Monday, January 2, 2012

ராக்கெட் விடுறவங்களுக்கு கொடுக்கிற நோஸ்கட் என்பது இதுதானோ ?

 காதலை உலகம் எப்பிடியெல்லாம் கொண்டாடுகிறது.பலர் தம் காதலை வெளிப்படுத்த தெரியாமல் பெரும் அவஸ்தைப் படுகிறார்கள். சிலர் காதலை வெளிப்படுத்தி காதலில் வென்றும் இருக்கிறார்கள். சிலர் தோற்றும் இருக்கிறார்கள்.இங்கும் ஒருத்தன் எவ்வாறு தன் காதலை எவ்வாறு வெளிப்படுத்துகிறான் என்றுதான் பாருங்கள். இது ஒரு லெட்டர் வடிவிலான காதல் காமடி.கொஞ்சம் படிச்சுத்தான் பாருங்களேன்.
ஒரு மாணவன் லவ் லெட்டர் எழுதுகிறான்......
அன்பே abi
கீழே நான் கொடுத்திருக்கிற எல்லா கேள்விகளுக்கும் உனக்கு சரியென்று தோன்றும் பதிலை தெரிவு செய்.

உறுதியுடன் போராடிய மறக்கடிக்கப்பட்ட மாவீரன் திப்புசுல்தான்

  
திப்பு சுல்தான் 
1799 மே மாதம் நான்காம் தேதி சாதாரண சிப்பாய் போல் ஆங்கிலேய அந்நிய படைக்கெதிராக களமிறங்கி தனது உடலில் கடைசி மூச்சு நிற்கும் வரை உறுதியுடன் போராடி உயிர் தியாகியானார் மாவீரன் திப்பு. அந்த வீரத் திருமகனின் வரலாற்றை நினைவு கூறுவது இந்திய தேசத்தின் விடுதலை வரலாற்றையே நினைவு கூறுவதற்கு சமமாகும். கிழக்கிந்தியக் கம்பெனியின் குலை நடுக்கம்’ - திப்புசுல்தானின் மைசூர் அரசுக்கு அன்று லண்டன் பத்திரிகைகள் வைத்த பெயர் இதுவாகும். இந்தியாவில் ஆங்கிலேயர்களின் உள்ளங்களில் பீதியை விதைத்த தீரர்தான் திப்பு. அதனால்தான் திப்பு சுல்தான் தனது இன்னுயிரை தியாகம் செய்த வேளையில் அவரின் வீரமரணத்தைக் கேள்விப்பட்டு மனம் மகிழ்ந்த ஆங்கிலேய ஜெனரல் ஹாரிஸ் இவ்வாறு கூறினான்: ‘இன்று முதல் இந்தியா நம்முடையது’ என்று.

யார் இந்த கிறிஸ்மஸ் தாத்தா

  

கிறிஸ்மஸ் என்றாலே முதலில் கண்ணுக்கு தெரிவது கிறிஸ்மஸ் தாத்தாதான்.யார் இந்த கிறிஸ்மஸ் தாத்தா குழந்தைகளக்கு பிரியமான இவரை சற்று ஆராய்வோம். துருக்கி நாட்டில் மிரா நகரில் 04ம் நுாற்றாண்டில் வாழ்ந்தவர் புனிதநிக்லஸ்   இவர் கிறிஸ்தவ ஆயராவார்.மனித நேயத்தின் சின்னமாக விளங்கிய இவர் ஏழை எளியவர்க்கு உதவுவதையே தன் குறிக்கோளாக கொண்டிருந்தார்.இவர் சிறு வயது முதலே தபத்திலும் ஒழுக்கத்திலும் சிறந்து விளங்கினார்.புதன் மற்றும் வெள்ளி கிழமைகளில் மாத்திரம் உணவு உண்டார்.வறுமையின் வீரியத்தையும் மக்கள் படும் துன்பத்தையும் நேரில் கண்ட அனுபவமே இவரை மனித நேயவாதியாக மாற்றியது.

ரஸ்யர்கள் எதற்காக ஒரு பெட்டைநாயை முதலில் விண்வெளிக்கு அனுப்பினார்கள்?

  அமெரிக்காவுக்கும் ரஸ்யாவுக்கும் இடையில் பனிப்போர் நடந்திட்டிருந்த காலமது. பொதுவாக ரஸ்யாவின் அரசவிடையங்கள் யாவும் மிகவும் ரகசியமாகப் பேணப்படும். ஆனால் அமெரிக்காவின் விடையங்கள் பகிரங்கமானது அல்ல எனினும் அவர்களின் அடுத்த கட்ட நடவடிக்கைகளை ஓரளவு ஊகிக்கக் கூடியதாக இருந்தது.இந்தக் காலகட்டத்தில் தான் அமெரிக்காவுக்கும் ரஸ்யாவுக்கும் இடையில் (அப்போது சோவியத் ரஸ்யா) யார் முதலாவதாக விண்வெளிக்கு ரொக்கெட் அனுப்புவது என்ற கடும் போட்டி நிலவியது.இதில் முந்திக்கொண்ட ரஸ்யர்கள் முதன் முதலாக  1957 ஒக்டோபர் 4 ல் லைக்கா என்ற பெட்டை நாயை விண்வெளிக்கு அனுப்பி வெற்றிகண்டனர்.

Friday, December 30, 2011

குளிர் நிலவில் ஊட்டிப்பயணம்

மாற்றங்களை உணரவும் பழகிக்கொள்ளவும் தெரிந்தவர்கள் மனிதர்கள். கால மாற்றத்திற்கு ஏற்ப பச்சோந்தியாய் மாறத் தெரிந்தவர்கள். அப்படி பச்சோந்தியாய் மாறப் பழகிக் கொள்ளும் புதிய அனுபவம்.
கொட்டும் மழையிலும் கடும் குளிரிலும் வாழ இசைவாக்கிக் கொண்டோம் மக்களின் வாழ்வதற்கு ஏற்ற காலநிலைப்பிரதேசத்தில் வாழ்ந்த நாம் இந்தியாவின் குளிர் நிறைந்த பிரதேசமான நீலகிரி மாவட்டம் ஊட்டிப்பகுதிக்கு சென்றோம். மலை உச்சி நோக்கி எமது பயனம் அமைந்திருந்தது. வளைந்து நெளியும் பாதை நடுவே பயனித்தோம். குளிர் காற்று எங்களை மெதுவாக வருடியது. பேரூந்து ஜன்னல் கதவுகள் அடைக்கப்பட்டன மூடி அடைக்கப்பட்ட பேரூந்தில் நம் பயனம் இருந்தது. காற்றிற்கு ஏது வேலி என்பது போல குளிர் காற்று மீண்டும் எங்களை வருடியது

Monday, December 19, 2011

பூமியில் பார்த்து ரசிக்ககூடிய ஏழு இயற்கை அதிசயங்கள் — Amazing Nature


இயற்கையின் அற்புதமான படைப்புகள் 

1. அமேசன் மழைக்காடுகள்
2. ஆல்ப்ஸ்

3. மத்திய தரை கடல்
4. ஏஞ்சல் நீர்வீழ்ச்சி
5. சஹாரா பாலைவனம்
6. கிரீன்லாந்தின் பனியாறுகள்
7. ஆப்பிரிக்க சமவெளிகள்

1. அமேசன் மழைக்காடுகள்
Amazon Rainforest
அமேசன் மழைக்காடுகள் பிரேசிலில் அமைந்துள்ளது, இது உங்களை பயங்கர கனவுகளுக்கு அப்பால் உங்கள் கவர்வது இழுக்க கூடியது. மனிதர்களின் காலனியாதிக்கம் இல்லாத இடமாக உள்ளது.உலகின் மிக பெரிய வெப்பமண்டல மழைக்காடுகள், அது வடக்கு முழுவதும் பரவியிருக்கிறது. வலிமைமிக்க அமேசான் பெரிய ஆறுகளில் உன்னதமான மரங்களையும் கொண்டுள்ளது. உலகின் பகுதியில் மட்டும் 3% உலகின் தாவர மற்றும் விலங்கு இனங்கள் 75% இங்கு தான் உள்ளது.

Sunday, December 18, 2011

செத்துயிர் போயினும் தழிழுக்கு புத்துயிர் கொடுடா தழிழா..........

தாய்மொழியும் தாய் நாடும் இருவிழி என்பதை
நாய் தழிழா நீ இன்னும் அறியாதது சரியோ?
பேய் போலதனை சுமந்தாடுதல் முறையோ?
தேன் சொட்டும் தித்திக்கும் தழிழ் பெயர் பலவிருக்க
சீழ் வொட்டி சிதறுகின்ன சிறுபெயர்கள் உனக்கெதற்கு..
வாய் மணக்கும் தழிழ் மொழியில் அழகுப்பெயர் பலவிருக்க
பால்பட்ட பொருளுரைக்கும் பெயர்சூட்டும் உத்தமர்க்கு நாவெதற்கு....
தழிழ் மொழி நெடுங்கணக்கில் எழுத்தவை போதாதென்று..
உயர் திணையோடு அஃறிணைக்கும்..
இஸ் என்றும் புஸ் என்றும் காற்றுதும் உச்சரிப்பில்
என்னடா பெயர் சூட்டுகிறாய்....

Saturday, December 17, 2011

பேசுதற்கெளிய பண்டம் மட்டுமா பெண்ணியம்?


சூரியன் உதிப்பதைப்போல், காற்று வீசுவதைப்போல் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கும் செயல் என்று கம்யூனிசத்தின் மீதான அவதூறுகளைக் கூறலாம். அந்த அளவுக்கு குப்பை வீசியே மறைத்துவிடும் எத்தனத்தில் விதவிதமான புனைவுகளும், பொருளற்ற பொய்களும், பொருந்தா விளக்கங்களும் நாளும் பொழிந்து கொண்டே இருக்கின்றன. இது போன்ற அவதூறுகளுக்கு விளக்கமளிக்க முனைந்தால், வேறு எதையும் செய்யமுடியாத அளவுக்கு கம்யூனிஸ்டுகளின் நேரம் அவர்களுடையதாக இருக்காது. அதேநேரம் அத்தனை அவதூறுகளுக்கும் மறுக்கவியலா முறையில் தகர்ப்புகளும், தரவுகளும் தரப்பட்டிருக்கின்றன. என்றாலும் அவதூறுகளுக்கான தேவை குறைவதே இல்லை. ஏனென்றால் அவதூறுகள் விமர்சனத்திலிருந்தோ, ஆய்விலிருந்தோ கிளைப்பதில்லை. மாறாக கம்யூனிச எதிர்ப்பிலேயே தம்முடைய இருப்பு இருக்கிறது எனும் நிலையிலிருந்து கிளைக்கிறது. அதனாலேயே அவதூறுகள் மீண்டும் மீண்டும், மீண்டும் மீண்டும் கொட்டப்படுகின்றன.

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | cheap international calls