Monday, January 23, 2012

பறவைகள் தங்குவதற்கு தண்ணீரில் மிதக்கும் பூங்கா

நகர பகுதிகளில் போதுமான மரங்கள் இல்லாததால் பறவைகள் வசிக்க முடியாமல் தவிக்கின்றன. இதற்காக தண்ணீரில் மிதக்கும் பூங்காக்களை அமைக்க அமெரிக்கா, இங்கிலாந்தில் முடிவு செய்துள்ளனர்.
இந்த பூங்காக்களில் மரங்களும் பறவைகள் வசிப்பதற்கு வசதியாக இயற்கை சூழ்நிலைகளும் ஏற்படுத்தப்படும். நெதர்லாந்தை சேர்ந்த வாட்டர் ஸ்டுடியோ என்ற கட்டிட வடிவமைப்பு நிறுவனம் இந்த மிதக்கும் பூங்கா மாதிரியை வடிவமைத்து உள்ளது.
மேலும் பெரிய நிறுவனங்களிடம் இருந்து நன்கொடைகளை பெற்று பூங்காவை அமைக்க உள்ளனர். முதல் பூங்காவை எதிர்வரும் 2014 -ம் ஆண்டு முடிக்க உள்ளனர். கடல், ஆறு, ஏரி உள்ளிட்ட அனைத்து நீர் நிலைகளிலும் இதை அமைக்க திட்டமிட்டு இருக்கிறார்கள்.

தினமும் இலங்கையில் 20 இணையத்தளங்கள் பதியப்படுகின்றன

எல் கே டொமென் பெயரில் பதிவு செய்யப்பட்ட இணையத் தளங்களின் எண்ணிக்கை பத்தாயிரத்தை கடந்துள்ள நிலையில் நாளாந்தம் குறைந்த பட்சம் இருபது இணையத்தளங்கள் புதிதாக பதிவு செய்யப்படுகின்றன. எனவும் இதற்கான கேள்வி அதிகரித்துள்ளது டொமேன் பதிவாளர் கிஹான் டயஸ் எனவும் தெரிவித்தார். இலங்கை பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் காரணமாக இந்த நிலமை ஏற்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.நாட்டின் அனைத்துப்பகுதிகளிலும் இருந்து இணையத்தளங்களை பதிவு செய்வதற்கான விண்ணப்பங்கள் கிடைக்கின்றன என அவர் தெரிவித்தார்.

Saturday, January 21, 2012

டெல்லியை முற்றாக மூடிய பனி... 350 விமானங்கள் தாமதம்!

:புதுடெல்லியில் கடுமையான பனிமூட்டம் நிலவுவதால் 350 விமானங்கள் தாமதமாக வந்தன. இதனால் பயணிகள் பெரிதும் அவதிக்கு உள்ளாயினர். டெல்லி முழுவதுமே இன்று அதிகாலை பனிமூட்டமாக காணப்பட்டது. எதிரில் வரும் வாகனங்கள் தெரியாத அளவுக்கு பனி மூட்டம் நிலவியதால் வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமத்திற்குள்ளாயினர். பனி மூட்டத்தால் இந்திரா காந்தி பன்னாட்டு விமான நிலையத்தில் விமானங்கள் தரையிறங்கும் ஓடுதளம் சரியாக தெரியவில்லை இதனால் விமானங்கள் வானிலேயே சுற்றிக் கொண்டிருந்தன. மேலும் சில விமானங்கள் அருகில் உள்ள விமான நிலையங்களில் தரை இறங்கின. மேலும் பனி மூட்டத்தால் சாலை போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டது. பனிமூட்டம் காரணமாக 28 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

Friday, January 20, 2012

தொடர் தோல்விக்கு பின்னர் முதல் வெற்றியை பதிவு செய்தது இலங்கை

Thursday, January 19, 2012

முட்டையுடன் பேசும் கோழிகள்: விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு

கோழி எப்பொழுது முட்டையிடும் என்று காத்திருந்து, முட்டையிட்டதும் உடனே அதனை எடுத்துக் கொண்டு போய் விடுகிறோம். ஆனால் தனது முட்டையோடு உரையாடிக் கொண்டிருக்கும் கோழியின் மனது அப்போது எப்படித் தவிக்கும் என்று நாம் கண்டு கொள்வதில்லை.
ஆமாம் முட்டை வெளிவந்து 48 மணி நேரம் வரை அதனோடு தொடர்பு வைத்திக்கொண்டிருக்கிறது கோழி. பதினொரு வகை ஒலிக்குறிப்புகள் வல்லுனர்களால் பதிவு செய்யப்பட்டு, மேற்படி தகவலை விஞ்ஞானிகள் கண்டு பிடித்திருக்கின்றனர்.
தாய்க் கோழி ‘ப்ளாக்’ என்ற பாச ஒலியை எழுப்புவதாகவும், கரு முட்டை ‘பீப்’ என்ற வாஞ்சை ஒலியை பதிலாக எழுப்புவதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.
48 மணி நேரம்வரை நீடிக்கும் இந்த உறவுப்பரிமாற்றம் பின்னர் நின்று கோழியும் முட்டையும் வேறாகி விடுகின்றன என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

பெண்ணின் மனசு கடலின் ஆழத்திற்க்கு சமமாகுமா !!சுவாரஷ்யமான தகவல்

கடலின் ஆழத்தில் உள்ளதைக் கூட கண்டுவிடலாம், பெண்ணின் மன ஆழத்தில் புதைந்து கிடப்பதை யாராலும் கண்டுபிடிக்க முடியாது என்று கவிஞர்களும், உளவியல் நிபுணர்களும் தெரிவித்துள்ளனர். ஆனால் அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல மனோதத்துவ ஆய்வாளர் பேகோ ஆய்வு செய்துள்ளார். எண்ணற்ற பெண்களிடம் பேசியதன் அடிப்படையில் அவர்களின் மனதிற்குள் புதைத்து வைத்திருந்த ரகசியங்களை வெளிக் கொண்டு வந்துள்ளார்.
பெண்கள் எதைத்தான் விரும்புகிறார்கள்? அதற்கான காரணங்கள் என்ன என்பதைப்பற்றி பேகோ மிகப்பெரிய பட்டியலிட்டுள்ளார். அவை உங்களுக்கு:
தனித்திறன் அவசியம்

இணையத்தளங்களுக்கான ஒழுக்கக்கோவையை வெளியிட்டது ஊடகத்துறை அமைச்சு!

:தகவல் ஊடகத்துறை அமைச்சு 27 இணையத்தளங்களுக்கு மாத்திரமே செயற்படுவதற்கான அனுமதிப்பத்திரத்தை இது வரையில் வழங்கியிருக்கிற தென்று தகவல் ஊடகத்துறை அமைச்சின் செயலாளர் டபிள்யு.பி. கணேகல தெரிவித்தார். செய்திகளை வெளியிடும் இணையத்தளங்கள் கடைப்பிடிக்க வேண்டிய ஒழுக்க நெறியொன்றையும் அமைச்சு இப்போது வெளியிட்டிருக்கிறதென்றும், இந்த ஒழுக்க நெறிக்கு அமைய பதிவு செய்யப்பட்ட இணையத்தளங்கள் செயற்படுவதற்கு தமது அமைச்சு ஆதரவளிக்கும் என்றும் அவர் கூறினார். இணையத்தளங்களுக்கென வெளியிடப்பட்டுள்ள ஒழுக்க நெறியின் முக்கிய அம்சங்கள் சிலவற்றை இங்கே தருகின்றோம்.

Wednesday, January 18, 2012

ஆகக் கூடிய வாழ்க்கைச் செலவு கொண்ட மாவட்டமாக யாழ்ப்பாணம்..

     இலங்கையில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம், தனிநபர் ஒருவர் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்ய குறைந்த பட்சம் 3,307 ரூபாவினை செலவு செய்ய வேண்டி இருந்தது. இலங்கையில் ஆகக் கூடிய வாழ்க்கைச் செலவு கொண்ட மாவட்டமாக யாழ்ப்பாணம் காணப்படுவதாக குடிசன மதிப்பு புள்ளிவிபரத் திணைக்களம் வெளியிட்டுள்ள உத்தியோகபூர்வ தரவுகள் காட்டுகின்றன.
எனினும், இது மாவட்டங்களைப் பொறுத்து வேறுபட்டதுடன், தனிநபர் வாழ்க்கைச் செலவு ஆகக் கூடிய மாவட்டமாக யாழ்ப்பாணம் (ரூபா.3,555) காணப்படுவதனை புள்ளிவிபரத் தரவுகள் காட்டுகின்றன.

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | cheap international calls