Friday, December 2, 2011

300வருடங்கள் பழமை வாய்ந்த உல்லாச விடுதி மக்களின் பார்வைக்கு

300வருடங்கள் பழமை வாய்ந்த இங்கிலாந்து மன்னனின் உல்லாச விடுதி மக்கள் பார்வைக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்தின் எட்டாவது மன்னனான ஹென்றியே இந்த உல்லாச மாளிகைக்கு சொந்தக்காரர் ஹென்றி மன்னனால் கட்டப்பட்ட இது முன் எப்போதும் காணப்படாத மிக அபூர்வமான கலை அம்சங்களைக் கொண்டதாக காணப்படுவதாக கட்டிடக் கலைஞர்கள் கூறுகின்றனர்.
இந்த உல்லாச மாளிகை 150 வருடங்களுக்குப் பின்னர் அளிக்கப்பட்டது. இதன் பின்னர் 50வருடகால ஆய்வுக்குப் பின்னர் மீட்கப்படடது. இதனை மீண்டும் புணருத்தாபனம் செய்ய தமக்கு 1250 மணிநேரம் சென்றதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். இது 2.2மீற்றர் நீளமும் 1.2மீற்றர் அகலமும் கொண்டது. கவர்ச்சியான வண்ணப் பலகைகளாலும் நுண்ணிய அலங்காரங்களால் மெருகூட்டப்பட்ட பளிங்கு பிலாஸ்டிக் பொருட்களாலும் பார்ப்பவர் உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் வடிவில் அமைக்கப்பட்டிருக்கிறது. இவ்வுல்லாச மாளிகையின் சூழலில் அமைந்துள்ள சுவர்கள் உரோம அரசர்களின் சின்னங்களாலும் பல கடவுகளின் உருவங்களும் பொறிக்கப்பட்டிருக்கின்றன.


0 comments:

Post a Comment

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | cheap international calls