Sunday, April 8, 2012

கொலையாளியை பிடிக்க ஆவியின் உதவியை நாடும் பொலிசார்

தமிழக முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் தம்பி ராமஜெயம் கடந்த மாதம் 29ம் திகதி கடத்திக் கொலை செய்யப்பட்டார்.
அவரை கொலை செய்த கூலிப்படையையும் அவர்களை ஏவிய முக்கிய பிரமுகர்களையும் பிடிக்க 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளது.
ராமஜெயத்தின் தொழில் எதிரிகள் பணம் கொடுக்கல் வாங்கலில் மோதியவர்கள் தனிப்பட்ட வாழ்க்கை விவகாரம் என பல கோணங்களில் விசாரணை நடந்தது. 500-க்கும் மேற்பட்டவர்களிடம் விசாரணை நடத்தியும் சரியான துப்பு கிடைக்கவில்லை.


இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த ஒரு காதல் ஜோடி திருமண விவகாரத்தில் ராமஜெயம் தலையிட்டதால் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என கூறப்பட்டது.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதியை சேர்ந்த அந்த காதல் திருமண ஜோடி இருக்கும் இடம் பற்றி இதுவரை துப்பு துலங்கவில்லை. இதனால் தனிப்படை பொலிசார் சோர்ந்து போய் உள்ளனர்.

ராமஜெயத்தை கொலை செய்த கூலிப்படையை பிடித்து அதன் மூலம் பின்னணியில் உள்ளவர்களை மடக்கலாம் என்ற விசாரணையிலும் ஏமாற்றமே ஏற்பட்டு உள்ளது.

எனவே ராமஜெயத்தை கொன்ற கூலிப்படை கல்லணை வழியாக சென்றது என்பதால் அவர்கள் தஞ்சை நாகை மாவட்டத்தை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என கூறப்பட்டதால் அதன் அடிப்படையில் அந்த மாவட்டத்தை சேர்ந்த ரவுடிகள் யார்-யார்? வெளியில் நடமாடுகிறார்கள் என திருச்சி மத்திய சிறையில் இருந்து பட்டியல் பெற்று விசாரணை நடந்தது.

சிறையில் இருந்த ரவுடிகளிடமும் விசாரணை நடந்தது. ஆனால் அதிலும் எந்த முன்னேற்றமும் இல்லை. இதனால் தனிப்படை பொலிசார் ஆவி மூலம் ராமஜெயம் கொலையாளிகளை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளனர்.

திருச்சியில் புத்தூர் வயலூர் ரோடு பகுதியில் ஆவியை வரவழைத்து கொலை திருட்டில் ஈடுபடுபவர்களை அடையாளம் காட்டுபவர்களை தனிப்படை அணுகி உள்ளது.

ஆங்கில எழுத்துக்கள் யு முதல் ணு வரை மற்றும் 1 முதல் ஜீரோ வரை எண்களை தரையில் எழுதி ஒரு கவிழ்த்திய டம்ளரில் ஆட்காட்டி விரலை வைத்து ஆவியை வரவழைப்பார்கள்.

அப்போது இறந்தவரின் ஆவி ஆட்காட்டி விரல் வைத்து உள்ள டம்ளரை கொலையாளியின் ஆங்கில முதல் எழுத்து எது? என்பதை காட்டும் வகையில் அங்கு நகர்ந்து செல்லும். இதன் மூலம் குற்றவாளி பெயர் என்ன? அவர் எந்த திசையில் உள்ளார் என்பது தெரியவரும்.

கொலையானவர்களையோ அல்லது அவரது குடும்பத்தில் இதற்கு முன் இறந்தவர்களையோ மனதில் நினைத்து 5 நிமிடம் பூஜை செய்து ஆவியை வரவழைப்பார்களாம். அப்போது ஆவி வந்து கொலையாளியின் பெயரை அடையாளம் காட்டும் என்று கூறப்படுகிறது.

செய்யாத குற்றத்திற்காக தண்டனையை அனுபவித்த பிரெஞ்சு நபர்

ஒரே பெயரை கொண்ட காரணத்தினால் குற்றவாளி என கைது செய்யப்பட்டு பிரான்சை சேர்ந்த நபர் ஒருவர் சிறைத் தண்டனையை அனுபவித்துள்ளார்.
 Rachid Alamin  (வயது 29) கடந்த 2011ம் ஆண்டு நவம்பர் மாதம் பிரான்ஸ்- பெல்ஜியம் எல்லைப் பகுதி அருகே உள்ள நகர் ஒன்றில் கைது செய்யப்பட்டார்.
இதே பெயரை கொண்ட நபர் ஒருவர் போதைப் பொருள் வழக்கில் கடந்த 2009ம் ஆண்டு குற்றவாளி என அறியப்பட்டார்.



இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்ததில் குற்றவாளியின் பெயரை கொண்ட அவரது உறவினர் ஒருவரை கைது செய்தனர்.

அதன் பின் விசாரணையில் உண்மை தெரியவந்த பின்னர் 5 மாதங்கள் கழித்து யுடயஅin விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

இதுகுறித்து யுடயஅinமின் நண்பர் கூறுகையில் சிறையில் 40 நபர்களுடன் தங்கியிருந்து மிகவும் கொடுமைகளை அனுபவித்துள்ளார் என்றார்.

இன்று பூமியில் விழப் போகும் ரஷ்ய செயற்கைகோள்

இராணுவ தகவல் தொடர்புக்காக ரஷ்யா விண்ணில் செலுத்திய செயற்கைகோள் இன்று பசிபிக் கடல் பகுதியில் விழும் என்று அறிவிக் கப்பட்டுள்ளது.
இராணுவத்தின் பயன்பாட்டுக்காக கடந்த 1996ம் ஆண்டு மோல்னியா189 என்ற செயற்கைகோளை ரஷ்யா விண்ணில் செலுத்தியது.
அதன்பின் இந்த செயற்கைகோளை ரஷ்யா இராணுவத்தின் தகவல் தொடர்புக்கு பயன்படுத்தி வந்தது.
இந்நிலையில் மோல்னியா செயற்கைகோள் செயலிழந்துள்ளதால் அது பூமியில் விழும் என்று ரஷ்ய பாதுகாப்பு துறை செய்தித் தொடர்பாளர் அலெக்ஸி ஜோலோடுகின் நேற்று தெரிவித்தார்.


பூமியில் விழும் போது செயற்கைகோளின் பாகங்கள் நொறுங்கி விடும். எனவே அந்த பாகங்கள் பசிபிக் கடல் பகுதியில் விழும். அதனால் மக்களுக்கு எவ்வித ஆபத்தும் இல்லை என்று ரஷ்ய விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

1.6 டன் எடை கொண்ட இந்த செயற்கைகோள் தற்போது பூமியில் இருந்து 2378 கிலோ மீட்டர் உயரத்தில் மிதந்து கொண்டிருக்கிறது.

அதை விஞ்ஞானிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். இன்றைக்குள் அது பசிபிக் கடல் பகுதியில் விழும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

செயலிழந்த மோல்னியா1 செயற்கைகோளுக்கு பதில் 2006ம் ஆண்டு மோல்னியா2 என்ற செயற்கைகோளை இராணுவ பயன்பாட்டுக்காக ரஷ்யா விண்ணில் செலுத்தியது குறிப்பிடத்தக்கது.


பாகிஸ்தானில் பனிச்சரிவில் 150 படையினர் உயிரோடு புதையுண்டனர்!

இந்திய-பாகிஸ்தான் எல்லையில் சியாச்சின் பகுதியில் பனிப்பாறை சரிந்து 150 பாகிஸ்தான் படையினர் உயிருடன் புதையுண்டனர். கடல் மட்டத்திலிருந்து 22 ஆயிரம் அடி உயரத்தில் இருக்கும் இப்பகுதியில் இன்று காலை 6 மணியில் கடுமையான பனிப்பாறை சரிவு ஏற்பட்டது. பனிச்சரிவில் பாகிஸ்தானின் ராணுவ முகாம் சிக்கிக்கொண்டது.
இதில் 150 பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் பனிச்சரிவில் சிக்கி உயிரோடு புதைந்து இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. ஆனால் பாகிஸ்தான் ராணுவ செய்தி தொடர்பாளர் 100 ராணுவ வீரர்கள் பனிச் சரிவில் சிக்கிக் கொண்டதாக தெரிவித்திருக்கிறார்.


பனிச்சரிவில் சிக்கிய ராணுவ வீரர்களை மீட்கும் பணியில் பாகிஸ்தான் அரசு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இதற்கென மீட்பு படை ராணுவம் சியாச்சின் பகுதியில் குவிக்கப்பட்டுள்ளதாகவும் மீட்புப்பணிகள் துரிதமாக நடைபெற்று வருவதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பின்லேடனின் பாகிஸ்தான் வாழ்க்கை! - அவரது மனைவியின் சாட்சியம்

ஒசாமா பின்லாடனைப் பிடிக்க அமெரிக்கப் படைகள் ஆப்கானிஸ்தானின் கரடுமுரடான மலைகளில் தேடுதல்களை நடத்திக் கொண்டிருக்க இன்னொரு புறத்தில் மலைக்குகைகளில் எல்லாம் அமெரிக்க விமானங்கள் ஏவுகணைகளை வீசிக் கொண்டிருக்க- அவர் பாகிஸ்தானில் ஒன்பது ஆண்டு நிம்மதியாக இருந்து நான்கு குழந்தைகளுக்கும் தந்தையாகியுள்ளார். இந்த விபரங்களை அவரது மூன்றாவது மனைவியே தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் 2001ல் இரட்டைக் கோபுரம் தகர்ப்பு சம்பவத்துக்குப் பிறகு அமெரிக்க புலனாய்வுத் துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். இதன் காரணமாக அல் குவைதா தலைவர் ஒசாமா பின்லாடனின் குடும்பத்தினர் தலைமறைவு வாழ்க்கையைத் துவக்கினர்.

கடந்த ஆண்டு மே மாதம் பாகிஸ்தானின் அபோதாபாத்தில் ஒளிந்திருந்த ஒசாமா பின்லாடனை அமெரிக்க அதிரடிப்படையினர் சுட்டுக் கொன்றனர். இந்தச் சம்பவத்தில் ஒசாமாவின் 20 வயது மகன் கலீலும் ஒசாமாவின் உதவியாளர்கள் இருவரும் பலியாயினர். ஒசாமாவின் இளைய மனைவி அமல் அகமது அப்துல் பதேவுக்கு காலில் குண்டுக் காயம் ஏற்பட்டது.

அமெரிக்க அதிரடிப்படையினர் ஒசாமாவின் மூன்று மனைவிகளையும் குழந்தைகளையும் பாகிஸ்தான் நிர்வாகத்திடம் ஒப்படைத்தனர். பாகிஸ்தானில் முறைகேடாக இவர்கள் தங்கியிருந்தாகக் கூறி தற்போது இவர்கள் வீட்டுச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். ஒசாமா பின்லாடனை பற்றி தகவல் தெரிவிக்க அரேபியாவை சேர்ந்த மூத்த மனைவியர் இருவரும் மறுத்து விட்டனர். ஆனால் 30 வயதான அப்துல் பதே மட்டும் ஒசாமாவை பற்றிய சில உண்மைகளைத் தெரிவித்தார்.

பதே தனது வாக்குமூலத்தில் கூறியுள்ளதாவது: முஜாகிதீனைத் தான் மணக்க வேண்டும் என்றிருந்ததால் ஒசாமா பின்லாடனை விரும்பி மணந்தேன். 2000ம் ஆண்டு ஒசாமாவை திருமணம் செய்து கொண்ட அதே ஆண்டில் ஜூலை மாதம் கராச்சிக்கு வந்தேன். அதன் பின் சில மாதம் கழித்து ஆப்கானிஸ்தானின் காந்தகார் நகருக்குச் சென்று பின்லாடனுடன் குடும்பம் நடத்தினேன்.

அவருடன் மூத்த மனைவிகள் இரண்டு பேர் இருந்தனர். அமெரிக்க தாக்குதல் சம்பவத்திற்கு பிறகு நான் கராச்சிக்குத் திரும்பி விட்டேன். அப்போது எனக்கு சபீயா என்ற மகள் இருந்தாள். ஒசாமாவின் மூத்த மகன் சாத் உதவியுடன் பாகிஸ்தானில் ஏழு முறை வீட்டை மாற்றினோம். 2002ல் பெஷாவருக்கு சென்றுஇ மீண்டும் கணவருடன் குடும்பம் நடத்தினேன்.

அமெரிக்க புலனாய்வுத் துறையினரின் கண்காணிப்பு தீவிரமானதும் ஸ்வாட் மாகாணத்தில் உள்ள ஷங்லா மாவட்டத்தில் வசித்தோம். 2003ல் இஸ்லாமாபாத் அருகே உள்ள ஹரிப்பூரில் குடிபெயர்ந்தோம். அங்கு ஒசாமாவுடன் இரண்டு ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்தேன்.

இந்தக் கால கட்டத்தில் எனக்கு அசியா என்ற மகளும் 2004ல் இப்ராகிம் என்ற மகனும் பிறந்தனர். இருவரும் அரசு மருத்துவமனையில் தான் பிறந்தனர். மருத்துவமனையில் என்னைப் பற்றி போலியான தகவல்களைத் தெரிவித்திருந்தேன். கடைசியாக 2005ல் தான் அபோதாபாத் வீட்டுக்கு குடிபெயர்ந்தோம். இந்த வீட்டில் இருந்தபோது தான் கடந்த 2006ல் சைனாப் 2008ல் ஹுசைன் ஆகியோர் பிறந்தனர்.

அபோதாபாத் வீட்டில் இருந்தபோது பாகிஸ்தானை சேர்ந்த இப்ராகிம் மற்றும் அப்ரார் இருவரும் தான் எங்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்து வந்தனர். வெளியுலகத்துடன் அவர்கள் மூலம் தான் எங்களுக்குத் தொடர்பு ஏற்பட்டது. கடிதங்களும் அவர்கள் மூலம் தான் எங்களுக்குக் கிடைக்கும். இவ்வாறு பதே கூறினார்.

பதே காலில் குண்டுக் காயம் ஏற்பட்டதால் அவருக்கு உதவி செய்ய ஏமன் நாட்டை சேர்ந்த அவரது சகோதரர்கள் பாகிஸ்தான் வந்துள்ளனர். பாகிஸ்தானில் சட்டவிரோதமாகத் தங்கியிருந்ததற்காக ஒசாமாவின் மூன்று மனைவிகளும் மரியம் 21 சுமாயா 20 என்ற இரண்டு மகள்களும் தற்போது ஒன்றரை மாதத்திற்கு வீட்டுச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த தண்டனை காலம் முடிந்ததும் மூத்த மனைவியர் இருவரும் சவுதிக்கும் இளம் மனைவி பதே ஏமனுக்கும் திருப்பி அனுப்பப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

மலாவி அதிபர் மரணம் - புதிய அதிபராகிறார் பெண்!

மலாவி அதிபர் பிங்கு-வ-முதரிக்கா இறந்ததை அந்த நாட்டு அரசு அதிகாரப்பூர்வமாக உறுதிப் படுத்தியுள்ளது. புதிய அதிபராக ஜாய்ஸ் பாண்டா பதவி யேற்கவுள்ளார்.தென் கிழக்கு ஆப்ரிக்க நாடான மலாவியின் அதிபர் பிங்கு-வா-முதரிக்காவுக்கு இரண்டு நாட்களுக்கு முன் மாரடைப்பு ஏற்பட்டது. தென் ஆப்ரிக்காவுக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார். அவர் வழியிலேயே இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
புதிய அதிபராக ஜாய்ஸ் பாண்டா பதவியேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. துணை அதிபராக இருந்த இவர் இரண்டு ஆண்டுகளுக்கு முன் ஜனநாயக மக்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். இதனால் இவருக்கு அதிபர் பதவி கிடைக்காது என தகவல் வெளியாகியது.

இந்த பிரச்னையை சுமுகமாக தீர்க்கும்படி மலாவி அரசுக்கு அமெரிக்கா பிரிட்டன் நாடுகள் அறிவுறுத்தின. இதையடுத்து ஜாய்ஸ் பாண்டா புதிய அதிபராக பதவியேற்கவுள்ளார்.

கியூபாவில் முதல் முறையாக புனிதவெள்ளிக்கு விடுமுறை!

கியூபாவில் முதன் முறையாக புனித வெள்ளிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. கம்யூனிச நாடான கியூபாவில் கடந்த 59ம் ஆண்டு புரட்சிக்குப் பிறகு பிடல் கேஸ்ட்ரோ அதிபரானார். அது முதல் கொண்டு அந்நாட்டில் மதம் சார்ந்த விழாக்களுக்கான விடுமுறை ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் கடந்த 98ம் ஆண்டு போப் ஜான்பால் கியூபா நாட்டுக்கு பயணம் மேற்கொண்ட போது அந்நாட்டு அரசிடம் கிறிஸ்துமசுக்கு விடுமுறை அறிவிக்கும்படி கேட்டுக் கொண்டார்.
கியூபாவில் 10 சதவீதம் பேர் கத்தோலிக்க கிறிஸ்தவர்கள். எனவே போப் ஜான்பாலின் வேண்டுகோளை ஏற்று கிறிஸ்துமசுக்கு விடுமுறை விடப்பட்டது. இதற்கிடையே போப் பெனிடிக்ட் கடந்த வாரம் கியூபாவில் பயணம் செய்தார். அப்போது அவரை முன்னாள் அதிபர் பிடல் கேஸ்ட்ரோவும் அதிபர் ரவுல் கேஸ்ட்ரோவும் சந்தித்தனர்.


புனித வெள்ளிக்கும் விடுமுறை விடும்படி பெனிடிக்ட் கியூபா அதிபரிடம் கோரியிருந்தார். இதை தொடர்ந்து இந்த ஆண்டு புனித வெள்ளிக்கு முதன் முறையாக விடுமுறை அறிவிக்கப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் இதே போல புனித வெள்ளிக்கு விடுமுறை அறிவிக்கப்படுமா என்பது பின்னர் முடிவு செய்யப்படும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏமனில் விமான நிலைய கட்டிடம் குண்டுவீசி தகர்ப்பு

ஏமனில் அதிபராக இருந்த அலி அப்துல்லா சலே பொதுமக்களின் போராட்டத்தை தொடர்ந்து கடந்த பிப்ரவரி மாதம் பதவி விலகினார். தற்போது காபட்ரப்போ மன்சூர் ஹாடி புதிய அதிபராக பதவி வகித்து வருகிறார்.
இந்த நிலையில் தலைநகர் சனாவில் உள்ள விமான நிலையம் மீது டிரக்குகளில் வந்த சிலர் குண்டு வீசினர். அதில் விமான போக்குவரத்து தகவல் கோபுரமும் கட்டிடங்களும் தகர்ந்தன. இதை தொடர்ந்து அங்கு விமான போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
இச்செயலில் முன்னாள் அதிபர் சலேவின் ஆதரவாளர்கள் ஈடுபட்டதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | cheap international calls