறக்கும் தருவாயிலும் அந்த பாசமான நாய் ஹிட்லருடன் இருந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
துரோகியாக கணிக்கப்பட்ட அக்பர்
ஹிஜ்ரி ஏழாம் நூற்றாண்டில் தார்த்தாரியப் பெரு வெள்ளம் இந்திய பாக்கிஸ்தான துணைக் கண்டத்தைத் தவிர உள்ள ஏனைய அனைத்து இஸ்லாமிய உலகத்தையும் நாசப்படுத்தியது. இந்த நாட்டிலிருந்த சுகபோகவாசிகள் மற்ற நாட்டிலுள்ள சுகபோகவாசிகளைப் போல இந்த எச்சரிக்கையை ஒரு பொருட்டாகவே எடுக்காமல் தங்களின் தீயவர்களிலேயே நிலைத்திருந்தனர். குராஸான் மற்றும் ஈராக் ஆகிய நாடுகளின் அரசர்களின் கட்டுப்பாடற்ற அதிகார பிரயோகம்ää ஆட்சியாளர்களால் நடத்தப்பட்ட ஆடம்பர வரம்பு மீறிய வாழ்க்கைகள் சட்ட விரோத முறையில் செல்வத்தை பதுக்கி வைத்து அவைகளை நீதியற்ற முறையில் செலவளித்தல் கொடுங்கோன்மை மற்றும் நிர்ப்பந்த ஆட்சிää இறைவனை மறுத்தல் மேலும் சத்திய வாழ்வை விட்டு விடல் போன்ற பலவீனங்களும் ஒழுக்கக் கேடுகளும் எங்கும் காணப்பட்டன. மார்க்கக் கண்ணோட்டத்தில் வரம்பு மீறலாக உள்ள இந்த அனைத்தும் அக்பரின் காலத்தில் அதனுடைய உச்ச நிலையை அடைந்தது. அப்போது வீழ்ச்சி அதனுடைய இறுதி எல்லையை தொட்டது.
கிட்லர் என்ற பாசிச மிருகத்திடமிருந்து உலகை காப்பாற்றிய சோவியட் வீரன் டான்கோ
தோழர் ஸ்டாலின் தலைமையில்இ ஹிட்லர் என்ற பாசிச மிருகத்திடமிருந்து உலகை காப்பாற்றிய சோவியத் வீரர்கள் பற்றிய உண்மைகதைகள் சிலவற்றை மாஸ்கோ நூலில் இருந்து தேர்தெடுத்து மொத்தமாக நமது வலைத்தளத்தில் வெளியிடப்பட்டது. தோழர் ஸ்டாலின் அவர்களின் பிறந்த தினத்தை (டிசம்பர் 21) முன்னிட்டு அக்கதைகள் ஒவ்வொன்றாக பிரித்து வெளியிட முடிவு செய்ததில் இரண்டாவது பதிவுவாக “சோவியத் வீரன் டான்கோ” வை வெளியிடுகிறோம். மாக்சிம் கோர்க்கியின் கதைகளில் ஒன்றில் வருகின்ற வியப்பைத் தரும் பாத்திரம் டான்கோ. ஒரு இருண்ட காட்டில் அகப்பட்டுக் கொண்ட சிலரைக் காப்பாற்றுவதற்காக டான்கோ தன்னுடைய மார்பிலிருந்து இருதயத்தைப் பிய்த்துக் கொடுத்தான். அந்த இருதயம் பிரகாசமான நெருப்பாக கொழுந்து விட்டெரிந்து காட்டை விட்டு வெளியே போகின்ற பாதையை அவர்களுக்குக் காட்டியது.
1:36 AM
abimanju









