லட்சம் பூக்கள் பூத்ததைப்போல உணர்வுகள் தோன்றுகிறாதா? வயிற்றுக்குள் வண்ணத்துப்பூச்சி சிறகடிக்கிறதா? அப்படீன்னா வடிவேலு சொல்றதைப் போல உங்களுக்கும் லவ் மூடு ஸ்டார்ட் ஆயிடுச்சி என்கின்றனர் விஞ்ஞானிகள்.காதல் என்பது காதலர்களுக்கு பலதரப்பட்ட உணர்வுகளை ஏற்படுத்தினாலும் காதல் உணர்வுகளை வலி நிவாரணியைப் போல வேலை செய்யும் என்றும்இ போதைப் பொருளுக்கு சமமானது என்றும் விஞ்ஞானிகள் ஆய்வு மூலம் கண்டறிந்துள்ளனர்.
Thursday, March 1, 2012
மனிதர்களை கொல்லும் மர்ம தீவு சென்றவர்கள் திரும்பியதி்ல்லை
மனிதர்களை கொல்லும் மர்ம தீவு : திகிலூட்டும் உண்மைகண்ணுக்கு எட்டிய தூரம் வரை கடல் போல பரந்து விரிந்த ஏரி. ஆங்காங்கே மலைகள். பசுமையாக குட்டி குட்டியாக தீவுகள். சுற்றுலா பயணிகளை கவரும் சுவாரஸ்யம் ஏராளம் என்றாலும் அங்கு போகும் மனிதர்கள் திடீரென மாயமாகி விடுகிறார்கள் இந்த மர்ம தீவு பற்றிய விஷயங்கள் திகிலூட்டுகின்றன. உலகிலேயே மிகப்பெரிய பாலைவனக் கடல் என்று பெயர் பெற்ற துர்கானா ஏரி கென்யாவில் உள்ளது. ருடால்ப் ஏரி என்று ஒரு காலத்தில் அழைக்கப்பட்ட இந்த ஏரிக்கு பல்வேறு நதிகளில் இருந்து நீர் வருகிறது. இங்கு நிலவும் கடும் வெப்பத்தால் ஒரு பகுதி ஆவியாகிறது.
பாதுகாக்கப்பட வேண்டிய யாழ்ப்பாணத்தின் தனித்துவம் மிக்க சொத்து
மக்கள் மனதை கவரக்கூடியவை கலை வடிவங்கள். இந்த கலை வடிவங்கள் சமூகத்திலிருந்து தோன்றி சமூகத்திலேயே நிலைத்து நிற்பன.
சமூகத்தின் நிஜ விம்பத்தை பிரதிபலிப்பதாக அன்று கூத்துக்கள் காணப்பட்டன. அன்றாடம் வேலைப்பளுவை தாங்கிய மக்களுக்கு உற்சாகத்தைத் தூண்டி, உள்ளத்தில் புதையுண்டு கிடக்கும் வேட்கைகளுக்கு விடுதலை கொடுத்து அன்பையும் அனுதாபத்தையும் வெளிப்படுத்தி மக்களை மகிழ்விக்கும் பண்பைக் கொண்டவை கூத்துக் கலைகள். கிராமம் கிராமமாக அரங்கேற்றப்பட்ட கூத்துக்கலை கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து செல்லும் நிலை தோண்றியுள்ளது.
பச்சிலைப்பள்ளி... தொடர் அவலத்தின் ஒரு பதிவு
இடப்பெயர்வுகள், படுகொலைகள், இழப்புக்கள் ஒன்றும் தமிழ் மக்களுக்கு புதியவை இல்லை. அவர்களது வாழ்வியலில் ஒரு அங்கமானவை. எப்போதும் எதிர்பார்த்துக் காதிதிருப்பவை. இதன் மற்றொரு பதிவு தான் பச்சிலைப்பள்ளி மக்களின் அவலம். 2000.03.26 நள்ளிரவு பச்சிளைப்பள்ளி; துப்பாக்கி வேட்டுச்சத்தங்களால் அதிர்ந்தது. எறிகனையின் சிதறல்கள் தலைக்கு மேலே சீறிக்கொண்டு சென்றன. எங்கும் பரபரப்பு. எங்கும் அவலக்குரல். எங்கு ஓடுவது என்று தெரியாமல் கைகளில் அகப்பட்டவற்றை எடுத்துக் கொண்டு கால்போன போக்கில் நடந்த மக்களுக்கு தஞ்சமாக சாவகச்சேரி கிடைத்தது.
800 மேற்பட்ட குடும்பங்கள் நடைபயனமாய் தமது சொந்த மண்ணைவிட்டு சென்றனர். நீண்ட கால இடப்பெயர் வாழ்வு அம்மக்களது பொருளாதாரத்தை தலைகீழாக புரட்டிப் போட்டது.
Wednesday, February 29, 2012
இங்கிலாந்தின் முதலாவது போர் விமானத்தின் பெயர் யாழ்ப்பாணம்!
இங்கிலாந்தின் முதலாவது போர் விமானத்தின் பெயர் யாழ்ப்பாணம் என்பது ஆகும்
இப்போர் விமானத்தை உருவாக்கு கின்றமைக்கு யாழ்ப்பாண தமிழர்கள் வழங்கி இருந்த நிதிப் பங்களிப்புக் காரணமாகவே இப்பெயர் சூட்டப்பட்டு இருக்கின்றது. இப்போர் விமானம் குறித்த தகவல்கள் மிகவும் சுவாரஷியமானவை.
முன்னைய கால விமானங்கள் 100 குதிரை வலு என்ஜின்களுடன் இயங்கி வந்தன. இவை மரம் துணி வயர்கள் போன்றவற்றால் ஆக்கப்பட்டு இருந்தன.
முதலாம் உலகப் போர் இடம்பெற்ற காலம். எதிரிகளை வேவு பார்ப்பதற்கும் குண்டு வீசுவதற்கும் சிறந்த பொறியாக விமானம் கண்டு கொள்ளப்பட்டது. ஆனால் மேற்சொன்ன ரக விமானங்கள் அவற்றின் வடிவமைப்புக் காரணமாக எளிதில் தாக்குதல்களுக்கு உள்ளாகின.

Wednesday, February 22, 2012
யாழ் நகரில் வலம் வரும் பழைய மொடல் கார்கள்
என்னதான் புதிய கண்டுபிடிப்புக்கள் வந்தாலும் பழையவற்றிக்கு உள்ள மதிப்பே தனி தான். புதுமை விரும்பிகள் இருப்பதை போல பழமை விரும்பிகளும் இருக்கத்தான் செய்கிறார்கள். பழய உற்பத்திகளுக்கான பெறுமதி தனித்துவமானது. பழைய கார்களின் வரலாறுகளும் தனித்துவம் வாய்ந்தவை . கார்கள் இங்கிலாந்தில் தான் ஆரம்பத்தில் உற்பத்தியாகின.
அருங்காட்சியகங்களில் பார்வைக்கு வைக்கப்பட்டிருக்கும் கேம்பிறிச் அம்பாசெட் கார்கள் மானிஸ் மைனர் வகை கார்கள் இன்றும் யாழ் மண்ணில் பாவனையில் உள்ளது என்றால் உங்களால் நம்ப முடிகின்றதா? இந்த கார்களை வாய் பிளந்து பார்க்கும் ஒரு சில கூட்டத்தை பார்க்கும் போது வியப்பாக உள்ளது. இலங்கையின் தலைநகர் கொழும்பு உட்பட, ஏனைய மாவட்டங்களில் நகரங்களில் பழைய ரக கார்களுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டு விட்டது என்றே சொல்லலாம்.

Tuesday, February 21, 2012
காதல் முக்கியமா? உறவு முக்கியமா?
பள்ளிக்கு செல்லும் சின்ன ஞ் சிறு பெண் பிள்ளைகளுக்கு புரியாத விடயம் தான் காதல் அறியாத வயதில் ஒருவர் மீது வரும் ஈர்ப்பின் பிரகாரம் வரும் இனம் புரியாத காதல் படிப்பையையும் உறவுகளையும் பற்றி சிந்திக்க விடுவதில்லை
ஒரு சில காலங்களே அறிமுகமான ஒருவரை பற்றி முற்றாக தெரிந்து கொள்ளாமல் வருகின்ற காதல் பின்னர் அவர்களின் வாழ்ககையை சிக்லுக்க உளளாக்குகின்றது. இது தொடர்பாக யார் சொன்னாலும் காதல் வந்த பின் யாரும் கேட்டுக்கொள்வதில்லை.
பெற்றோர்கள் படிப்பதற்காய் பள்ளிக்கு அனுப்புகின்ற போது அவர்கள் கௌரவத்திற்கு பங்கம் ஏற்படுத்துவதாக இந்த காதல் அமைகின்றது. பெண்களுக்கு சுதந்திரம் இல்லை என்று சொல்லி சொல்லி சுதந்திரத்தை கொடுத்தால் இன்ற சுதந்திரத்தை சரியாக பயன்படுத்தாமல் காதல் என்ற பெயரில் மீண்டும் சிறை வாசம் செல்கின்றனர்.
Monday, February 6, 2012
நினைவுகளை மீட்டுத் தந்த யூனியனின் பள்ளிக்கால நினைவுகள்
பள்ளிக்கால நினைவுகள் என்றும் எல்லோர் மனதிலும் துள்ளிக் குதிக்கும் கனாக்கானும் காலங்கள். இன்று பள்ளிச் சிறுவர்களை பார்க்கும் போது எம் பாடசாலை நினைவுகளுக்கு சென்று வருவது சந்தோஷத்தை ஏற்படுத்தும். தினம் தினம் புதிய அனுபவங்ககள் இன்று நாம் திரும்பிச் செல்ல முடியாத அற்புத நாட்கள். என் பள்ளிக்கால நினைவுகள் இன்று உங்கள் பள்ளிக்கால நினைவுகளுக்கு உங்களை அழைத்து செல்லும் என நினைக்கின்றேன்.
ஆம் இன்று தான் எம் பாடசாலையின் வருடாந்த இல்ல மெய்வல்லனர் போட்டிக்கான தெரிவுக்கூட்டம். என்னங்க எந்தப் பாடசாலை என்று சொல்லலை என்று நினைக்கிறீங்க.
ஆம் இன்று தான் எம் பாடசாலையின் வருடாந்த இல்ல மெய்வல்லனர் போட்டிக்கான தெரிவுக்கூட்டம். என்னங்க எந்தப் பாடசாலை என்று சொல்லலை என்று நினைக்கிறீங்க.
9:00 AM
abimanju