Tuesday, April 3, 2012

அவுஸ்ரேலிய விமான உணவுப் பொட்டலத்தில் கூட்டுப்புழுக்கள்!

அவுஸ்திரேலிய விமானமான காண்ட்டாஸ் விமானத்தில் லாஸ் ஏஞ்சல்ஸிலிருந்து மெல்போர்ன் நோக்கிப் பயணித்த அவுஸ்திரேலியப் பெண்மணி யொருவர் உணவுப் பொட்டலத்தில் உயிர்ப்புழுக்கள் இருந்தது கண்டு கடும் அதிர்ச்சி யடைந்துள்ளார். கடந்த வியாழனன்று காண்ட்டாஸ் விமானத்தில் பயணித்த அப்பெண் இருக்கை விளக்கை ஒளிரச் செய்யாமலேயே தனக்கு அளிக்கப்பட்ட உலர்பழங்கள் பருப்புகள் கொண்ட உணவுப்பொட்டலத்தை பிரித்து உண்ணத் தொடங்கியுள்ளார்.
"முதலில் சுவை வித்தியாசமாக இருந்ததை உணர்ந்தேன்; உடனடியாக விளக்கை ஒளிரச் செய்து பார்த்தேன் பொட்டலம் முழுதும் லார்வா எனப்படும் கூட்டுப்புழுக்களைக் கண்டு அதிர்ந்தேன்" என்கிறார்

காப்பியடித்து ஆராய்ச்சி கட்டுரை எழுதிய ஹங்கேரி அதிபர் பதவி விலகினார்!

மற்றவரின் கருத்தை காப்பியடித்து ஆராய்ச்சி கட்டுரை எழுதிய சர்ச்சை தொடர்பாக ஹங்கேரி நாட்டு அதிபர் பால் ஸ்கிமித் பதவி விலகியுள்ளார். ஹங்கேரி அதிபராக கடந்த 2010ம் ஆண்டு பொறுப்பேற்றார் பால் ஸ்கிமித். இவர் கடந்த 92ம் ஆண்டு ஒலிம்பிக் விளையாட்டு குறித்த 200 பக்க ஆய்வு கட்டுரையை சமர்ப்பித்து டாக்டர் பட்டம் பெற்றார். ஆனால் இந்த ஆய்வு கட்டுரை மற்றவர் எழுதியது என கண்டுபிடிக்கப்பட்டு சர்ச்சையானது.
இதை தொடர்ந்து இவர் பதவி விலக வேண்டும் என எதிர்கட்சியினர் வற்புறுத்தினர். கடந்தவாரம் இவர் தான் பெற்ற பி.எச்.டி பட்டத்தை உதறினார். இந்நிலையில் இவர் பதவி விலகும் கோரிக்கை வலுத்ததால் நேற்று தனது பதவியை ராஜினாமா செய்தார்.

மகாத்மாகாந்தி பயன்படுத்திய கண்ணாடி ராட்டை கடிதங்கள் இங்கிலாந்தில் ஏலம்!

மகாத்மாகாந்தி பயன்படுத்திய கண்ணாடி ராட்டை கடிதங்கள் ஆகியவை இங்கிலாந்தில் வரும் 17ம் தேதி ஏலத்தில் விடப்படுகிறது. இங்கிலாந்தில் மேற்கு மிட்லாண்ட் மாகாணத்தில் உள்ள செராப்ஷையரில் வரும் 17ம் தேதி உலகின் மிக பழமையான அரிய பொருட்கள் ஏலத்தில் விடப்படுகின்றன. முல்லாக் நிறுவனம் நடத்தும் இந்த ஏலத்தில் மகாத்மா காந்தி பயன்படுத்திய பல அரிய பொருட்கள் இடம் பெறுகின்றன.
காந்தி பயன்படுத்திய வட்ட பிரேம் கண்ணாடி ராட்டை அவரது மரணத்தின் போது அந்த இடத்தில் இருந்து எடுக்கப்பட்ட மண் ரத்தம் தோய்ந்த புல் ரங்கூனில் இருந்த ராகவன் என்பவருக்கு காந்தி எழுதிய கடிதம் உட்பட

கொழும்புக்கு வந்த குயின் எலிசபெத்துக்கு சம்பிரதாய வரவேற்பு!

இலங்கைக்கு வந்த குயின் எலிசபெத்துக்கு கொழும்பு துறைமுகத்தில் வைத்து சம்பிரதாயபூர்வமாக அமோக வரவேற்பு வழங்கப்பட்டது.
குயின் எலிசபெத் என்பது பிரித்தானிய நிறுவனம் ஒன்றுக்கு சொந்தமான ஆடம்பர பயணிகள் கப்பல்.
கடந்த 30 ஆம் திகதி துறைமுகத்தை வந்தடைந்தது. 2000 இற்கும் அதிகமான பயணிகளை கொண்டு இருந்தது. இவர்கள் பிரிட்டன் ஆஸ்திரேலியா தென்னாபிரிக்கா பிரான்ஸ் யப்பான் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள்.

அமெரிக்க நிறுவனம் சாதனை : பறக்கும் கார் சோதனை வெற்றிகரம்!!

அமெரிக்க நிறுவனம் உருவாக்கியுள்ள பறக்கும் கார் சோதனை வெற்றிகரமாக முடிந்துள்ளது. அடுத்த ஆண்டுக்குள் இந்த கார் விற்பனைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவை சேர்ந்த பிரபல விமான தயாரிப்பு நிறுவனம் டெரபியூஜியா. மசாசூசட்ஸ் மாநிலம் வூபர்ன் நகரை தலைமையிடமாக கொண்டது. ரேஸ் கார்கள் சிறிய ரக விமானங்கள் விமான பாகங்கள் ஆகியவற்றை தயாரித்து வருகிறது.

Sunday, April 1, 2012

அமெரிக்க ஏரியில் பள்ளி குழந்தைகள் கண்டெடுத்த தங்க புதையல்

அமெரிக்கா கலிபோர்னியாவின் ஆக்லாந்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியின் 6-வது வகுப்பு மாணவர்கள் அங்குள்ள ஒரு ஏரியை சுத்தப் படுத்தினார்கள். அப்போது குப்பை கூளமாக கிடந்த இடத்தில் ஒரு பை கேட்பாரற்று அனாதையாக கிடந்தது. அதை 11 வயது மாணவி கண்டெடுத்தார்.
பின்னர் மாணவ- மாணவிகள் அந்த பேக்கை திறந்து பார்த்தனர். அதில் 100-க்கும் மேற்பட்ட தங்க நகைகள் வெளிநாட்டு பழங்கால நாணயங்கள் மற்றும் மோதிரங்கள் பிரேஸ்லெட் போன்றவை இருந்தன.

சீனாவில் புரட்சி பீதி: இணைய தளங்கள் மூடப்பட்டது

லிபியா எகிப்து சிரியா உள்ளிட்ட நாடுகளில் சர்வாதிகாரிகளின் அடக்கு முறையால் மக்கள் புரட்சி ஏற்பட்டது. அதை தொடர்ந்து கடுமையான சட்டதிட்டங்கள் கொண்ட சீனாவிலும் புரட்சி ஏற்படலாம் என்ற அச்சம் கம்யூனிஸ்டு ஆட்சியாளர்களிடம் ஏற்பட்டது. அவர்கள் எதிர்பார்த்த படியே அரசுக்கு எதிராக ஆங்காங்கே மக்கள் பிரசாரம் தொடங்கியது.
லிபியா எகிப்து சிரியா ஆகிய நாடுகளில் இணைய தளங்களின் மூலம் கருத்துக் களை பரிமாறி அதன் மூலம் மக்கள் ஒன்று திரண்டனர். அதேபோல் சீனாவிலும் தொடங்கியது.

அமெரிக்காவில் 3 பேருக்கு ரூ.3200 கோடி: லாட்டரியில் மெகா பரிசு

அமெரிக்காவில் உலகிலேயே அதிக பரிசு தொகை கொண்ட ரூ.3200 கோடி ஜாக்பாட் லாட்டரி வெளியிடப்பட்டது. அந்த பரிசு சீட்டு குலுக்கல் அட்லாண்டா நகரில் நேற்று முன்தினம் நடைபெற்றது. அதில் 2-4-23-38-46 என்ற நம்பர் உள்ள சீட்டுக்கு மெகா பரிசு கிடைத்தது. ஆனால் அந்த லாட்டரி சீட்டை வாங்கிய அதிர்ஷ்டசாலி யார் என தெரியாமல் இருந்தது. இந்த நிலையில் அந்த அதிர்ஷ்ட லாட்டரி சீட்டை 3 பேர் வாங்கியிருப்பது தெரியவந்துள்ளது.
மேரிலாண்ட் கன்னாஸ் அல்லது இல்லினாய்ஸ் நகரில் விற்பனை செய்திருக்க வேண்டும் என கருதப்படுகிறது.

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | cheap international calls